districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்

 தருமபுரி, ஜூலை 19- தருமபுரி அருகில் காதல் திருமணம் செய்த தம்பதியி னரை தாக்கிவிட்டு பெண்ணை கடத்தி சென்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி மூக்கானஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மகன் விக்னேஷ்  (29). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வரு கிறார். விக்னேசுக்கும், பாலக்கோடு மண்டுகொட்டாய் பகுதி யைச் சேர்ந்த மதுஸ்ரீ (21) என்ற பெண்ணு காதலித்து வந்துள் ளனர். இந்நிலையில், மதுஸ்ரீக்கு அவரது வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதன்காரணமாக விக்னேசும், மதுஸ்ரீயும் காதல் திருமணம் செய்து கொண் டனர். இதனையடுத்து, தனது மகள் காணவில்லை என்று அவரது தாய் கலைவாணி (45) பாலக்கோடு காவல் நிலை யத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் விசா ரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கலைவாணி போலீசில்  புகார் கொடுத்ததை அறிந்த மதுஸ்ரீ தனது காதல் கணவருடன்  பாலக்கோடு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம டைந்தனர்.  அப்போது, போலீசார் விக்னேஷ் மற்றும் மதுஸ்ரீன் இரு வீட்டாரையும் அழைத்து சமாதானம் பேச்சு வார்த்தை நடத் தினர். இதில் பெண் வீட்டார் இந்த காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கலைவாணி தன்னுடன்  வருமாறு மதுஸ்ரீயை அழைத்தார். ஆனால், அவர் பெற் றோருடன் செல்லாமல் தனது கணவருடன் காரில் ஏறி வீட் டிற்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து விக்னேசும், மதுஸ்ரீயும் காரில் வீடு திரும்பி  சென்றபோது வழியில் பெண்வீட்டாரின் உறவினர்கள் திடீ ரென்று வண்டியை வழிமறித்து விக்னேஷை சரமாரியாக தாக்கிவிட்டு மதுஸ்ரீயை கடத்தி சென்றுவிட்டனர். இதுகுறித்து விக்னேஷ் பாலக்கோடு காவல் நிலை யத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் காதல் திருமணம் செய்ததால் மதுஸ்ரீயை கடத்தி சென்றதாக  அவரது தாய் கலைவாணி, உறவினர்கள் சீனிவாசன் (48),  கோபாலகிருஷ்ணன் (45), கீதா (47) ஆகிய 4 பேர் மீது வழக்குப்  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்தது

ஈரோடு, ஜூலை 19-  பருவ மழை பொய்த்துப்போன நிலையில், பவானிசாகர்  அணையின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருகிறது. ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர்  ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வா தாரமாகவும் விளங் குவது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் 2  லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.  105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில்  பரவலாக மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதி கரிக்க தொடங்கியது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக  நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது.

போதை நபர்களால் தொல்லை-பொதுமக்கள் முற்றுகை

சேலம், ஜூலை 19- சேலம் அருகே கஞ்சா, மது பிரியர்களால்  தொல்லை ஏற்படுவதாக கூறி சேலம் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.  வாய்க்கால் பட்டறை அருகே வால் காடு  ரோட்டில் அரசு பள்ளி அருகில் மாநகராட்சி சொந்தமான 10 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த  பகுதியில் சமூக விரோதிகள் கஞ்சா விற் பனை, மது குடித்தும் வருகின்றனர்.  இந்த நபர்கள், அப்பகுதியில் நடந்து  செல்லும் பெண்கள் உட்பட அனைவரையும் தகாத வார்த்தையில் பேசியும், மிரட்டியும் வருகின்றனர். குறிப்பாக, கடந்த 19 ஆம்  தேதியன்று 14 வயது சிறுமியை தகாத வார்த் தையில் பேசி உள்ளனர். இதையறிந்த அப் பகுதி மக்கள், போதை நபர்களை கண்டித் துள்ளனர். ஆனால், பொதுமக்களிடம் கொலை மிரட்டல் விடுத்து, சிலரை கடுமை யாக தாக்கியும் உள்ளனர். இது குறித்து  காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப் பட்டன. ஆனால் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை.  எனவே, கஞ்சா விற்பனை மற்றும் மது  போதையில் ரகளையில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் அச்ச மின்றி வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்  என வலியுறுத்தி இந்த முற்றுகை போராட் டம் நடைபெற்றது. இதனையடுத்து, காவல் துறையினர் சமாதானப்படுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர். 

