districts

img

நுண்நிதி நிறுவனங்களின் அடாவடி ஆட்சியரிடம் மாதர் சங்கம் புகார்

கோவை, டிச.20- கட்டாய வசூல் செய்யும் நுண் நிதி நிறு வனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதுதொடர்பாக மாதர் சங்க மாவட்ட  செயலாளர் ஏ.ராதிகா, மாவட்ட பொருளா ளர் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப்பினர் கள் ராஜலட்சுமி, சுதா ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா  பெருந்தொற்றால் தொழில்கள் நலிவ டைந்து வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளியோர் மற்றும் நடுத் தர குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர். இந்த சூழலில் நுண் நிதி நிறுவனங் களிடம் கடன் பெற்ற பெண்களை நிறுவன ஊழியர்கள் மிரட்டும் சம்பவம் தமிழகம் முழு வதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத னால் பெண்கள் மன உளைச்சலுக்கு உள்ளா கினர். எனவே, நுண் நிதி நிறுவனங்களின்  அடாவடி வசூலை தடுத்து நிறுத்த வேண் டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனு வில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

;