districts

நாளை மின்தடை

தாராபுரம், டிச. 4- மூலனூர், கொளத்துப்பாளையம் மற்றும் கன்னிவாடி பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறி விக்கப்பட்டுள்ளது. தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு மின்சார வாரியம், பல்லடம் மின்பகிர்மான வட்டம் மூலனூர், கொளத்துப்பாளையம், கன்னிவாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (செவ்வாய்கிழமை) 6 ஆம் தேதி காலை 9 மணி முதல்  மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.  மின்தடை செய்யப்பட்ட பகுதிகள்: மூலனூர் 110 / 33-22 கேவி துணை மின்நிலையத்திற்குட்பட்ட  மூலனூர், அக்கரை பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிகாட்டுவலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, பெர மியம், லக்கமநாயக்கன்பட்டி, வடுகபட்டி, வெள்ள வாவிபுதூர், கிளாங்குண்டல் மற்றும் இதுசார்ந்த பகுதி களும், கொளத்துப்பாளையம் 110 / 22 கேவி துணை மின்நி லையத்திற்குட்பட்ட  உப்புத்துறைபாளையம், கொளிஞ் சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டா ரவலசு, மணக்கடவு, கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமுர்த்திநகர், கொளத் துப்பாளையம், ராமபட்டிணம், நகர பகுதிகளான மாரியம் மன்கோவில், அனுமந்தாபுரம், சின்னக்கடைவீதி மற்றும் இது சார்ந்த பகுதிகள். கன்னிவாடி 33-22  துணை மின்நிலை யத்திற்குட்பட்ட கன்னிவாடி, மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆயிக்கவுண்டன்பாளையம், நஞ்சத்தலையூர், புஞ்சை தலையூர், மணலூர், பெருமாள்வலசு இது சார்ந்த பகுதிகளில் மின்தடை இருக்கும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.