ஆக்கிரமிப்பு அகற்ற அளவிடும் பணி தீவிரம்

பென்னாகரம், ஜூலை 19- ஏரியூர் அருகே சாலையை ஆக்கிரமித்து  கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றுவதற் காக நில அளவைப் பணியினை வருவாய்த் துறையினர் மேற்கொண்டனர். ஏரியூர் அருகே சிகரல அள்ளி பகுதியில் 5  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வரு கின்றனர். கிராமப் பகுதியில் உள்ள சாலை யினை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டி யுள்ளனர். இதனால், அவசர காலங்களில் வாகனங்கள் வர முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதி பதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி பொது  வழிப் பாதையை ஏற்படுத்தித் தர வேண்டும்  என உத்தரவிட்டனர். இந்நிலையில், பென்னாகரம் வட்டாட் சியர் சௌகத் அலி தலைமையிலான வரு வாய்த் துறையினர் சிகரல அள்ளி பகுதி யில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவிடும் பணியினை மேற்கொண்டனர். இந்நிலையில், சிகரெல்லி பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ள பகுதிகளை அளவிடு வதற்கு பதிலாக, வருவாய்த்துறை அதிகாரி கள் வேறு இடங்களை அளவிடும் பணியை  செய்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுப் படி, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பு பகுதிகளில் அளவீடு  செய்து அகற்ற நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் கண்துடைப்பில் ஈடுபடுவதாக சமூக செயற்பட்டாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும்,  ஆக்கிரமிப்புகளை முறையாக அளவீடு செய்து ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடி யிருப்புகளில் குறியீடுகள் அமைத்து அகற்ற  வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 

சுகாதாரப்பணியாளர்களுக்கு ஊதியம் சிபிஎம் கவுன்சிலர் வலியுறுத்தல்

அவிநாசி, ஜூலை 19- அவிநாசி ஊராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் சுகா தாரப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள் ளது. உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என  ஊராட்சி மன்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலர்  வலியுறுத்தியுள்ளார். அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் புத னன்று ஒன்றிய சேர்மன் ஜெகதீசன் தலைமையில் நடைபெற் றது. ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  உறுப்பினர் முத்துசாமி பேசுகையில், வஞ்சிபாளையம் ரயில்வே மேம்பாலத்திலுள்ள இரும்புச் சட்டம்  ஆங்கில்  பழுதடைந்து நீண்ட காலம் சென்றுவிட்டது இது குறித்து பல முறை தெரிவித்தும் இதுவரை சீரமைக்கப்படவில்லை உடனடியாக சீரமைக்க வேண்டும். அவிநாசி சுற்றுவட்டார  பகுதிகளில், அரசு நிர்ணயித்தகட்டடத்தின் அளவில் தொழிற் சாலைகள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இத்தொழிற் சாலைகள் உரிமம் பெற்றுள்ளதா? எத்தனை தொழிலாளர் கள் வேலை செய்கிறார்கள், தொழிலாளர்களுக்கு உண் டான சலுகைகள் கிடைக்கப்படுகிறதா? போன்ற விபரங்கள்  பலமுறை கேட்கப்படும் இதுவரை தெரிவிக்கப்பட வில்லை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.  அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளி களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு, ஊதியம் வழங்காமல் பல மாதங்கள் நிலுவையில் உள்ளது உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்று தெரிவித்து வந்தேன். இதுவரை, வழங்கவில்லை. போன கூட்டத்தில் ஒன்றிய பொது நிதியி லிருந்து வழங்குவதாக தெரிவித்தீர்கள். அதுவும் நடைபெற வில்லை விரைவில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண் டும், என்றார். இதேபோன்று, திமுக உறுப்பினர் சேது மாதவன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய ஊராட்சி மன்ற தலைவர், மன்ற உறுப்பி னர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றி தருவ தாக உறுதியளித்தார்.

