ஈரோடு, ஜூலை 24- கிருஷ்ணாபுரத்தில் ரேசன் கடை அமைக்க வலியுறுத்தி அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட் டம், கெட்டிசமுத்திரம் கிராமம், கிருஷ் ணாபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள காட்டுக்கொட்டாய்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்கள் ரேசன் பொருட்கள் பெற 2 கி.மீ. தொலை வில் உள்ள அ.புதுப்பாளையத்திற் குச் செல்ல வேண்டியுளள்து. இத னால் உரிய நேரத்தில் ரேசன் பொருட் கள் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்படு கிறது. சில மாதங்கள் பொருட்கள் பெற முடியாத நிலையும் ஏற்படு கிறது. எனவே, கிருஷ்ணாபுரத்தில் தனியாக ரேசன் அமைக்க வலியு றுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை தலைவர் எஸ்.பூங்கொடி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பா. லலிதா, பொருளாளர் எஸ்.கீதா ஆகி யோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் ஆர்.மணிகண்டன், முன் னாள் மாவட்ட தலைவர் ஆர்.முருகே சன் உட்பட திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.