districts

img

ஏழைகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பட்ஜெட் திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி பிரச்சார இயக்கம்

திருப்பூர், மார்ச் 29 – ஏழை மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய  பாரதிய ஜனதா அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் பல்வேறு இடங்களில் மக்கள் சந்திப்பு தெரு முனைப் பிரச்சார இயக்கம் நடத்தப்பட் டது. திருப்பூர் வடக்கு மாநகரில் எஸ்.வி. காலனி, எம்.எஸ்.நகர், பி.என்.பாளை யம், கோல்டன் நகர் மற்றும் லட்சுமி நகர்  ஆகிய பகுதிகளில் செவ்வாயன்று மக் கள் சந்திப்பு தெருமுனை பிரச்சார இயக்கம் நடைபெற்றது.  இதில் வடக்கு மாநகரச் செயலாளர்  பி.ஆர்.கணேசன், மாவட்டக்குழு உறுப் பினர் ஆர்.மைதிலி, மாநகரக்குழு உறுப் பினர்கள் பா.சௌந்தரராசன், எஸ்.ராஜேந்திரன், மனோகரன், ஆர்.நந்தகோ பால், துரை சம்பத், ராஜேஷ், பாலகுமார்  உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு மையங்களில் உரையாற்றினர். இதில்  கட்சி அணியினர் கலந்து கொண்டனர். திருப்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பிச்சம்பாளையம் புதூர்,

சக்தி நகர், ஸ்ரீநகர், நெருப்பெரிச்சல் பகுதி கிளைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று, மோடி  அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சார இயக்கத்தில் கட்சி யின் மாவட்ட செயலாளர் செ.முத்துக் கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, ஒன்றியக்குழு உறுப்பி னர் பி.மகாலிங்கம், சி.பானுமதி, மகேஸ் வரன், பாண்டியன், கட்டுமான தொழிற் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் ராஜன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர்கள் மங்குலட்சுமி, சந்திரன், பாலசுப்ரமணியம், பொன்னுசாமி, ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். திருப்பூர் தெற்கு மாநகரத்துக்குட் பட்ட கருவம்பாளையம், வெடத்தலாங் காடு பகுதியில் ஒன்றிய அரசின் பட் ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனைக் கூட் டம் செவ்வாயன்று மாலை நடைபெற் றது. ஆட்டோ தொழிலாளர் சங்க செய லாளர் சிவராமன் தலைமை ஏற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகர கமிட்டி உறுப்பினர்கள் பி.பாலன், எஸ்.பானு மதி, பனியன் தொழிலாளர் சங்க  ஏரியா கமிட்டி செயலாளர் ஆர்.சக்தி வேல், மாவட்டகுழு உறுப்பினர் எஸ். சுந்தரம், தெற்கு மாநகர செயலாளர் த. ஜெயபால் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.