districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

விவேகானந்தா சேவாலயம் மூடல்

திருப்பூர், அக். 8- திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பகுதியில் 3 சிறுவர் கள் உயிரிழப்புக்கு காரணமான ஸ்ரீ விவேகானந்தா சேவால யம் சனிக்கிழமை வருவாய்த்துறை அலுவலர்களால் பூட்டப் பட்டது.  திருமுருகன் பூண்டியில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா சேவாலயத்தில் 15 சிறுவர்கள் தங்கி அருகில் உள்ள  அம்மாபாளையம் அரசு பள்ளியில் கல்வி பயின்று வந்தனர்.  கடந்த 5ஆம் தேதி இரவு ரசம் சாதம் சாப்பிட்டு உடல்  உபாதைக்குள்ளாகியுள்ளனர். 6ஆம் தேதி காலை ஊழி யர்கள் உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு மாணவர்கள்  உயிரிழந்தும், மீதமுள்ள 11 மாணவர்கள் மற்றும் ஒரு காவலர் மயக்கம் அடைந்த நிலையில் இருந்துள்ளனர். உடனடியாக  ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டனர். அங்கு மேலும் ஒரு மாணவர் உயிரிழந்தார். மீதமுள்ள 11 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தனர்.  இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாநில சமூக நலத் துறை அமைச்சர் கீதாஜீவன், தமிழக அரசால் சம்பவம் குறித்து  விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட, மூத்த ஐஏஎஸ் அதி காரியான மணிவாசன் தலைமையிலான குழுவினர் மற்றும்  சமூக நலத்துறை இயக்குனர் வளர்மதி தலைமையிலான குழு வினர் நேரில் காப்பகத்தில் ஆய்வு செய்தனர். அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களிடம் விசாரணை  மேற்கொண்டனர். இதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், காப்ப கத்தில் சிறுவர்கள் தங்குவதற்கான பாதுகாப்பு வசதிகள் எது வும் இல்லை எனவும், காப்பக நிர்வாகத்தின் அஜாக்கிரதை மற்றும் மெத்தனபோக்கு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதால் காப்பகம் மூடப்படுவதாக அறிவித்தார்.  இதனை தொடர்ந்து வட்டாட்சியர் ராஜேஷ் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் காப்பகத்திற்கு பூட்டு போட்டு மூடப்பட்டது. பூட்டு போட்டு மூடப்பட்ட காப்பகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  மேலும், உயிரிழந்த மூன்று மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோர்களிடம் ஒப்படைக் கப்பட்டதையடுத்து திருப்பூர் மின்மயானத்தில் எரியூட்டப்பட் டது.

ஜன. 26 முதல் பிப். 5 வரை திருப்பூர் புத்தகத் திருவிழா பின்னல் புக் ட்ரஸ்ட் முடிவு

திருப்பூர், அக். 8 - திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட், பாரதி  புத்தகாலயம் இணைந்து நடத்தும் திருப்பூர் புத்தகத் திருவிழா அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி  வரை நடைபெறுகிறது. திருப்பூரில் பின்னல் புக் ட்ரஸ்ட் அறங்காவலர்கள் கூட்டம்  சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆண்டுதோறும்  நடத்தப்படும் திருப்பூர் புத்தகத் திருவிழாவை, வரக்கூடிய 2023 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம்  தேதி வரை 11 நாட்கள் மாநகராட்சி அருகே கே ஆர் சி சிட்டி  சென்டரில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்தப் புத்தகத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்து வதற்கு வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் வரும் நவம்பர்  1ஆம் தேதி மாலை, கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடத்துவது  என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ரூ.75 லட்சம் மதிப்பிலான  5.20 ஏக்கார் நிலம் மீட்பு

திருப்பூர், அக்.8- தாராபுரம் அருகே உள்ள பெரியநாயகி அம்மன் கோயி லுக்கு சொந்தமான ரூ.75 லட்சம் மதிப்பிலான 5.20 ஏக்கா் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள நாட்டார்மங் கலத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக தட் டாரவலசு கிராமத்தில் இருந்த 5.20 ஏக்கார் புன்செய் நிலம்  ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இது குறித்து திருப்பூர்  இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் குமரதுரை, உதவி  ஆணையார் செல்வராஜ், தனி வட்டாட்சியார் கோபால கிருஷ்ணன், ஆய்வாளா் சுமதி, தக்கார் திலகவதி ஆகியோர்  ஆக்கிரமிப்புதாரா்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்று அறி விப்புப் பதாகை வைக்கப்பட்டுள்ளதுடன், நில அளவீடு செய் யப்பட்டு அறநிலையத் துறை பெயா் பொறித்த எல்லைக் கற்க ளும் நடப்பட்டன. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.75  லட்சம் என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள்  தெரிவித்தனா்.

