districts

img

மாதர் சங்கத்தின் தொடர் முயற்சி துடியலூர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்

கோவை, செப்.24- கோவை துடியலூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு உயிரிழந்த சம்பவத்தில் மாதர் சங்கத்தின் தொடர் முயற்சியின் கார ணமாக அக்குடும்பத்திற்கு நிவா ரணத்தை பெற்றுகொடுத்தனர். கோவை துடியலூரில் 6 வயது சிறுமி கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது காணாமல் போனார். அடுத்த நாளான 2019 ஆம்  ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி வீட்டின் எதிரே உள்ள வீட்டின் பின்புறத்தில் இருந்து துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக சிறுமி கண்டெடுக்கப்பட்டார். இத னையடுத்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு நீதி கேட்டு மாதர் சங்கத்தினர் முதலில் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்ற வாளிகள் கைது செய்யப்பட்டனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதை நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவா ரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.  இதனையேற்று முதல் தவனை யாக ரூ3 லட்சம் வழங்கப்பட்டது. இதன்பின் தொடர்ச்சியான மாதர் சங்கத்தின் தலையீட்டின் காரணமாக வெள்ளியன்று மீதம் தொகையான ரூ.7 லட்சத்தை சிறுமியின் தாய் வனி தாவிடம் குழந்தைகள் நல ஆணை யர் மற்றும் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான துடியலூர் காவல் ஆய் வாளர் ஆகியோர் வழங்கினர். தாய் வனிதாவுடன் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜோதிமணி, செயலாளர் சுதா மற்றும் மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.ராஜலட்சுமி ஆகியோர் உட னிருந்தனர். மாதர் சங்கத்தின் தொடர்ச்சியான தலையீட்டால்  தனக்கு நீதியும், நிவாரணம் கிடைத்த தாக தாய் வனிதா உருக்கத்துடன் மாதர் சங்கத்தலைவர்களுக்கு நன்றி  தெரிவித்தார்.

;