திருப்பூர், டிச.29- திருப்பூர் நெருப்பெரிச்சல் வரு வாய் கிராமத்திற்குட்பட்ட பகுதி களில் பத்துக்கும் மேற்பட்ட மாடு களும், நான்கு ஆடுகளும் கோமாரி நோய் தாக்கி இறந்துள்ளதாக விவ சாயிகள் வேதனை தெரிவித்துள்ள னர். திருப்பூர் வடக்கு தாலுகா நெருப்பெரிச்சல் வருவாய் கிராமத் துக்கு உட்பட்டது வாவிபாளையம், நெருப்பெரிச்சல், கூலிபாளையம், பாப்பநாயக்கன் ஊர், சேடர்பாளை யம், நெட்டகட்டிபாளையம் ஆகிய கிராமங்கள். மேற்கண்ட பகுதிக ளில் 400-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வார காலமாக வாவிபாளையம், கூலி பாளையம், கணக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் பத்துக்கு மேற் பட்ட மாடுகளும், நான்கு ஆடுகள் வாய் சப்பை நோய் என்கிற கோமாரி நோய் தாக்கி இறந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.வாவிபாளையம் ஓட்டபுளியன் தோட்டம் விவசாயி வெங்கடாசலத் துக்கு சொந்தமான 3 மாடுகளும், கீதா என்பவருக்கு சொந்தமான 2 மாடுகளும், ராமசாமி என்பவருக்கு சொந்தமான ஒரு மாடும், நத்தகாடு உதயசூரியன் என்பவருக்கு சொந்த மான 4 ஆடுகளும், கூலிபாளையம் ராஜாமணி என்பவருக்கு சொந்த மான இரண்டு மாடுகளும், கணக் கன்தோட்டம் ஒரு மாடும் இறந்துள் ளது. இந்நிலையில் வாவிபாளை யம் கால்நடை கிளை நிலையம் செயல்பாட்டில் இல்லாததும், பூலு வபட்டி கால்நடை மருத்துவமனை நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாலும் இப்பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப் பதில் விவசாயிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், திருப்பூர் ஒன்றிய செயலாளர் எஸ். அப்புசாமி, தமிழ்நாடு பால் உற்பத் தியாளர்கள் சங்க தலைவர் எஸ். கே.பழனிசாமி மற்றும் வாவிபாளை யம் சிகாமணி, வேலுச்சாமி ஆகி யோர் பாதிக்கப்பட்ட விவசாயி களை சந்தித்து பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். கடந்த ஒரு வார காலத்தில் மாடுகளும், கால்நடை கள் இறந்த பிறகு செவ்வாயன்று பூலுவபட்டி கால்நடை மருத்துவர் மற்றும் உதவியாளர் வருகை தந்து எஞ்சியுள்ள மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். 80க்கும் மேற்பட்ட மாடு களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார் கூறுகையில்:
கால்ந டைத்துறை அதிகாரிகள் உரிய காலத்தில் கோமாரி நோய் தடுப் பூசியை இப்பகுதியில் போட வில்லை. இப்பகுதி விவசாயிகள் கோமாரி நோய் தாக்குதலால் கால்ந டைகள் இறந்து பெரும் பொருளா தார இழப்புகளை சந்தித்து வருகின் றனர். தற்போது 20-க்கும் மேற்பட்ட மாடுகள் நோய் தாக்கி தனியார் மருத்துவர் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றன. இதற்கு அதிக பணம் கடன் வாங்கி செலவழித்து வருகின் றனர். உடனடியாக இப்பகுதிக்கு சிறப்பு மருத்துவக்குழுவை அமைத்து முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். பூலுவ பட்டி கால்நடை மருந்தகத்திற்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து முழுமையாக செயல்படுத்த வேண் டும். மூடி கிடக்கும் வாவிபாளையத் தில் உள்ள கால்நடை கிளை நிலை யத்திற்கு மருத்துவர் நியமித்து செயல்படுத்த வேண்டும். நோய் தாக்கி உயிரிழந்த கால்நடைக ளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.