லாரி மோதி இளம் பெண் பலி

லாரி மோதி இளம் பெண் பலி அவிநாசி, ஜூலை 19-  அவிநாசியில் லாரி மோதிய விபத்தில், இருசக்கர வாக னத்தில் பணிக்கு சென்ற பட்டதாரி இளம் பெண் சம்பவ இடத்தில் பலியானார். அவிநாசியை அடுத்த எம்.நாதம் பாளையம் பகுதியைச் சேர்ந்த  ஆறுமுகம் மகள் ரம்யா (21) பட்டதாரியான இவர் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கொரியர் அலுவ லகத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல வீட்டிலி ருந்து தனது இருசக்கர வாகனத்தில், ரம்யா அவிநாசி சீனி வாசபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரம்யா பலியானார். அதனை அடுத்து தகவல் அறிந்த அவிநாசி போலீசார் ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடுமலை அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை  நீர்மட்டம்: 21.39/60 அடி  வெளியேற்றம்: 28 கனஅடி மழையளவு: 4 மிமீ அமராவதி அணை  நீர்மட்டம்: 46.89/90அடி. நீர்வரத்து: 288கனஅடி வெளியேற்றம்: 235 கனஅடி

குடிநீர் வழங்குவதில் குளறுபடி

உடுமலை, ஜூலை 19- திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், பெரிய வாளவாடி ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை  தொடர்பாக கடந்த இரண்டு மாதாங்களில் இரண்டுமுறை போராட்டம், மறியல் நடைபெற்று அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், 19 ஆம் தேதி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வாளவாடி ஊராட்சிக்கு குடிநீர் வரும்  பிரதான குழாயில் இருந்து பகிர்மானக்திற்கு ஏற்கனவே இருக் கும் 3,1/2 இன்ஞ்ச் வால்வினை  குறைத்து 1 இன்ஞ்ச் வால்வு பொருத்துவதற்கு வந்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, அதிகாரிகள், போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, உட னடியாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் குவித்து, பிரதான குழாயில் வால்வு பொருத்த முயற்சி செய்கையில், போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், குடிநீர் வடிகால் அதி காரிகளை மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  இதனையடுத்து, 2 இன்ஞ்ச் வால்வை பொருத்திவிட்டு குடி நீர் வடிகால்வாரிய அதிகாரிகள் சென்றதாக கூறப்படுகிறது. குடிநீர் வடிகால் வாரியமும், உடுமலை ஊராட்சி நிர்வாகம் முறையான தகவல்களை பொதுமக்களுக்கு தெரியாமல் அவர்களாகவே பேச்சு வார்த்தை நடத்தி செல்கின்றனர் என  பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறைதீர் கூட்டம்

உடுமலை, ஜூலை 19- உடுமலையில் விவசாயி கள் குறைதீர்ப்புக்கூட்டம் வெள்ளியன்று நடைபெறும் என மாவட்ட நிர்வாக செய் திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. உடுமலை கோட்டாட் சியர் அலுவகத்தின் கூட்டரங் கில் 21 ஆம் தேதி வெள்ளி யன்று காலை 11  மணிக்கு வருவாய் கோட்டசியர் ஜஸ் வந்த் கண்ணன் தலைமை யில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள் ளும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில், உடுமலை மற்றும் மடத்துக்குளம்  விவ சாயிகள் கலந்து கொண்டு  பயன்பெறுமாறு வருவாய் கோட்டாட்சியர் தெரிவித் துள்ளார்.

