districts

img

“பெரியாரை வாசிப்போம்” பெருந்திரள் வாசிப்பு 6 லட்சம் பேர் பங்கேற்று சாதனை

சேலம், செப்.15- பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 6 லட்சம் பேர் கலந்து கொண்ட பெரியாரை வாசிப்போம் என்ற சாதனை நிகழ்வு அனை வரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “பெரியாரை வாசிப்போம்” என்ற  மாணவர் பெருந்திரள் வாசிப்பு நிகழ்வு நடை பெற்றது. இதனை பல்கலைக்கழக துணை வேந்தர் ரா.ஜெகநாதன் துவக்கி வைத்தார். இதில், சேலம் மாவட்ட வருவாய் அலுவ லர் பி.மேனகா, மாவட்ட முதன்மை கல்வி  அலுவலர் ரா.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துணைவேந் தர் ஜெகநாதன் பேசுகையில், மொத்தமுள்ள 609 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி களில் பயிலுகின்ற 4 லட்சத்து ஓராயிரத்து 378 மாணவ, மாணவியர்கள், 18 ஆயிரத்து 285 ஆசிரியர்கள், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரி களில் பயிலுகின்ற ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 313 மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 5 லட் சத்து 96 ஆயிரத்து 976 பேர் “பெரியாரை வாசிப்போம்” என்ற மாணவர் பெருந்திரள் வாசிப்பு நிகழ்வில் பங்கேற்றனர். இந்த வாசிப்பானது மாணவர்களிடையே வாசிப்பு திறனை மேம்படுத்தவும், இளைய சமுதாயத்தினரிடையே அரிதாகிப்போன புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை மேம் படுத்தவும், பெரியாரின் கொள்கைகளை மாணவர் மனதில் விதைக்கவும் இந்நிகழ்வு ஓர் உந்து சக்தியாக இருக்கும் என்று அவர்  கூறினார். மேலும், ஏறத்தாழ 6 லட்சம் பேர்  ஒரே நேரத்தில் பெரியார் குறித்த உரையை வாசித்தது மிகப்பெரிய வரலாற்று சாதனை யாகும் எனவும் தெரிவித்தார்.