districts

img

வன்கொடுமைகளை தடுத்திட உரிய சட்டமியற்று

சேலம்,  டிச.1- பெண் குழந்தைகள், மாணவர் களின் மீதான வன்கொடுமைகளை தடுத்திட உரிய சட்டங்களை இயற் றிடக்கோரி சேலத்தில் மாதர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி, கல்லூரிகளில் பெண்  குழந்தைகள் மற்றும் மாணவர் களின் மீது நிகழ்த்தப்படும் வன்கொடு மைகளை தடுத்திட உரிய சட்டங் களை இயற்ற வேண்டும். பாலியல் வன்முறைகளுக்கு எதிராக கடுமை யான சட்டம் இயற்ற வேண்டும். ஆசிரியர்களுக்கும், மாணவர் களுக்கும் உளவியல் ஆலோச னைக்கு வகுப்புகளை நடத்திட வேண் டும். பள்ளி பாட புத்தகத்தில் பாலியல் கல்வி குறித்த பாடங்களை இணைதிட வேண்டும். விசாகா கமிட்டிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார் பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட தலைவர் டி.பரமேஸ் வரி தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் ஐ. ஞானசவுந்தரி, மாவட்ட துணைத் தலைவர் கே.ராஜாத்தி, துணை செயலாளர் எஸ்.எம்.தேவி, ஆர்.வைரமணி, சேலம் தாலுகா தலை வர் லட்சுமி, நங்கவள்ளி ஒன்றியச்  செயலாளர் கவிதா, சேலம் கிழக்கு  மாநகர கமிட்டி உறுப்பினர் ரேணுகா  உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.