districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வால்பாறையில் மழை பாதிப்பு ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு உயர் அதிகாரிகள்

கோவை, ஜூலை 8- வால்பாறையில் மழை பாதிப்பு குறித்து கண்காணிப்பு உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  கோவை மாவட்டம் ஜூலை 9 ஆம் தேதியன்று வால்பாறை  பகுதியில் தென் மேற்கு பருவ மழை திவிரமடைந்துள்ளது.  இதனால், கூழாங்கல்  ஆறு மற்றும் டோபி காலனி. வாழைத் தோட்டம் ஆற்றுப்பகுதியில் கடந்த நான்கு நாட்களாக  வெள்ள பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,  மாவட்ட வருவாய் துறை அதிகாரி ஷர்மிளா மற்றும் கண் காணிப்பு உயர் அதிகாரி ஜெய் ஸ்ரீ முரளிதரன் உள்ளிட் டோர் வெள்ள நீர் பாதிப்பை ஆய்வு மேற்கொண்டனர்.  இதனை தொடர்ந்து வால்பாறை சமுதாய கூடத்தில் முகாமிட் டுள்ள சென்னை ஆவடியிலிருந்து மாநில பேரிடர் மீட்பு  குழுவை சந்தித்து மீட்பு பணிகள் பற்றி நேரில்பாதுகாப்பு  பணிகள் பற்றி கேட்டறிந்தனர். மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமை பார்வையிட்டனர். பின்னர்,  வாழைத்தோட்டம் பகுதியில் ஆற்று பகுதியில் தடுப்பு சுவர் வெடிப்பு ஏற்பட்டு இடியும் நிலையில் உள்ளதை பார்வையிட்டு இடிந்தால் குடியிருப்புக்கும் வெள்ள நீர் புகுந்து விடும் எனவே,  போர்கால அடிப்படையில் அந்த  பணியை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.  இந்நிகழ்வில், வால்பாறை நகர மன்ற தலைவி அழகு  சுந்தரவள்ளி செல்வம், செயற்பொறியாளர் வெங்கடாசலம், வருவாய்த் துறை வட்டாட்சியர் அருள்முருகன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கோவையில் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஆலோசனை 

கோவை, ஜூலை 8- கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், கோவை காவல் சரகங் களான கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு  மாவட்டங்களை சேர்ந்த காவல் அதிகாரி களுடன்  சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் தலைமையில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.  இக்கூட்டத்தில் நான்கு மாவட்டத்தி லுள்ள சட்டம், ஒழுங்கு  பிரச்சனைகள், காவல் துறையின் செயல்பாடுகள், களத்தில்  காவல்துறையினர் சந்திக்கும் பிரச்சனை கள் குறித்தும், டிஐஜி விஜயகுமார் தற் கொலை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.   இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு  மண்டல காவல் துறை தலைவர் சுதாகர்,  கோவை மற்றும் திருப்பூர் மாநகர காவல்  ஆணையர்கள், திருப்பூர் துணை ஆணை யர்கள், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.   இதையடுத்து தற்கொலை செய்து கொண்ட கோவை சரக டிஐஜி விஜய குமாரின் உருவப்படத்திற்கு, ஏடிஜிபி அருண்  மற்றும் காவல் துறை அதிகாரிகள்  மலர் தூவி  மரியாதை செலுத்தினர்.  இதனைத்தொடர்ந்து, சேலம் மாவட் டத்திற்கு ஏடிஜிபி அருண் சென்றார். அங்கு,  மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்பு அளித் தனர். இதனைத் தொடர்ந்து ஏடிஜிபி அருண்  தலைமையில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது இந்த கூட்டத்தில் காவல்துறையில் பணிபுரிந்து வரும் உயர் அதிகாரிகளுக்கு மன அழுத்தம் குறித்தும் அது குறைப்ப தற்கான நடவடிக்கை குறித்தும் ஆலோசனை  மேற்கொள்ளப்பட்டது மேலும் காவல்துறை  அதிகாரிகள் காவலர்களுக்கு மன அழுத்தம்  குறைப்பதற்கான ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் காவல்துறை அதிகாரி களுக்கு ஏடிஜிபி அருண் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் மாநகர காவல் ஆணை யர்கள் பங்கேற்றனர்.

