காவிரி ஆற்றில் அபாய பயணம்
நாமக்கல், ஜூலை 6- காவிரி ஆற்றில் அபாய பயணத்தை சிறுவர்கள் மேற் கொள்வதை காவல்துறையினர் தடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் காவிரி ஆறு ஓடுகிறது. ஓடப்பள்ளியில் நீர் தேக்கி வைக்கப்பட்டு மின் சாரம் எடுக்கப்படுவதால் காவிரி ஆற்றில் அதிகளவு நீர் இருக்கும். இந்நிலையில், பள்ளி விடுமுறை நாட்களில் காவிரி ஆற்றுக்கு வரும் சிறுவர்கள் குளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில், காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் தெர்மா கோல் மூலமாக காவிரி ஆற்றில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். இதில், கடினமான பிளாஸ் டிக் தெர்மாக்கோல் மேலே இரண்டு சிறுவர்கள் அமர்ந்து கொண்டு செல்கின்றனர். அதற்கேற்றார் போல ஒரு துடுப்பை தயார் செய்து காவிரி ஆற்றின் ஓரங்களிலும், சில நேரங் களில் ஆற்றின் மையப்பகுதிக்கும் சென்று வருகின்றனர். எப் போது வேண்டுமானாலும் நீருக்குள் பிளாஸ்டிக் தெர்மா கோல் கவிழும் அபாயம் உள்ளது. நீர் நிலைகளில் உள்ள அபாயங்கள் குறித்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற அபாய பயணத்தை மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்வு
திருப்பூர், ஜூலை 9 - திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கத் துறை, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் தென்னக ரயில்வே திருப்பூர் ரயில் நிலை யம் இணைந்து ஞாயிறன்று போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வுக்கு நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் ரயில் நிலைய துணை மேலாளர் சங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வணிக ஆய்வாளர் ராம்நாத், ரயில்வே ஊழியர் ராஜ்குமார் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில், 35க்கும் மேற்பட்ட நாட்டு நலப் பணித் திட்ட மாணவ, மாணவிகள் போதை அரக்கன் போல் வேடமிட்டும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்களை வழங்கி, உறுதிமொழி எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் நிகழ்விற் கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்
திருப்பூர், ஜூலை 9 - பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கரைப் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட முனியப்பன் கோயில் செல்லும் சாலையோரமாக நூற் றுக்கும் மேற்பட்ட மூட்டைகளில் மருத்துவ கழிவுகளை அடையாளம் தெரியாத நபர் கள் வீசி சென்றுள்ளனர். பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி திருப்பூர் மாநகராட்சியின் எல்லையில் அமைந்திருக்கிறது. இங்குள்ள முனியப்பன் கோயில் செல்லும் சாலை பகுதியில் மருத்துவக் கழிவுகள் பல மூட்டை களாக கட்டப்பட்டு சாலையோரம் வீசப் பட்டிருந்தது. இந்த மருத்துவ கழிவுகளை வீசியது யார் என்று தெரியவில்லை. எனினும் அந்த கழிவு மூட்டையில் உள்ளே வேலூர் சிஎம்சி மருத்துவமனை பெயர் குறிப்பிடப்பட் டுள்ளது. எனவே, அங்கிருந்து கொண்டு வரப் பட்டு இங்கு கொட்டி இருக்கலாம் என்று ஊராட்சி நிர்வாகத்தினர் சந்தேகப்படு கின்றனர். ஆபத்தான இந்த மருத்துவ கழிவுகளை ஊராட்சி நிர்வாகத்தினர் தீ வைத்து எரித் தனர். எனினும் இது போன்ற மருத்துவ கழிவு களை அழிப்பதற்கு உரிய வழிமுறைகள் உள்ளன. சுகாதாரத் துறையினர் கவனத் திற்கு கொண்டு சென்று அவர்கள் வழிகாட்டு தல்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் தெரி வித்தனர். மருத்துவ கழிவுகளை மக்கள் நட மாட்டம் உள்ள ஊராட்சி பகுதியில் கொட்டிய வர்களை கண்டறிந்து சட்டப்படி கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து வேலூர் சிஎம்சி மருத்து வமனை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவர்களிடமும் விசார ணை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கூறினர். கரைப்புதூர் ஊராட்சியில் இது போன்ற கழிவுகளை கொண்டு வந்து கொட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தரையில் தவழ்ந்த மேகக்கூட்டங்கள்!
