districts

img

மேம்பால பணிகளில் அலட்சியம் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

கோவை, மார்ச் 26- பெரியநாயக்கன்பாளையத் தில் நடைபெறும் மேம்பாலப் பணிகள் வெகு அலட்சியமாக நடை பெறுவதால், வாகன ஓட்டிகள் நாள் தோறும் அச்சத்துடனே பயணிக் கும் சூழல் ஏற்பட்டுள்ளது. உதகை செல்லும் பிரதான சாலையான கோவை-மேட்டுப் பாளையம் சாலையில் பெரிய நாயக்கன்பாளையத்தில் உயர் மட்ட மேம்பாலப்பணிகள் நடை பெற்று வருகிறது. எல்.எம்.டபிள்யூ  அருகே துவங்கி சாமிசெட்டி பாளையம் பிரிவு வரை 1.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் அமைய உள்ளது. ரூ.115 கோடி மதிப்பீட்டில் மேம்பாலத்தின் கட்டு மான பணிகள் நடைபெற்று வரு கிறது.  கோவை மாவட்டத்தில் போக்கு வரத்து நெரிசல் மிகுந்த  சாலை களில் மேட்டுப்பாளையம் சாலை யில் உள்ள பெரிய நாயக்கன் பாளையம் மற்றும் ஜி.என்.மில்ஸ்  சந்திப்பு பகுதிகள் முக்கியமான தாகும். இந்த சாலைகளின் வழி யாக  தினமும் ஏராளமான வாக னங்கள் சென்று வருகின்றனர்.   இதனையடுத்து, ஜி.என்.மில்ஸ்  சந்திப்பில் ரூ.41.88 கோடி மதிப்பில் 658 மீட்டர் தூரம் நீளம்,  17.20 மீட்டர் அகலத்தில்,14 தூண்களைக்  கொண்டு 4 வழித் தட போக்குவரத்து கொண்ட மேம்பாலம் கட்ட முடிவு செய்யப் பட்டது. இதில், பெரியநாயக்கன் பாளையம் சந்திப்பில் கடந்த  2020  ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி யும், ஜி.என்.மில்ஸ்  சந்திப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 6  ஆம் தேதியும்  மேம்பாலம் கட்டும்  பணி தொடங்கப்பட்டது. தற்போது 2  இடங்களிலும் மேம்பாலப் பணிகள்  நடைபெற்று வருகிறது. 

இந்த மேம்பாலப்பணிகள் ஆரம்பித்த நாளில் இருந்தே பல  பிரச்சனைகள் உருவாகின. நாள் தோறும் உதகை நோக்கி செல்லும்  ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியே பிரதான வழியாக  இருக்கிறது. மேலும், எல்எம் டபுள்யூ, பிரிக்கால். டெக்ஸ்மோ உள்ளிட்ட மிகப்பெரிய தொழிற் சாலைகளும், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அதிகம் உள்ள இந்த  பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்குகையில், முறை யான மாற்று பாதை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், அப்படியான பாதைகள் உருவாக் கப்படவில்லை, மாறாக ஊருக்குள்  சந்து சந்தாக செல்லும் வகையில் மாற்று பாதை ஏற்படுத்தப்பட்டது. இதற்கிடையில், இப்பகுதியில் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகளும் நடைபெற்றது. இதுபோதாதென்று மேம்பாலப் பணிகளோ, ஆமை வேகத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து அரசியல் இயக்கங்கள் வலுவான கண்டன குரல்களை எழுப்பினர். இதனையடுத்து தற் போது விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்றாலும், அலட்சியமான பணிகளை முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், எல்.எம்.டபிள்யூ பிரிவு  பகுதியில் இருந்து சாமிசெட்டி பாளையம் வரை தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் தூண்களுக்கு இடையே கான்கீரிட் அமைக்கும் பணி நடந்து  வருகிறது. இதன் ஒரு பகுதியாக  எல்.எம்.டபிள்யூ பகுதியில் இறங்கு தளம், ஏறு தளம் அமைக்கும் பணி  நடைபெறுகிறது. இதற்காக சாலை யில் நடுவே குழிகள் பல அடி ஆழம்  தோண்டப்படுகிறது. ஆனால், அந்த  குழிகளுக்குள் வாகனங்கள் விழா மல் இருக்க முன் பகுதியில் பேரி கார்டு, ரிப்ளெக்டர் போன்றவைகள் வைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரம் மற்றும் மழை காலங் களில் பெரும் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.  இதனிடையே தூண்கள் அமைக்க தோண்டப்பட்ட சாலை கள் சில இடங்களில் போடப்பட் டுள்ளது. சில இடங்களில் போடப் படாமல் உள்ளது. அதே போல்  மேம்பால பணிகளும் அலட்சிய மாக நடைபெற்று வருகிறது என  மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மேம்பால பணிகள்  காரணமாக பெரியநாயக்கன் பாளையம் பகுதி வழியாக மேட்டுப் பாளையம் செல்வதற்கும், மேட்டுப் பாளையத்தில் இருந்து வரும் போது ஜோதிபுரம் வழியாக கோவை செல்வதற்கும் மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுவழி பாதையில் தேவை யான அளவு அறிவிப்பு பலகைகள்  போன்ற ஏற்பாடுகள் செய்யப்ப டாமல் வாகனங்கள் திருப்பி விடப் படுகின்றன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள்  கூறுகையில், ‘‘பெரியநாயக்கன் பாளையம் மேம்பால பணிகள் தொடர்ந்து மந்த கதியில் நடை பெற்று வருகிறது. ஊர்களுக்குள் செல்லும் மாற்றுப்பாதைகளில் பல  இடங்களில் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும் போது புழுதி காற்று பறக் கிறது. மழை நேரங்களில் குண்டும், குழியுமான சாலைகளில்  தண்ணீர் தேங்கி வாகனங்கள் அதில் சிக்கி விபத்து ஏற்படு கிறது. மேம்பால பணிகள் மேற் கொள்ளும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக் கைகள் எதுவும் மேற்கொள்ள வில்லை. உயர் அதிகாரிகள் ஆய்வு  மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இரவு நேரங் களில் தற்போது மேம்பால பணிக் காக தோண்டப்படும் குழிக ளுக்குள் வாகனங்கள் விழும் நிலை  உள்ளது’’ என்றனர்.  இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகை யில், ‘‘பெரியநாயக்கன் பாளையம் மேம்பால பணிகள் வேக மாக நடைபெற்று வருகிறது.  விரை வில் சர்வீஸ் சாலைகள் உடனடி யாக போடப்படும். தற்போதைக்கு ஆங்காங்கே பேரிகார்டு வைக்க ஏற்பாடு செய்துள்ளோம். ஏப்ரல்  மாதம் இறுத்திக்குள் மேம்பால  பணிகளை முடிக்க திட்டமிட்டுள் ளோம். தேவையான அளவு எச்ச ரிக்கை பலகைகள் வைக்கப்பட் டுள்ளன,’’ என்றார்.