தருமபுரி, ஜூன் 2- பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராக தமிழ் நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சுதந்திர பாலஸ்தீன நாட்டில் இஸ் ரேல் ராணுவம் கடந்தாண்டு அக்டோபர் முதல் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்த நடவடிக்கையால் 36 ஆயிரம் பேருக்கு மேல் பாலஸ்தீ னர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மே 26 ஆம் தேதியன்று ரஃபாவில் அகதி கள் முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டார்கள். அதில், பாதிக்கும் மேற்ப்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவார். சுதந்திர பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயி றன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ. குமார் தலைமை வகித்தார். இதில் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிசு பாலன், திமுக நகரச் செயலாளர் நாட் டான் மாது, மதிமுக மாவட்டச் செயலா ளர் கோ.ராமதாஸ், விசிக மாவட்டச் செயலாளர் த.கு.பாண்டியன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் என்.சுபேதார், இந்திய யூனியன் முஸ் லிம் லீக் மாவட்டச் செயலாளர் சிராஜு தீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோ.அருச்சுணன், எம்.முத்து, வே. விஸ்வநாதன், எஸ்.கிரைஸாமேரி, ஆர். மல்லிகா, ஒன்றியச் செயலாளர்கள் ஆர்.சின்னசாமி, தி.வ.தனுஷன், எஸ்.எஸ்.சின்னராஜ் மற்றும் காங்கிரஸ், சிபிஐ (எம்எல்) நிர்வாகிகள் உட்பட திர ளானோர் கலந்து கொண்டனர். முடி வில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என். கந்தசாமி நன்றி கூறினார். கோவை கோவை தெற்கு வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் அ.ராதிகா தலைமை வகித்தார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யு.கே. வெள்ளிங்கிரி, சிபிஎம் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் யு.கே.சிவஞானம், எஸ்.கிருஷ்ண மூர்த்தி, அஜய்குமார், வி.ஆர்.பழனிச் சாமி உட்பட பலர் கலந்து கொண்ட னர். நீலகிரி நீலகிரி மாவட்டம், தேவாலா பகுதி யில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பந்தலூர் ஏரியா கமிட்டி சார்பில் ஞாயி றன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஏரியா கமிட்டி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வர்கீஸ், ஏரியா கமிட்டி உறுப்பினர் மாறன், வாலி பர் சங்க செயலாளர் ரவிக்குமார், தலை வர் பெரியார் மணிகண்டன், பொருளா ளர் ஷெரிப், கிளைச் செயலாளர் அசைன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோட்டில் அண்ணா சிலை அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகரக் குழு உறுப்பினர் எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.கணேஷ பாண்டியன், பி.ஜெயமணி, ஏ. ரங்கசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ. ஆதிநாராயணன், நகரச் செயலாளர் ஐ. ராயப்பன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். குமாரபாளையம், ஆனங்கூர் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, நகரச் செயலாளர் என்.சக்திவேல் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். அசோகன், மாவட்டக்குழு உறுப்பினர் கள் சி.துரைசாமி, எம்.ஆர்.முருகேசன், முன்னாள் நகரச் செயலாளர் எஸ்.ஆறு முகம் உட்பட திரளானோர் கலந்து கொண்டு, இஸ்ரேல் அரசிற்கெதிரான முழக்கமிட்டனர். பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். பகுதியில் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.முத்துக் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியச் செய லாளர் ஆர்.ரவி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் அலமேலு, கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், விசைத்தறித் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் எ.அசன், பொருளாளர் முருகேசன் ஆ கியோர் கலந்து கொண்டனர். எலச்சி பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி.தேவ ராஜன் தலைமை வகித்தார். இதில் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு. சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் பழனியம்மாள், மோட்டார் சங்கம் மாவட்டப் பொருளாளர் சக்திவேல், ஒன் றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போரில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி
ஈரோடு தாலுகா, மேற்கு புதூரில் பாலர் பூங்கா செயல் பட்டு வருகிறது. இதன் பொறுப்பாளர் ரஞ்சித்குமார் ஏற்பாட் டில் சர்வதேச குழந் தைகள் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, சர்வதேச அளவில் போரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. “போர்களை கைவிட்டு, சமாதானத்தை கடைபிடிக்க வேண்டும்” என வலியுறுத்தி மழலை கள் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.