மேட்டுப்பாளையம், டிச.5- மூல பொருளான பட்டு நூல் விலை அதிகரித்த நிலை யில், ஜிஎஸ்டி வரியும் உயர்த்தப்படுவதால் அழிந்து வரும் நெசவு தொழிலை காக்க கைத்தறி ரகங்க ளுக்கு வரி விலக்கு தேவை என கோரிக்கை விடுத்துள்ள னர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத் துள்ள சிறுமுகை பகுதியில் சுமார் பத்தாயிரம் குடும் பங்கள் கைத்தறி நெசவு தொழிலை மட்டுமே தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இங்கு தயாராகும் கைத்தறி மென்பட்டு உள்ளிட்ட பட்டு சேலை ரகங்கள் புகழ்பெற்றது. இங்கு மிக நுண்ணிய வேலைப் பாடுகளுடன் நெய்யப்படும் சிறுமுகை கைத்தறி பட்டுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் விருது கள் கிடைத்துள்ளது. இங்கு வாரம் ஒன்றுக்கு பதினைந் தாயிரம் கைத்தறி பட்டு சேலைகள் வரை உற்பத்தி செய் யப்பட்டு, இவை கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் துணி கடைகள் மூலம் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக கைத்தறி பட்டு சேலை தயாரிப்பிற்கு தேவைப்படும் மூல பொருளான பட்டு நூல் விலை ரூபாய் 3 ஆயிரத் திலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதனால் பட்டு சேலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நெய்யப்படும் பட்டு சேலைகள் மீதான மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி 5 சதவிதத்திலிருந்து 12 சதவிகிதமாக உயர்த் தப்பட்டுள்ளதால் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். நாடு சுதந்திரம் பெற்றது முதல், உப்பை போன்றே கைத்தறி தயாரிப்பிற்கும் வரி விதிக்கப்பட்டதில்லை என கூறும் கைத்தறி உற்பத்தியாளர்கள். கடந்த 2017 ஆம் ஆண்டு கைத்தறி பட்டு சேலைகளை சில்க் பேப்ரிக் பிரிவில் சேர்த்து HSP 5007ன் கீழ் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரிவிதிக்கப்பட்டது. தற்போது அதுவும் 12 சதவிகிதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது கைத்தறி தொழிலை முடக்கிவிடும். கைத்தறி ரகங்களின் விலை உயர்ந்தால் நுகர்வு குறை யும். இதனால் கைத்தறி நெசவு தொழில் மேலும் நலி வடையும் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலான சூழல் குறித்து விவாதிக்க சிறுமுகை பகுதியில் கூடிய கைத்தறி பட்டு சேலை உற்பத்தி மற்றும் விற்பனை யாளர் சங்கத்தினர் கூட்டத்தில், ஏற்கனவே நலிந்து வரும் கைத்தறி தொழிலை காப்பாற்றும் வகையில் கைத்தறி நெசவு பட்டு சேலைகளுக்கு தனி HSP எண் வழங்கி ஜிஎஸ்டி-யில் இருந்து முழுவிலக்கு அளிக்க முன் வரவேண்டும். இதற்கு மாநில அரசு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தீர் மானம் நிறைவேற்றியுள்ளனர்.