அவிநாசி, செப்.29 - கோரிக்கையை வலியுறுத்தி, அவிநாசி பேரூராட்சி மன்ற பெண் உறுப்பினர் தர்ணாவில் ஈடுபட்டார். அவிநாசி பேரூராட்சிமன்றக் கூட் டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு, பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவ லர் செந்தில்குமார், துணைத் தலை வர் மோகன்குமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர் கள் விவாதம் நடத்திய விபரம் வரு மாறு: சிவபிரகாஷ்: சூளை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அடுக் குமாடி குடியிருப்புகளில், சரியான வடிகால் வசதியில்லாமல் பிரதான கால்வாயில் கலக்காததால், ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் லிட்டர் கழிவுநீர் வெளியேறுகிறது. மேலும் குடியிருப்புகளில் புகுந்து, சுகாதா ரக்கேடு ஏற்பட்டு வருகிறது. உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். கார்த்திகேயன்: அவிநாசி பேரூ ராட்சி சுகாதாரப்பணியாளர்கள் 40 பேருக்கு அவிநாசி அடுக்குமாடி குடி யிருப்பில் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ள வீடுகளை ஆட்சியர் அறிவு றத்தல் படி, விரைந்து வழங்க வேண் டும். எஸ்.தேவி: டி.எஸ்.பி. ஆபீஸ் பகுதி, நாய்க்கன்தோட்டம், நாரா யணா கிளீனிக் ஆகிய பகுதிகளில் தார்ச்சாலை, சாக்கடை வடிகால் அமைக்க வேண்டும். பேரூராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்று மின் இணைப்பிலிருந்து சட்ட விரோ தமாக மின் இணைப்பை எடுத்து தனி யார் உபயோகப்படுத்தி வருகின்ற னர். உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். சசிகலா: வி.எஸ்.வி.காலனியில் பழுதடைந்த 3 மின்கம்பங்களை மாற்றவேண்டும். சேவூர் ரோடு பண் ணாரியம்மன் கோயில் சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்படுவதைத் தடுக்க வேகத்தடை அமைக்க வேண் டும். வ.உ.சி. பூங்காவில் சுற்றுச்சுவர் அமைத்து,
நிரந்தர பணியாளர்களை அமர்த்தி, பூங்காவை பராமரிக்க வேண்டும். திருமுருகநாதன்: பேரூராட்சி நிர் வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட வடி கால், சாலை, ரிசர்வ் சைட்டுகள் குறித்த ஆவணங்களை வழங்க வேண்டும். தற்போது பேருந்து நிலை யத்தில் பேரூராட்சி சார்பில் பல கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் வணிக வளாகத்திற்கு, வருவாய்த் துறையிடமிருந்து தடையின்மைச் சான்று பெற்று பணி செய்ய வேண் டும். இதற்கிடையே, உறுப்பினர் ஸ்ரீ தேவி, 18 ஆவது வார்டில் வளர்ச்சி பணிகள் எதுவும் மேற்கொள்ள வில்லை எனக் கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டார். அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் கூறுகை யில், கைகாட்டிப்புதூர், அவிநாசிங் கம்பாளையம் வீதியில் வடிகால் உள் ளிட்ட பணிகள் மேற்கொள்ள ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ள தொகையை விட அதிகமாக உள்ளது. அடுத்த நிதி ஒதுக்கீட்டில், கோரிக்கை நிறைவேற் றப்படும். தற்போது ஒதுக்கீடு செய் யப்பட்ட நிதியில், குமரன் வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து ஸ்ரீதேவி தர்ணாவை கைவிட்டார். இதைத்தொடர்ந்து 31 மன்ற பொருள் கள் வாசிக்கப்பட்டு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.