70 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு

தாராபுரம், ஜூலை 8- தாராபுரத்தில் உள்ள துணிக்கடையில் ரூ.70 ஆயிரம் ரொக் கப்பணம் பட்டப்பகலில் திருட்டு போன சம்பவத்தால் வியாபாரி கள் அச்சத்தில் உள்ளனர். தாராபுரம் சின்னக்கடை வீதி பகுதியில் சேக்பரித் மற்றும்  அவரது நண்பரான ராஜா முஹம்மது ஆகியோர் இணைந்து  தெநியூ மாஸ் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருகின்ற னர். சம்பவத்தன்று அவர்கள் இருவரும் தொழுகைக்குச் செல்ல வேண்டி இருந்ததால் கடையின் முன்பக்க கண்ணாடி  கதவுகளை மட்டும் சாத்திவிட்டு தொழுகைக்கு சென்றுள்ள னர். கடைக்கு திரும்பி வந்தபோது கல்லாவில் வைக்கப்பட்டி ருந்த 70 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் காணாமல் போய்  இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், தாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத் திற்கு வந்த குற்றப்பிரிவு காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டப் பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால் வியாபாரிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்தப் பகுதியில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண் காணிப்பு கேமராக்களும் வேலை செய்யவில்லை என தெரிய வந்துள்ளது.இச்சம்பவம் பொதுமக்கள் மத்தி யில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

லாரி மோதி முதியவர் பலி

அவிநாசி, ஜூலை 8- அவிநாசி  அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி  மோதி,  முதியவர் சனியன்று உயிரிழந்தார். அவிநாசி அருகே வடுகபாளையம் பிச்சாண்டம்பாளை யத்தைச் சேர்ந்தவர் கணேசன்(60). இவரது மனைவி பாலா மணி(58). இவர்கள் இருவரும் கூட்டப்பள்ளியில் இருந்து வடு கபாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண் டிருந்துள்ளனர். புஞ்சைதாமரைக்குளம்  அருகே சென்ற போது, முன்னால் சென்ற லாரி ஓட்டுநர், எதிரே வந்த அரசு  பேருந்துக்கு வழி விடுதற்காக, திடீரென லாரியை பின்னால்  இயக்கியுள்ளார். அப்போது லாரி இருசக்கர வாகனத்தின் மீது  மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவயிடத்திலேய உயிரிழந்தார். இது குறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற் கொண்டு வருகின்றனர்.

வடுகபட்டியில் நாளை மின்தடை

தாராபுரம், ஜூலை 8- வடுகபட்டியில் நாளை பராமரிப்பு பணிகளுக்காக மின்  வினியோகம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ் நாடு மின்சாரவாரியம், பல்லடம் மின்பகிர்மான வட்டம், தாரா புரம் கோட்டம், வடுகபட்டி 110/22 கேவி துணை மின் நிலையத் தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை காலை 9  மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக் காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மின்தடைபடும் பகுதிகள்: வடுகபட்டி, குமாரபாளையம், எம்கேடிபாளையம், எஸ்பிகே பாளையம், சம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுத் துறை, வரப்பட்டி, என்சிஜி வலசு, பி.ராமபட்டிணம் மற்றும்  இது சார்ந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என தெரி வித்துள்ளார்.

அவிநாசியில் நாளை மின் தடை

அவிநாசி, ஜூலை 8-  கானூர் புதூர்  துணை மின்  நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு  பணிகள் நடைபெற இருப்பதால் கீழ் கண்டபகுதிகளில் நாளை (திங்கள்)காலை 9  மணி முதல மாலை 4 மணி வரை மின்  விநியோகம் இருக்காது என அவி நாசி மின் வாரியத்தினர் அறிவித்துள் ளனர். மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: கானூர், அல்லப்பாளை யம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம்,  செட்டிபுதூர், ஆலத்தூர், தொட்டிபா ளையம், குமாரபாளையம், மொன்டி பாளையம், தாசராபாளையம், ஆம் போதி, பசூர் ஒரு பகுதி,  பெத்தநாயக் கன்பாளையம் ஒரு பகுதி ஆகிய பகு திகளில் மின் தடை செய்யப்ப டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணை நிலவரம்

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:22.53/60அடி நீர்வரத்து:கனஅடி
வெளியேற்றம்:28கனஅடி
மழையளவு:மிமீ

