districts

img

சுமைப்பணியாளர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம்

ஈரோடு, ஜுலை 15- ஈரோடு மாவட்டத்தில் சுமைப்பணி தொழிலாளர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம் மற்றும் தர்ணாவில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2014 ஜுலை  1ஆம் தேதி ஒப்பந்தப்படி 2016 முதல் 41  விழுக்காடு கூலி உயர்வு, தினசரி டீ, இரவு  பணிக்கு உணவு செலவிற்கு ரூ.75 என  வழங்கப்பட வேண்டும். அதன்படி தொழிற் சங்கத் தரப்பினர் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசனை அணுகினர். ஆனால் அதன்  செயலாளர் பிங்கலன் ஒப்பந்தம் போட மறுத் தார். இதனையடுத்து கொரோனா உள் ளிட்ட பல காரணங்களால் சுமைப்பணி தொழி லாளர்களின் கூலி பிரச்சனை தள்ளிப் போனது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட மத்திய சுமைதூக்குவோர் மத்திய சங்கம், ஈரோடு மாவட்ட சுமைப்பணியாளர்கள் சங்கம், தமிழக பொது தொழிலாளர்கள் மத்திய சங்கம், அண்ணா தொழிற்சங்க பேரவை, பாட்டாளி தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர் முன் னேற்ற சங்கம் மற்றும் மகாத்மா காந்தியடிகள் சுமைதூக்குவோர் மத்திய சங்கத்தினர் இணைந்து கடந்த வியாழன் முதல்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 ஆவது நாளாக நடைபெறும் வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா நடைபெற்றது. ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசி யேசன் மற்றும் ரெகுலர் லாரி சர்வீஸ் சங்க  நிர்வாகத் தரப்பு இயற்கை நீதி கோட்பாட் டுக்கு எதிராக செயல்படுகிறது. தவிர்க்க முடியாமல் இந்நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தொழிலாளர் வாழ் விற்குப் பாதகம் ஏற்படாமலும், சுமூக நல்லு றவிற்கு பங்கம் ஏற்படாமலும் பேசி தீர்வு உடன்பாட்டிற்கு முன்வர வேண்டுமென தொழிற்சங்கத்தினர் விரும்புகின்றனர். சுமைப்பணி தொழிலாளர்களின் போராட் டத்தினை  சிஐடியு மாவட்ட தலைவர் எஸ். சுப்ரமணியன், செயலாளர் எச்.ஸ்ரீராம், பி. சுந்தரராஜன் மற்றும் பலர் வாழ்த்தி பேசி னர்.