லிப்ட் கேட்டு சென்ற கல்லூரி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபர் கைது

நாமக்கல், ஜூலை 19- ராசிபுரம் ஆண்டகளூர் கேட்டில் நின்று லிப்ட் கேட்ட  கல்லூரி மாணவியை, இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வாலிபரை போலீ சார் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் ராசிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில், முதலாமாண்டு எம்பிஏ படித்து வருகிறார். இந்நிலையில், செவ்வாயன்று காலை கரூரிலிருந்து ஆண்டகளூர் கேட் பகுதிக்கு பேருந்தில் வந்து இறங்கிய அந்த மாணவி, கல்லூரிக்கு நேரம் ஆனதால் அவ் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவரி டம் கல்லூரி வரை லிப்ட் கேட்டுள்ளார். மாணவியை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்ற அந்த இளைஞர் தன் அக்கா  பிரசவ வழியில் துடித்துக் கொண்டிருப்பதாக கூறி, அணைப் பாளையம் புறவழிச்சாலை வழியாக சிங்களாந்தபுரம் அழைத் துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்குள்ள மலை கரடு அடி வாரப் பகுதிக்கு அம்மாணவியை அழைத்துச் சென்ற அந்த  நபர், வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தாக கூறப்படுகிறது. மேலும், மாணவியிடமிருந்து 140 ரூபாய் மற்றும் அலைபேசியை பறிமுதல் செய்து கொண்டு, ஆடையே இல்லாமல் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதைத்தொடர்ந்து மாணவியின் கூச்சலிட்டதை கேட்ட வந்த அக்கம் பக்கத்தினர் உதவியுடன்  ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகாரளித்தார். அதன்பேரில் தனிப் படை அமைக்கப்பட்டு, போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவு களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் தொப்பப்பட்டி, ராஜவீதி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்ற  மணிகண்டன் (26) என்பவர், மாணவியிடம் தகாத முறையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து ராசிபுரம் சரக  காவல் துணை கண்காணிப்பாளர் டி.கே.கே.செந்தில்குமார் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் புகார் கொடுக்கப் பட்ட மூன்று மணி நேரத்தில் அவரை கைது செய்தனர்.

தாயிடம் கோவித்துக்கொண்டு கோவை வந்த சிறுவன் மீட்பு

கோவை, ஜூலை 19- தாயிடம் கோபித்துக் கொண்டு கோவை வந்த தேனி மாவட் டத்தைச் சேர்ந்த சிறுவனை ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டு, போலீ சாரிடம் ஒப்படைத்தனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்  நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன்  ஹரிகரன் (15). இவர் வத்தலகுண்டில் உள்ள விடுதியில் தங்கி  அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந் நிலையில், வீட்டிலிருந்த ஹரிஹரன் படிக்காமல் விளை யாடிக் கொண்டிருந்தார். இதனால், அவரது தாய் கண்டித்து  அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி தேனியில் இருந்து திருப் பூருக்கு சென்றார். பின்னர் திருப்பூரில் இருந்து கோவை, வடவள்ளிக்கு வந்த அவர் எங்கு செல்வது என்று தெரியா மல் சுற்றித் திரிந்தார். இதனை பார்த்த அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை மீட்டு காவல் நிலையம் அழைத் துச் சென்றனர். தொடர்ந்து போலீசார் சிறுவனின் பெற்றோ ருக்கு தகவல் தெரிவித்தனர். பெற்றோர் வந்ததும் சிறுவனை, ஒப்படைக்கும் பணியை போலீசார் மேற்கொண்டனர்.

