districts

பெரியார் உணவகம் மீது தாக்குதல் மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

கோவை, செப்.15- காரமடை அருகே பெரியார் பெய ரில் துவங்கப்பட்ட உணவத்தின் உரி மையாளரை தாக்கி, கடையை சூறை யாடிய இந்து முன்னணி அமைப் பின் இழிசெயலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது, கடந்த செவ் வாயன்று இரவு மேட்டுப்பாளையம் தாலூகா, காரமடை நகராட்சிக்குட் பட்ட கண்ணம்பாளையத்தில் பெரி யார் பெயரில் உணவகம் திறக்கப்பட இருந்தது. அங்குள்ள சமூக விரோ திகள் “பெரியார் பெயரை எப்படி வைக்கலாம்” என்று கடை உரிமை யாளரைத் தாக்கியதோடு, கடையை யும் அடித்து நொறுக்கி உள்ளார்கள். இந்த இழிசெயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். சமூக விரோதி களின் இச்செயல் வகுப்பு வாதத்தின் பெயரால் நடத்தப்பட்டிருப்பது கண்டு கோவை மக்கள் அதிர்ச்சி யடைந்துள்ளார்கள். மாவட்ட நிர்வா கமும், காவல் துறையும் இதோடு தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதோடு அவர்கள் மீது கடுமையான வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். தமிழக அரசும், கோவை மாவட்ட நிர்வாகமும் இதுபோன்ற அசம்பா விதங்களை சட்டம் ஒழுங்கு பிரச்ச னையாக மட்டும் பார்க்காமல், தாக்கு தலுக்குள்ளான கடை உரிமையாள ருக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்ப தோடு, ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  முன்னதாக பெரியார் உணவ கத்தின் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணியினரை குண்டர் சட்டத் தில் கைது செய்ய வேண்டும் என  வலியுறுத்தி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அம்பேத் கரிய, பெரியாரிய, மார்க்சிய அமைப் பின் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

;