districts

img

பனியன் சந்தையில் தீ விபத்து - 50க்கும் மேற்பட்ட கடைகள் சேதம்

திருப்பூர், ஜூன் 24- திருப்பூர் பனியன் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேதமானது.  தீ விபத்து நடந்த இடத் தில் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்து,  வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உடனடியாக கடைகள் அமைக் கப்படும் என உறுதியளித்தார்.   திருப்பூர், ராயபுரம் பகுதியில் காதர்  பேட்டை எனும் பனியன் சந்தை செயல்பட்டு  வருகிறது.  இங்கு பனியன் பஜார் எனப்படும்  பனியன் சந்தை மையப் பகுதியில் ஏற்பட்ட  தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள்  எரிந்து சேதமாகின. தற்காலிக தடுப்புகள்  மற்றும் தகரம் மேற்கூடை அமைக்கப்பட் டிருந்ததால், தீ மள மளவென பிடித்து கடை  முழுவதும் பற்றியதால் கடையில் வைக்கப் பட்டிருந்த பின்னலாடை துணிகள் அனைத்தும் தீயில் எறிந்து சேதமாயின. தீ  எரிவதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் தீய ணைப்புத்துறையினருக்கு தகவல் அளித் தனர். திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாக னங்கள் கொண்டு வரப்பட்டு, 2 மணி நேரத் திற்கு மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  இதனைதொடர்ந்து இரவு மாவட்ட ஆட்சியர்,  சட்டமன்ற உறுப்பினர், மாநக ராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் சம்பவ  இடத்திற்கு வந்தனர்.

இந்நிலையில், சனியன்று மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறுகையில், வெள்ளியன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 50 கடைகள் மூன்று வீடுகள் 4 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்திருப்பதாகவும், தோராயமாக அதன் மதிப்பு மூன்று கோடி ரூபாய் என தெரிய வந்திருப்பதாகவும், வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நாளைய தினமே மீண்டும் இவ்விடத்தில் கடைகள் அமைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டும். சம்பவம் நிகழ்ந்த உடனே  சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர்,  மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பணிகளை துரிதப் படுத்தியதன் காரணமாக உயிர் சேதமோ, காயமோ இல்லை என தெரிவித்தார். மேலும்,  வணிகர்களுக்கான இழப்பீடு குறித்து மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுடன் கலந்தா லோசித்து நடவடிக்கை எடுப்பார் என்றார்.  இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கூறுகையில், தமிழக  அரசால் என்ன இழப்பீடு வழங்க முடியுமோ அதை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து முயற்சி  செய்யும் எனவும், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனிப்பட்ட முறையில் அவர் களுக்கு என்னால் முடிந்த உதவி செய்வேன்  என்றார்.  முன்னதாக, இந்த தீ விபத்தில் பாதிக்கப் பட்ட வணிகர்களுக்கு, தமிழக அரசு உரிய  இழப்பீடை தர வேண்டும் என சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத் தனர்.