districts

img

நூற்பாலை உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள்

கோவை, செப்.28- மின் கட்டண உயர்வு மற்றும்  பஞ்சு விலையை குறைக்க வேண்டுமென நூற் பாலை உரிமையாளர்கள் சங்கம் வேண்டு கோள் விடுத்துள்ளது.  கோவை சூலூர், பாப்பம்பட்டி பிரிவில் இந்திய நூற்பாலை உரிமையாளர் சங்கத் தின் 16 ஆவது ஆண்டு பொது குழுக் கூட்டம்  நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனத் தலைவர்  ஏ.ஆர்.சின்னையன், தலைவர் ஜி.சுப்பிர மணியம் ஆகியோர் தலைமை ஏற்றனர்.  இக்கூட்டத்தில், உயர்த்தப்பட்ட வங்கி வட்டி விகிதங்கள் உடனடியாக பழைய வட்டி  விகிதமான 7.5 சதமாக குறைக்க வேண்டும்.  நூற்பாலைத் தொழிலின் மந்தநிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு, தற்போ துள்ள கடனை மறு சீரமைத்து இரண்டு ஆண்டு கால அவகாசம் வழங்க வேண் டும்.  அந்நிய நூல் மற்றும் துணிவகைகள் கட்டுப்பாடு இன்றி இறக்குமதி ஆவதை கண்காணித்து தடுக்க மத்திய அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். பஞ்சுக்கு விதிக்கப் பட்ட இறக்குமதி வரி 11 சதவிகிதத்தை மத்திய  அரசு சூழ்நிலை கருதி முழுமையாக நீக்க வேண்டும் காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா கொள்முதல் செய்யும் அனைத்து பஞ்சை யும் நேரடியாக பஞ்சாலைக்கு மட்டுமே  விற்பனை செய்ய வேண்டும். வியாபாரி களுக்கு விற்பனை செய்யாமல் இருக்க மத்திய அரசு விதிமுறைகளை வகுக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மான கழகம் எம் டி கட்டணம் 90 சதவிகிதம்  வசூலிக்கப்படுகிறது. நூற்பாலை தொழி லில் அசாதாரண சூழ்நிலையை கருத்தில்  கொண்டு, உபயோகப்படுத்தும் மின்சாரத் துக்கு ஏற்ப எம்டி கட்டணத்தை வசூலிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு ரூ.1.52 பைசா வீதமும், உயர்வழுத்த மின்  நுகர்வோர்களுக்கு ரூ.0.96 பைசா வீதமும்  வசூலித்து வருகிறது. இதனை தமிழக அரசு  முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இக்கூட்டத்தில், செயலாளர் கே.ஆர்.சண்முகசுந்தரம், துணைத் தலைவர்களான சண்முகம், கோபால்சாமி, வேலுச்சாமி, பாலகிருஷ்ணன், பிரபு மற்றும் உள்ளிட்ட  திர ளானோர் பங்கேற்றனர்.