districts

img

அரூர் அருகே அருந்ததிய மாணவர் மர்ம மரணம்

தருமபுரி, டிச.3- அரூர் அருகே அருந்ததிய மாணவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சாலையோரம் இறந்து  கிடந்த சம்பவத்தில், உரிய விசா ரணை மேற்கொண்டு, பாதிக்கப் பட்ட பெற்றோருக்கு உரிய நியா யம் கிடைக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத் தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள வேடகட்டமடுவு கிரா மத்தைச் சேர்ந்த குமார் மகன் சுள் ளான் (20). அருந்ததிய சமூகத் தைச் சேர்ந்த இவர், அரூர் அருகே  உள்ள தனியார் கல்லூரியில் மூன் றாமாண்டு படித்து வருகிறார். இவர் அரசு கலைக்கல்லூரியில் மூன்றாமாண்டு படிந்து வரும் ஈட்டி யம்பட்டி கூட்ரோடு கிராமத்தைச் சேர்ந்த சபினா (20) என்ற பெண்ணை கடந்த மூன்று வருடங்க ளாக காதலித்து வந்ததாக கூறப்ப டுகிறது. இந்நிலையில், அப் பெண்ணை பார்ப்பதற்கு சொந்த  கிராமத்திலிருந்து அவரது ஊருக்கு  சுள்ளான் சென்றுள்ளார். ஆனால், அப்பெண்ணின் கிராமத்திற்கு முன் பாக உள்ள வேப்பம்பட்டி கிராமத் தின் சாலையோரத்தில் சுள்ளான்  இறந்து கிடந்துள்ளார். இதுகு றித்து தகவலறிந்த வாலிபரின்  குடும்பத்தார் மற்றும் உறவினர்கள்  சம்பவ இடத்திற்கு வந்து, அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில், மாண வனை அடித்து கொலை செய்தி ருக்கலாம் என்றும், மாணவன் இறப் பிற்கு நீதி வேண்டும் என வலியு றுத்தி அரூர் காவல் நிலையம் முன்பு  மாணவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அரூர் காவல்  துறையினர், மாணவர் இறப்பு குறித்து 174 சட்ட பிரிவின் கீழ்  சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலை யில், வேடகட்டமடுவு கிராமத்திற்கு  சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாநிலக்குழு உறுப்பின ரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளருமான ஆதவன் தீட்சண்யா, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.குமார், எஸ்.கே.கோவிந்தன் ஆகியோர் உயிரிழந்த மாணவ ரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், நடந்த சம்ப வம் குறித்து கேட்டறிந்தனர். அப்போது மாணவனின் பெற்றோர்,  எனது மகன் அடித்து கொலை  செய்யப்பட்டுள்ளார். எனது மகன்  இறப்புக்கு நியாயம் நீதி கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கேட்டுக்கொண்டார். எனவே, மாணவன் சுள்ளான் அடித்து கொலை செய்யப்பட்டார் என அவரது பெற்றோர் கூறும் நிலையில், காவல் துறையினர் முழுமையாக விசாரித்து, பாதிக் கப்பட்ட பெற்றோருக்கு நியாயம்  கிடைக்க மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரையும், மாவட்ட நிர்வா கத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.