districts

img

விலைவாசி உயர்வு பற்றி மாதர் சங்கம் வாக்கெடுப்பு

திருப்பூர், நவ.24- மாதர் சங்கம் சார்பில், விலைவாசி உயர்வு குறித்து பொதுமக்களிடம் வாக் கெடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அனைந்திந்திய ஜனநாயக மாதர்  சங்கம் சார்பில், திருப்பூர் பழைய  பேருந்து நிலையத்தில் விலைவாசி உயர்வு பற்றி மக்களிடம் வாக்கெடுப்பு நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. இதில் மாதர் சங்கத் மாவட்டத் தலைவர் பவித்ரா தேவி, துணைத்தலைவர் பானு மதி, நிர்வாகிகள் ஜி.சாவித்திரி, ஆர்.மைதிலி, சகிலா, பா.லட்சுமி, பானுமதி, செல்வி மற்றும் மாவட்டக்குழு உறுப் பினர்கள் மினி, மேரி, லீலா கேத்ரின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெண்கள், ஆண்கள், கல்லூரி மாணவி கள், வியாபாரிகள் என 500க்கும் மேற் பட்டவர்களிடம் விலைவாசி உயர்வு சம்பந்தமாக அவர்களுடைய கருத்து சரியா? தவறா? என்ற இரண்டு பெட்டி கள் வைத்து கருத்துக்களை பதிவு செய்ய செய்தனர். இதில், விலைவாசி உயர்வு சரியானதே என எட்டு பேர் மட்டுமே வாக்குச்சீட்டு போட்டனர். மற் றவர்கள் அனைவரும் தவறு என பதிவு செய்தனர். விலைவாசி உயர்வு பற்றிய வாக்கெடுப்பு மக்களிடம் நல்ல வர வேற்பு பெற்றது. இதன் மூலம் ஏதா வது செய்ய முடியுமா? அரசு விலை வாசியை குறைக்குமா? என்ற கேள்வி மக்களிடமிருந்து வந்தது.