சுற்றுலா பயணிகள் ரசித்து  வீடியோ எடுக்க அனுமதித்த புலி

உதகை, ஜூலை 8- பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் அங்கும் இங்குமாய் நடந்து சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட நேரம் காட்சியளித்த புலியை, சுற்றுலா பயணிகள் ஒளிப்பதிவு செய்த காட்சிகள்  சமூக வலைதளங்களில் வைரலகி வருகிறது.  நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தமிழ கத்தை சேர்ந்த புலிகள் காப்பகமாக உள்ளது. தொடர் வனப் பகுதியாக கர்நாடகாவை சேர்ந்த பந்திப்பூர் புலிகள் காப்பகம்,  கேரளாவை சேர்ந்த முத்தங்காள் புலிகள் காப்பகம் உள்ளது.  கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திலும்  சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்கு களை கண்டு களிக்க வாகன சவாரி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளியன்று மாலை வழக்கம் போல பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா பயணிகள் வனத் துறை வாகனத்தில் சென்றனர். அப்பொழுதே திடீரென வனப் பகுதியில் இருந்து சாலைக்கு வந்த ஒரு புலி, சாலை இரு  பக்கமும் அங்கும் இங்குமாய் நடந்தது. புலியை கண்ட சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை அந்த  பகுதிக்கு வாகன சவாரியில் பயணித்த சுற்றுலா பயணிகள் அவர்கள் செல்போன் மூலம் ஒளிப்பதிவு செய்த அந்த காட்சி  தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வரு கிறது.

முந்தைய நாள் இரவே தற்கொலைக்கு தயாரான டிஐஜி விஜயகுமார்

கோவை, ஜூலை 8- தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார் முந்தைய நாள் இரவே தற்கொலைக்கு தயாரானதாக தகவல்  வெளியாகியுள்ளது. கோவை பந்தய சாலையில் கோவை சரக டிஐஜி  விஜய குமார் வெள்ளியன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற் கொலைச் செய்து கொண்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், கோவை யில் தற்கொலை செய்து கொண்ட டிஐஜி மன அழுத் தத்தில் இருப்பது குறித்து அறிந்த மேற்கு மண்டல ஐஜி  சுதாகர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு டி.ஐ.ஜியையும், அவரது மனைவியையும் அழைத்து ஐஜி அலுவலகத்தில் வைத்து 2 மணி நேரம் பேசியுள்ளார். அப்போது மன அழுத்தம் குறித்து கேட்டறிந்த அவர் அதிலிருந்து மீள்வது  குறித்து சில வழிமுறைகளை தெரிவித்து கவுன்சிலிங் கொடுத் துள்ளார். இதேபோல், கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் டிஐஜி-யிடம் பேசி உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக ஓசிடி மன  அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட டிஐஜி ஒரே மருத்துவரை பார்க்காமல், மாற்றி மாற்றி பார்த்து மருந்து எடுத்து வந் துள்ளார். அது தொடர்பாக இணையதளத்தில் நிறைய குறிப்பு கள் எடுத்து ஆயுர்வேத மருந்துகளை எடுத்து இருக்கிறார்.   அவருடைய மகள் மெடிக்கல் படிப்பதற்கு தயார்  செய்துவிட்டதாகவும் சக அதிகாரிகளிடம் தெரிவித்துள் ளார். இரண்டு நாளுக்கு, முன்பே தனக்கு தற்கொலை எண்ணம் வருவதாக, காவல் துறையில் இல்லாத நண்ப ரிடம் தெரிவித்துள்ளார். நண்பர்களுடன் ஆனைகட்டிக்கு போவதாக திட்டமிட்டுள்ளார். நண்பர் வரவில்லை என்ப தால் அங்கு செல்லவில்லை. அவர் தற்கொலை செய்வதற்கு  முந்தைய நாள் இரவே அதாவது பிறந்தநாள் விழா ஒன்றில்  பங்கேற்றுவிட்டு திரும்பிய போது தனது தனிப்பாது காவலரிடம் துப்பாக்கி எல்லாம் எங்கே வைப்பீங்க, பத்திர மாக இருக்கிறதா என கேட்டு பார்த்துள்ளார். இடத்தை சென்று  பார்த்துள்ளார். பின்னர் மறுநாள் காலையில் அங்கு சென்று  துப்பாக்கியை எடுத்து தலையில் சுட்டு தற்கொலை செய்து  கொண்டுள்ளதாக இந்த விசாரணையில் தெரிய வந் துள்ளது.