சேலம், ஜூலை 7- மலைப்பகுதியான ஏற்காட்டில் சனியன்று மாலை தரைக்கு வருவது போல காட்சியளித்த மேகக்கூட்டங்களால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். “ஏழைகளின் ஊட்டி” என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சனியன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து வானிலிருந்து மேகக்கூட் டங்கள் தரை இறங்கி வருவதுபோல், ஏற்காடு நகர் பகுதியை மூடியது. இது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஏற்காடு ஏரியையும், ஏரியில் படகு சவாரி செய்த சுற்றுலா பயணி களையும் இந்த மேகமூட்டம் தழுவி சென்றது. தரைக்கு வந்த மேக கூட்டங்களால் நிலவிய குளுகுளு சூழலை ரசித்த வாறு சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்தனர். இந்த மேகமூட்டம் காரணமாக, வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஊர்ந்து சென்றதை காண முடிந்தது. அதே நேரத்தில் மாலையில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் கடுங்குளிர் நிலவியது. முன்னதாக, மேகக் கூட்டம் தரைக்கு வந்து தவழ்ந்து சென்ற போது, சாலையில் நின்று சுற்றுலா பயணிகள் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.
விதிமீறல்: 9 வாகனங்கள் பறிமுதல்
நாமக்கல், ஜூலை 9- நாமக்கல் பகுதியில் சாலை விதிகளை மீறி இயக்கப்பட்ட 9 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லாரி களில் தார்ப்பாய் போடாமல் மணல் லோடு ஏற்றி செல்லப் படுவதாகவும், அதனால் விபத்து அபாயம் ஏற்படும் சூழல் உள் ளதாகவும் தொடர்ந்து புகார்கள் இருந்த வண்ணம் இருந் தன. இந்நிலையில், நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலை யில் நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முரு கன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர். அப்பொழுது தார்ப்பாய் போடாமல் மணல் ஏற்றி வந்த இரண்டு லாரிகள், உரிய தகுதி சான்று புதுப்பிக்கப் படாமல் வந்த மூன்று லாரிகள் என 5 லாரிகளையும் அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். மேலும், சொந்த வாகனத்தை வாட கைக்கு பயன்படுத்தியதாக ஒரு கார் பறிமுதல் செய்யப்பட் டது. தொடர்ந்து தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாக னத்தில் வந்த 15 பேருக்கு தலா 1000 ரூபாய் வீதம் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதன்பின் பரமத்திவேலூர் பகுதியில் நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் திடீர் வாகன சோதனை மேற்கொண்டார். இந்த வாகன சோதனையில் தகு திச்சான்று புதுப்பிக்காமலும், வாகன வரி செலுத்தாமல் இயக் கப்பட்ட இரண்டு கனரக வாகனங்கள், ஒரு டிராக்டர், சொந்த வாகனத்தை வாடகை வாகனமாக இயக்கிய ஒரு ஆம்னி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தார். பரமத்தி வேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பறிமுதல் செய் யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் வரி வசூல் செய்யவும், ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையிலும் நோட்டீஸ் வழங் கப்பட்டது.
தடுப்புச்சுவர் இடிந்ததால் போக்குவரத்து பாதிப்பு
உதகை, ஜூலை 9- பந்தலூரில் பெய்த பலத்த மழையால், கொளப்பள்ளி அருகே தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட் டது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக பந்தலூர், கூடலூர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. பந்தலூர், உப்பட்டி, பொன்னானி, சேரம்பாடி, தாளூர், கொளப் பள்ளி, அய்யன்கொல்லி, பாட்டவயல், நெலாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சனியன்று பலத்த மழை பெய்தது. சில இடங்களில் மின் கம்பங்கள் மீது மரக்கிளை கள் விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட் டது. பொன்னானி, சேரம்பாடி, சோலாடி ஆறு கள் மற்றும் நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பந்தலூர் வருவாய் ஆய் வாளர் அலுவலக சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. மழை காரணமாக கடுங்குளிர் நிலவு கிறது. பெரும்பாலான பேருந்துகளின் மேற் கூரைகள் பழுதடைந்து இருந்ததால், மழை நீர் ஒழுகியது. இதனால் பயணிகள் நனைந்த படி பயணம் செய்தனர். பேருந்து இருக்கை கள் நனைந்ததால் அமர்ந்து பயணம் செய்ய முடியாமல் பயணிகள் அவதியடைந்தனர். கொளப்பள்ளி அருகே எடத்தால் கிராமத் துக்கு கொளப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி யில் இருந்து சாலை செல்கிறது. தொடர் மழை காரணமாக சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. அங்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ரூ.1.35 கோடிக்கு பருத்தி; ரூ.25 லட்சத்திற்கு எள் ஏலம்
சேலம், ஜூலை 9- சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் கூட்டு றவு சங்கத்தில் சனியன்று பருத்தி மற்றும் எள் ஏலம் நடைபெற்றது. சேலம் மற்றும் அண்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரும் பருத்தி, நிலக்கடலை, எள், தேங்காய் பருப்பு உள்ளிட்ட விளை பொருட் கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் படி சனியன்று நடைபெற்ற பொது ஏலத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 5,500 பருத்தி மூட்டைகள் 675 லாட்டுகளாக பிரிக்கப் பட்டு பொது ஏலம் விடப்பட்டது. இதில் பிடி ரகப்பருத்தியானது குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூ.5 ஆயிரத்து 789 முதல் ரூ.6 ஆயிரத்து 789 வரை விற்பனையானது. இந்த மையத்தில் நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம் ரூ.1 கோடியே 35 லட் சம் மதிப்பிலான பருத்தி ஏலம் போனது. இதைத்தொடர்ந்து எள் பொது ஏலம் நடை பெற்றது. இதில் வெள்ளை ரக எள் கிலோ ஒன்று ரூ.127 முதல் ரூ.161.20 வரையிலும், சிவப்பு ரகம் கிலோ ஒன்று ரூ.123.20 முதல் ரூ.163.20 வரையும் விற்பனையானது. ஏலத் தில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த 250 மூட்டை எள் ரூ.25 லட்சத் துக்கு ஏலம் போனது.
