districts

img

சுகாதார சீர்கேட்டில் குடிமங்கலம் அரசு மருத்துவமனை

உடுமலை, டிச.11- குடிமங்கலம் அரசு மருத்து வமனை சுகாதார சீர்கேட்டில் திகழ் வதை கண்டித்து சிபிஎம், சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. குடிமங்கலம் அரசு மருத்துவ மனை முழுவதும் புதர் மண்டி, விஷப் பூச்சிகளின் நடமாட்டம் மிகுந்த பகுதி யாக காணப்படுகிறது. இதனால் நோயாளிகள், பொதுமக்கள் அச்சத் துடனே சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலை இருந்து வருகிறது. ஆகவே,  மருத்துவமனை சுகாதாரமாக வைத் திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவர்கள், பணி யாளர்கள் இருப்பதை உறுதிப்ப டுத்த வேண்டும். நோயாளிகளிடம் பணம் கேட்டு துன்புறுத்தும் பணியா ளர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி குடிமங்கலம் அரசு மருத்துவமனை முன்பு மார்க் சிஸ்ட் கட்சி, சிஐடியு சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிட்டுச் சாமி தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் சி.ஜெயப்பிரகாசம், சாலைப் போக்குவரத்து சம்மேளன மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.சுதாசுப்பிர மணியம், சிபிஎம் மாவட்டக்குழு உறுப் பினர் வெ.ரங்கநாதன், கமிட்டி உறுப்பி னர்கள் ஓம்பிரகாஷ், சுந்தர்ராஜ் ஆகி யோர்  கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திர ளானோர் கலந்து கொண்டு கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்க மிட்டனர்.

;