சேலம், ஜூலை 4- அடிப்படை வசதிகளை ஏற் படுத்தி தர வலியுறுத்தி பெத்தநாயக் கன்பாளையம் பேரூராட்சி அலுவ லகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் செவ்வாயன்று நடை பெற்றது. சேலம் மாவட்டம், பெத்தநாயக் கன்பாளையம் தாலுகாவிற்குட்பட்ட ஐஸ்வரியம் பகுதியில் கழிவுநீர் சாக் கடை அமைக்க நிதி ஒதுக்கியும் பணி கள் துவங்கப்படவில்லை. மேலும், இப்பகுதியில் பூங்காவிற்கு கட்ட மைப்பு நிதியை வேறு பகுதிக்கு மாற்றியதை கண்டித்தும், ஆரியூர் பழைய கறிக்கடை வீதி குண்டும், குழியுமாக உள்ள சாலையை செப் பனிட வேண்டும். மேலும், கால்நடை மருத்துவமனை பின்புறம் கழிவறை கட்டித்தர வலியுறுத்தியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்ட குழு உறுப்பினர் க.பெருமா தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் கட்சியின் மாவட்டச் செய லாளர் மேவை சண்முகராஜா, செயற் குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி. எம்.குணசேகரன், கவுன்சிலர் ராமசாமி, வட்டக்குழு உறுப்பினர்கள் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர்.