திறந்த வெளி சாக்கடையால் விபத்து அபாயம்

தருமபுரி, ஜூலை 8- தருமபுரி அருகே திறந்தவெளி சாக்கடையால் விபத்துக் கள் ஏற்படும் அபாயம் உள்ளன. தருமபுரி ஒன்றியத்திற்கு உட்பட்டது இலக்கியம்பட்டி ஊராட்சி. இது தருமபுரி நகரத்தையெட்டியுள்ள மிகப் பெரிய ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் முக்கிய அரசு  தலைமை அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில்,  கழிவுநீர் கால்வாய் தூர்வாராமல் உள்ளன. மேலும் தெரு விளக்கு, குடிநீர் ஆகியவை பூர்த்தி செய்யாமல் மெத்தன போக்குடன் இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரி விக்கின்றனர்.  குறிப்பாக மாந்தோப்பு, சொசைட்டி காலனி பகுதிகளில்  கழிவு நீர் கால்வாய் சிதலமடைந்து உள்ளன. இரண்டு  வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படு கிறது. மேலும் மாந்தோப்பு, காளியப்ப செட்டி காலனி, நெல்லி  நகர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆயிரத்திற் கும்  மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிகளுக்கு பிடம னேரி ஏரிக்கரை முக்கிய சாலையில் இருந்து சொசைட்டி காலனி வழியாக செல்ல வேண்டும். சொசைட்டி காலனியில்  நுழையும் பிரிவு சாலையில் 40 அடி அகலத்திற்கு கழிவுநீர்  கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை சிறிய மூடியால் மூடப் பட்டுள்ளன. கால்வாயை பல வருடங்களாக தூர்வாரப்ப டாமல் உள்ளதால், கழிவு நீர் சாலையில் தேங்குகிறது. இந்த கால்வாயை செப்பனிட ஊராட்சி நிர்வாகம் எவ்வித  முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் கால்வாயை கடந்து  செல்லும் இருசக்கர வாகனம், இலகு மற்றும் கனரக வான கங்கள் கால்வாயில் சிக்கி கொள்கின்றன. இதனால் விபத்துக் கள் ஏற்படுகின்றன. எனவே, கால்வாயை தூர்வார வேண்டும்.  கால்வாய்க்கு மூடி அமைக்க உடனடி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலிவு றுத்தி உள்ளனர்.

மின்தடை

கோவை ஜூலை 8- பெரியநாயக்கன்பாளையம்துணை மின்நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வருகிற 11 ஆம்ந்தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அந்த பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், அச்சக குடியிருப்பு, நெ.4 வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக கு.வடமதுரை மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமரச தீர்வு மையத்தின் மூலம் 2.18 கோடி இழப்பீடு

சேலம், ஜூலை 8- சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில் சமரச தீர்வு மையம் மூலம் இரண்டு கோடியே 18 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை யை மாவட்ட முதன்மை நீதிபதி பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்கினார் சேலம் மாவட்டத்தில் சமரச தீர்வு மையம்  எனும் மக்கள் நீதிமன்றம் மாதம் தோறும் முதல் வாரத்தில் நடைபெறுகிறது. இதன்  அடிப்படையில் சனியன்று அஸ்தம்பட்டியில்  உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள  வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக மக்கள் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட இரு  தரப்பினரையும் அழைத்து சமரசம் முறை யில் தீர்வு காணப்பட்டது. இதன் அடிப்படையில், குடும்ப நல வழக்கு, மின்சார வாரிய வழக்கு, காசோலை  வழக்கு, உரிமையியல் மற்றும் இதர வழக்கு,

 சொத்துப் பிரச்சனை, உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. முன்ன தாக, கடந்த 2021 ஆம் ஆண்டு வெண்ணந் தூர்- ஓசூர் சாலையில் பொன்மலை உள் ளிட்ட 5 பேர் காரில் சென்று கொண்டு இருந் தனர். அப்போது, தொப்பூர் வருஷத் பஞ்சர் கடை அருகே சென்றபோது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது  வாகனம் மோதிய விபத்து ஏற்பட்டது. இதில்  சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரி ழந்தனர். இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்த  வழக்கு சமரசத் தேர்வு முறையில் தீர்வு  காணப்பட்டு பாதிக்கபட்ட நபரின் குடும்பத் திற்கு 1,80, 50000 இழப்பீடு காசோலையை  மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங் கினார்.  இதேபோல, கடந்த 2009 ஆம் ஆண்டு நிலம் கொடுத்த வழக்கில், திருச்செங்கோடு ஹவுசிங் போர்டுக்கு நிலம் கொடுத்த வழக்கில் சமரச தீர்வு காணப்பட்டு சின்ன கவுண்டர் என்பவருக்கு 37 லட்சத்து 64  ஆயிரம் ரூபாய் கான  காசோலை வழங்கி னார். ஆக மொத்தம் சனியன்று ஒரே நாளில்  நான்கு வழக்குகளில் ஒரு கோடியே 13 லட்சம்  ரூபாய் இழப்பீடு தொகையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார். மேலும், ஒரே நாளில் பல்வேறு  வழக்கு களில் 2 கோடியே 18 லட்சம் ரூபாய் இழப்பீடு  தொகையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி  வழங்கினார். இதில், நீதிபதி சரண்யா மற்றும்  மாவட்ட சட்டப் பணி ஆணை குழு செய லாளர் தங்கராஜ் உள்ளிட்டோர் உடன் இருந் தனர். 


 

;