மின்னல் தாக்கி 2 கூரை வீடுகள் சேதம்
தருமபுரி, ஜூலை 9- ஏரியூர் அருகே பெய்த பலத்த மழையின் போது, உருவான மின்னல் தாக்கி 2 வீடுகள் சேத மடைந்தன. தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியம், பெரும் பாலை கெண்டயனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட வெள்ளமண் காட்டில் சனியன்று மாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது மின் னல் தாக்கியதில் வெள்ளமண்காடு பகுதியைச் சேர்ந்த தூங்கப்பன் (80), அவருடைய மகன் ஆண் டியப்பன் (55) ஆகியோரது கூரை வீடுகள் தீப் பிடித்து எரிந்து சேதமடைந்தன. இதில் கூரை வீட்டிலிருந்த நவதானியங்கள் மற்றும் துணிகள் உள்ளிட்ட பொருட்கள் தீக்கிரையாகின. எனினும் நல்வாய்ப்பாக வீட்டிலிருந்தவர்கள் ஆடுகள் மேய்க்க சென்று விட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து பென்னாகரம் தீய ணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தீப்பிடித்த வீடுகள் மீது தண் ணீர் அடித்து தீயை அணைத்தனர்.
ரூ.1 கோடிக்கு மஞ்சள் ஏலம்
நாமக்கல், ஜூலை 9- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண் உற் பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமைய கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 716 முதல் ரூ.10 ஆயிரத்து 899 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 90 முதல் ரூ.8 ஆயிரத்து 599 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 399 முதல் ரூ.13 ஆயிரத்து 12 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 1,700 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை நடைபெற்ற தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயிலில் பாய்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் தற்கொலை
கோவை, ஜூலை 9- துடியலூர் அருகே ரயில் முன்பு பாய்ந்து அரசு பள்ளி தலைமை ஆசிரி யர் தற்கொலை செய்து கொண்ட சம்ப வம் குறித்து காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து காவல் துறை வட்டா ரம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணரை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் தனியார் நிறுவ னத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயராணி (53). இவர் வெள்ளக்கிணர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்து, தற்போது கணவருடன் வசித்து வரு கின்றனர். இதனால் விஜயராணி தனது கணவருடன் வசித்து வந்தார். இந்நிலை யில், சனியன்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் விஜயராணி வீட்டில் இருந் தார். இதன்பின் கணவர் வேலைக்கு சென்றதும், தனது இருசக்கர வாகனத் தில் துடியலூர் ரயில் நிலையம் அருகே சென்றார். தனது இருசக்கர வாக னத்தை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு, தண்டவாளத்தை நோக்கி நடந்து சென்றார். திடீரென அவர் மேட்டுப் பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரயில் என்ஜின் ஓட்டு நர் கொடுத்த தகவலின் பேரில், மேட்டுப் பாளையம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற் கொண்டனர். அப்போது தண்டவாளம் அருகே கிடந்த விஜயராணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மேட் டுப்பாளையம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்ப வம் குறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய் தனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர் விஜயராணி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? பணிச்சுமை கார ணமா? குடும்ப பிரச்சினையா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று போலீ சார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை மின்தடை
நாமக்கல், ஜூலை 9- நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் செவ்வா யன்று (நாளை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள் ளது. இதனால் வளையப் பட்டி, புதுப்பட்டி, மேட்டுப் பட்டி, வாழவந்தி, ரெட்டை யாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப் பட்டி, பொம்மசமுத்திரம், கணவாய்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர் உள் ளிட்ட பகுதிகளில் செவ்வா யன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சா ரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.