districts

img

ஜலகண்டபுரம் பேரூராட்சியின் அலட்சியம் சாயப்பட்டறை கழிவு நீர் ஓடையில் கலப்பு - சிபிஎம் கண்டனம்

சேலம், செப் 3- சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம் பேரூராட்சி பகுதியில் எண்ணற்ற சாயப் பட்டறைகள் இயங்கி வருகிறது. சாயப் பட்டறை கழிவுநீர் அருகில் உள்ள ஓடையில் கலப்பதால் தொற்று நோய் பர வும் அபாயம் ஏற்பட்டுள்ளது என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் பேரூராட்சி யின் அலட்சியம் காரணமாகவே இச் செயல்கள் தொடர்ந்து நடைபெறுகிறது என சிபிஎம் கண்டனம் தெரிவித்துள் ள்ளது.  சேலம் மாவட்டம், ஜலகண் டாபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள  சாயப்பட்டறைகளில் இருந்து வெளி யேற்றப்படும்  கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யப்படுவதில்லை. இந்த கழிவு  நீர்ஓடைகளில் கலக்கின்றன. இத னால், கட்டிய நாயக்கன்பட்டி சுற்று வட்டார வீடுகள் மற்றும் இருப்பாளி ஊராட்சியில் பஞ்சன் வலவு, சீரங்கன் வளவு, மண்ணு திட்டு வளவு, செவி டனூர் காட்டுவளவு, கலர் பட்டி,  சாமுண்டி நகர் உள்ளிட்ட பகுதி களில் பட்டா நிலங்கள் மற்றும் குடியி ருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி  நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது.  மேலும் இப்பகுதியிலுள்ள 200 ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலங்கள் மாசடைந்துள்ளது.  பொதுமக்கள் நடந்து செல்ல கூட  முடியாத அளவுக்கு சாலையில் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், சாயப்பட்டறை கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும் என அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விட்டுள்ளது. இதே போல், ஜலகண்டாபுரம் நரியம் பள்ளத் தில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் குப்பையை அரவை செய்ய வேண் டும் என மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள் ளது.  முன்னதாக, பாதிக்கப்பட்ட பகுதி களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சேலம் மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா, மாவட்ட குழு  உறுப்பினர் ராஜாத்தி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் பாதிப்பு மற்றும் விபரங்களை கேட் டறிந்தனர்.

;