districts

img

மகசூலில் அசத்தும் மேட்டுப்பாளையம் விவசாயி

இயற்கை விவசாய முறை யில், ஒரு ஏக்கர் நிலத் தில் 52 வகையான மிள காய் சாகுபடி செய்து அசத்தும் விவசாயி செயல் பலரின் கவ னத்தை ஈர்த்துள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாட்டின் பல்வேறு மாநி லங்களில் இருந்து விதைகளை சேகரித்து தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் 52 வகையான மிளகாய் செடிகளை பயிர் செய்து  மகசூலை அதிகரித்து காட்டி அசத் தியுள்ளார் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த விவசாயி. நம் நாட்டில் அன்றாட சமையல் பயன்பாட்டில் மிளகாய் இன்றிய மையாதது. மிளகாய் என்றாலே நீட்ட மிளகாய், குண்டு மிளகாய் மற்றும் உருண்டை மிளகாய் என மூன்று ரகம் மட்டுமே இங்கு பயிர் செய்யப்பட்டு வருகிறது. இதில் காரம் அதிகமுள்ளவை சமையலுக் கும், காரம் குறைவாக உள்ள மிள காய்கள் பஜ்ஜி போன்ற பலகார  உணவு பண்டங்கள் தயாரிப்பிற் கும் பயன்படுத்தப்பட்டு வருகின் றன. ஆனால் ஆந்திரா, அசாம், காஷ்மீர், உத்திரபிரதேசம் போன்ற நாட்டின் பல்வேறு மாநிலங்களில், மிக காரத்தன்மை கொண்ட மிள காய்கள் முதல் மிதமான காரம் மற் றும் பிற காய்கறிகளை போலவே மிளகாய்களை மட்டுமே பொரியல் செய்து சாப்பிடும் அளவிற்கு காரமே இல்லாத தனி சுவை கொண்ட மிள காய்கள் வரை விளைகின்றன.

இவ் வகை மிளகாய்களுக்கு தமிழகத் தில் வரவேற்பு இருந்தாலும் கிடைப் பது அரிது, ஒரு சில இடங்களில் கிடைத்தாலும் இவற்றின் விலை மிக அதிகம் என்ற நிலையே உள் ளது.  இந்நிலையில், கோவை மாவட் டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சம்பரவள்ளி என்னும் மலையடி வார கிராமத்தை சேர்ந்த விவசாயி விஸ்வநாதன் புது முயற்சியாக தமிழ் நாடு வேளாண் பல்கலைகழகத் தின் உதவியோடு நாட்டின் பல் வேறு மாநிலங்களில் விளையும் 52 வகையான மிளகாய் விதைகளை  வரவழைத்து தனது தோட்டத்தில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி சோதனை முயற்சியாக பயிரிட்டு வளர்பதோடு இதில் வெற்றியும் பெற்றுள்ளார். பல்வேறு சீதோ ஷன நிலையில் அங்கங்கு உள்ள மண்ணின் குணத்தோடு விளையும் பல்வகை மிளகாய் வகைகளை தனது நிலத்தில் ஒரே இடத்தில பயிரிட்டு அதற்கு தனி கவனம் செலுத்தி வளர்துள்ளதோடு இதில் மகசூலளையும் அதிகரித்து காண் பித்து அசத்தியுள்ளார். இயற்கை விவசாய முறையில் அதிக காரத் தன்மை கொண்ட மிளகாய்கள், மிதமான காரம் கொண்ட மிளகாய் கள், குறைந்த கார சுவை கொண்ட  மிளகாய்கள் என பல ரகங்களில் ஒவ்வொரு செடியிலும் காய்கள் பிடித்துள்ளதாக கூறும் விவசாயி மிளகாய் ரகத்திற்கு ஏற்ப தனித் தனியாக நல்ல விலை கிடைப்ப தால் இதனை பிற விவசாயிகளும் முயற்சித்து பார்த்து பலன் பெற லாம் என்கிறார்.

இரா.சரவணபாபு,  மேட்டுப்பாளையம்