மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடம்பூர் மலை வட்டார மக்கள் கோரிக்கைமாநாடு புதனன்றுகடம்பூர் மலை வட்டார செயலாளர் சி.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் பி.டெல்லிபாபு, சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் மற்றும் மலை வாழ் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.