districts

img

குறு வனமாக மாறும் குள்ளம்பாளையம் பள்ளி

திருப்பூர், அக். 2- திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே குள்ளம் பாளையம் அரசு உதவி  பெறும் பள்ளி, அப்பள்ளி யின் தலைமை ஆசிரியரின் முயற்சியால்  குறு வனமாக  மாறி வருகிறது.  அந்த பள்ளி தலைமை ஆசிரியர் பிரியதர்ஷினியின் மரக்கன்றுகள் நடும் முயற்சி யை பாராட்டி அவருக்கு  பசுமை ஆசிரியர் விருது வழங்கப்பட் டுள்ளது.

பசுமை ஆசிரியர் விருது

தமிழகம் முழுவதும் 50 பசுமை ஆசிரியர் களைத் தேர்வு செய்து  அண்மையில், தரும புரி பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் அவர்களுக்கு பசுமை ஆசிரியர் விருது வழங்கினர். இதில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகா, ஊதியூர் அஞ்சல், குள்ளம்பாளையம் அரசு நிதி உதவி  பெறும் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் து.பிரிய தர்ஷினியும் ஒருவர். விருது வழங்கும் நிகழ்வில் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட  பொறியாளர், மருதம் நெல்லி கல்வி நிறுவ னத்தின் தலைவர் மற்றும் பசுமை சாம்பியன்  சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப் பித்தனர். 

மரம் நடும் முயற்சி

தலைமையாசிரியர் பிரியதர்ஷினி 2016 ஆம் ஆண்டு முதன்முதலாக ஊதியூர் வனத் துறை மூலமாக பத்து மரக்கன்றுகள் பெற்று  குள்ளம்பாளையம் பள்ளியில் நடவு செய்தார். அதன் பின்னர் மரங்களின் மேல்  கொண்ட அன்பால், தாராபுரம் அமராவதி வனத்துறை மூலமாக 100 மரக்கன்றுகள் பெற்று மகாத்மா காந்தி நற்பணி மன்றம் உறுப்பினர்கள் கொண்டு பள்ளியில் நடவு செய்யப்பெற்றது. பின்னர் காங்கேயம் துளிகள் அமைப்பு மூலமாக 20, 30, 40 என  மரக்கன்றுகள் பெற்று பள்ளியில் நடப் பெற்றது. பின்பு காங்கேயம் பூக்கள் அறக் கட்டளை மூலமாக மரக்கன்றுகள், விதை கள் பெற்று குழந்தைகளுக்கு வழங்கப் பட்டது. குழந்தைகள் தினம் அன்று மரங் களாக வளர்த்து கொண்டு வரும் குழந்தை களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் கொடுத்து ஊக்கப்படுத்தப்படுகிறது.

300 மரங்கள்

இது வரை குள்ளம்பாளையம் பள்ளி வளாகத்தில் 260 மரங்கள், அருகில் உள்ள  நர்சரி பள்ளியில் 25 மரக்கன்றுகள், மேலும்  அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத் தில் 20 மரங்கள் நடப்பட்டு வளர்ந்து வரு கிறது.  பஞ்சாயத்து மூலமாக 1 மணி நேரம் மட்டுமே தண்ணீர் வசதி உள்ளது. வேறு வசதி  இல்லை. குழந்தைகளின் குடிநீர், கழிப்பிட பயன்பாடு, சத்துணவு சமைத்தல் பயன் பாடு போக மீதம் உள்ள தண்ணீரை பயன் படுத்தி மரக்கன்றுகள் வளர்த்து வருகிறார். சிறிது காலத்தில் இப்பள்ளி குறு வனமாக மாறிவிடும் என்று ஆசிரியர் பிரியதர்ஷினி தெரிவித்தார்.