கத்தி முனையில் பணம் பறிப்பு

கோவை, ஜூலை 19- பீளமேடு அருகே சாலையில் நடத்து சென்று கொண்டி ருந்தவரிடம், கத்தி முனையில் பணம் பறித்த நபரை காவல் துறையின் கைது செய்தனர். கோவை மாவட்டம், பீளமேடு, விகே சாலையைச் சேர்ந்த வர் ராஜா (21). தனியார் நிறுவன ஊழியரான இவர், விகே  சாலையிலுள்ள மின்மயானம் அருகே நடந்து சென்று கொண் டிருந்தார். அப்போது எதிரே வந்த வாலிபர் ஒருவர், திடீரென ராஜாவை வழிமறித்து பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத் ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்தி ருந்த கத்தியை காட்டி மிரட்டி ராஜாவிடமிருந்த ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து ராஜா  பீளமேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில்,  கத்தி முனையில் பணம் பறித்தது பீளமேடு, பெரியமாரியம் மன் கோயில் தெருவைச் சேர்ந்த அஸ்வின் (22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பு

கோவை, ஜூலை 19- சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள பெரிய கவுண்டபுரத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகள் கோமதி (23). இவர் கோவையில் தங்கி தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கோமதி ராமநாதபுரம் - திருச்சி சாலையில் செல்போனில் பேசிய படி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 அடையாளம் தெரி யாத நபர்கள், திடீரென கோமதியின் செல்போனை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து கோமதி ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புலி தாக்கி 2 பசுமாடுகள் பலி

உதகை, ஜூலை 19- நீலகிரி மாவட்டம் உதகை, கோத்தகிரி, குன்னூர், கூடலூர்,  ஓவேலி, மஞ்சூர் உள்பட 65 சதவிதத்திற்கும் அதிகமாக வனப் பகுதிகளை கொண்டுள்ளது. இதற்கிடையே வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு, வழித்தடங்கள் அழிப்பு உள்பட பல்வேறு கார ணங்களால் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து  வனவிலங்குகள் அதிகளவில் ஊருக்குள் நுழையும் நிலை  உள்ளது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதி களில் கரடி, சிறுத்தை நடமாட்டமும், கூடலூர் பகுதியில் காட்டு  யானை நடமாட்டமும், உதகை பகுதியில் புலி நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், எச்பிஎப் பகுதியில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்து நகர் பகுதியைச் சேர்ந்த பரமேஷ், சதீஷ் ஆகியோரின் 2 பசுமாடு கள் மேச்சலுக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்று பார்த்தனர் அப்போது புலி  தாக்கியதில் 2 பசுமாடுகள் இறந்து கிடந்தது. இந்த சம்பவம்  அந்த பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எச்.பி.எப். பகுதியில் தொழிற்சாலை மூடப்பட்டு விட்டதால்,  அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துவிட்டது. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதுகுறித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வனவர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர் சென்று ஆய்வு செய்தனர். மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், குறிப்பிட்ட இடங்களில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தி, புலி நடமாட்டத்தை கண்ட றிந்து, நடவடிக்கை எடுக்கப்படும். மேலும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கத் தேவையான நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

கராத்தே போட்டி

கோவை, ஜூலை 19- கராத்தே மாணவர்களை சர்வதேச தளத்தில் உயர்த் தும் விதமாக கோவையை அடுத்த மாதம்பட்டியில் 5 ஆவது சர்வதேச அளவி லான கராத்தே சாம்பியன் ஷிப் போட்டி நடைபெற்றது. தனியார் ஸ்போர்ட்ஸ் கிளப்  சார்பில் நடைபெற்ற இப் போட்டியை நல்லறம் அறக் கட்டளையின் தலைவர் அன் பரசன் துவக்கி வைத்தார். இதில் 5 வயது முதல் 17  வயதுக்கு உட்பட்டவர்க ளுக்கு கட்டா, குமித்தே என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இந்த சர்வ தேச கராத்தே போட்டியில் இந்தியா, இலங்கை, மலே சியா, சிங்கப்பூர் ஈரான்,  ஈராக், ஓமன் உள்ளிட்ட பல் வேறு நாடுகளைச் சேர்ந்த  வீரர்கள் கலந்து கொண்ட னர்.


 

;