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 70 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

தாராபுரம்,  அக். 8 - மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 70 லட்சத் திற்கு பருத்தி ஏலம் நடைப்பெற்றது. திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்ப னைகூட முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறை முக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கருர், திருச்சி, திண் டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 375 விவசா யிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.  அதேபோல் பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண் டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த  வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 9 ஆயிரத்து 408 க்கும்  குறைந்தபட்ச விலையாக ரூ. 7 ஆயிரத்து 80 க்கும் சராசரி  விலையாக ரூ. 7 ஆயிரத்து 650 க்கும் விலை போனது. மொத் தம் 2897 மூட்டைகள் 930 குவிண்டால் பருத்தி ரூ. 70 லட்சத்து  22 ஆயிரத்து 536 க்கு விற்பனையானது. இந்த ஏலத்தில் 11  வணிகர்கள் பங்கேற்றனர். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண் காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

வடுகபட்டியில் நாளை மின்தடை

தாராபுரம்,  அக். 8 - வடுகபட்டியில் நாளை பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. தமிழ் நாடு மின்சாரவாரியம், பல்லடம் மின்பகிர்மான வட்டம், தாரா புரம் கோட்டம், வடுகபட்டி 110/22 கேவி துணை மின் நிலையத் தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை 10 ஆம்  தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோ கம் இருக்காது. வடுகபட்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட வடுகபட்டி, குமாரபாளையம், எம்கேடிபாளையம், எஸ்பிகே  பாளையம், சம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப் பட்டி, என்சிஜி வலசு, பி.ராமபட்டிணம், மார்க்கம்பட்டி  மற்றும்  இது சார்ந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவித் துள்ளார்.

பாலத்திலிருந்து தவறி விழுந்து முதியவர் பலி

பொள்ளாச்சி, அக். 8 –  பாலத்தில் இருந்து தவறி விழுந்து முதி யவர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. கோளார்பட்டி சங்கம் பகுதியை சேர்ந் தவர் மணி (75). இவர் தனது மனை வியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் குடிப்பழக்கம் உள்ள மணி, சம்பவத்தன்று மது வாங்கி திப்பம்பட்டி செக் டேம் பகுதியில் பாலத்தின் மீது அமர்ந்து  மது குடித்துள்ளார்.  அப்போது எதிர்பாராத விதமாக அவர் பாலத்தில் இருந்து தவறி அணையில் விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த  அக்கம் பக்கத்தினர் கோமங்களம் போலீசா ருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தக திருவிழா

திருப்பூர், அக். 8 - திருப்பூர் பின்னல் புக்  ட்ரஸ்ட், பாரதி  புத்தகாலயம் இணைந்து நடத்தும் திருப் பூர் புத்தகத் திருவிழா அடுத்த ஆண்டு ஜனவரி 26  ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடத்துவது என  திருப்பூரில் பின்னல் புக் ட்ரஸ்ட் அறங்காவலர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது.

ஆன்லைன் மூலம்  ராணுவ வீரரிடம் பணமோசடி

கோவை, அக்.8 - கோவை புலியகுளத்தை  சேர்ந்தவர் செல்வமணி (30). ராணுவ வீரரான இவருக்கு டெலிகிராம் எனும் செயலி மூலம் அகமதாபாத் நகரை சேர்ந்த கார்த்திக் பஞ்சல் என்பவர் அறிமுகமாகி குறு கிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள் ளார். செல்வமணியும் ஆன் லைன் மூலம் வங்கி கணக் கில் ரூ.4 லட்சத்து 31 ஆயி ரத்து 50 செலுத்தியுள்ளார்.  அந்தநபரை தொடர்பு கொள்ள முயன்றபோது,  செல்போனை சுவிட்ச் ஆப் என்று வந்தது. தன்னை ஏமாற்றி விட்டதையறிந்து காவல் நிலையத்தில் புகா ரளித்தார். இதனையடுத்து கார்த்திக் பஞ்சலின் வங்கி கணக்கை முடக்கி பணத்தை  மீட்டு செல்வமணியிடம் ஒப்ப டைத்தனர்.

திருப்பூரில் 3 சிறுவர்கள் பலியான சம்பவம்  வெளி உணவுகள் காப்பகத்திற்கு தருவதற்கு தடை

கோவை, அக்.8- திருப்பூரில் விவேகானந்தா சேவா லயத்தில் கெட்டுப்போன உணவை கொடுத் ததால் மூன்று ஆதரவற்ற சிறுவர்கள் பலி யான சம்பவத்தையடுத்து கோவையில் உள்ள காப்பங்களில் வெளியில் இருந்து சமைத்து கொண்டு வரும் உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  கோவை மாவட்டத்தில் காந்தி மாநகர் மற்றும் லட்சுமி மில்ஸ் பகுதியில் அரசு சார்பில்  2 காப்பகங்கள் உள்ளன. இதுதவிர, 45 தனி யார் காப்பகங்கள் உள்ளன. இந்த காப்ப கங்களில் ஏராளமான குழந்தைகள் தங்கி யுள்ளனர். திருப்பூரில் கெட்டுபோன உணவை உட் கொண்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்ப வத்தை அடுத்து கோவையில் உள்ள 47  காப்பகங்களுக்கு, கோவை மாவட்ட குழந் தைகள் பாதுகாப்பு துறையின் சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.  இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் உள்ள காப்பகங்களில் தரமான  மற்றும் சுத்தமான உணவுகளை குழந்தை களுக்கு வழங்குவதை உறுதி செய்ய நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து  காப்பகங்களும் உணவுத்துறையின்  லைசென்ஸ் பெற வேண்டும். பல காப்பகங் களுக்கு தன்னார்வலர்கள் மற்றும் திருமண  நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பின்  பலர் உணவுகளை குழந்தைகளுக்கு தான மான வழங்க முன்வருகின்றனர். இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அதி காலை சமைக்கப்படும் உணவுகள், காப்பாக  குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் வழங்கப் படும் நிலை இருக்கிறது. இதனால் புட் பாய்சன்ஸ் ஆகிறது. இது குழந்தைகளை  பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே,  வெளியில் இருந்து சமைத்து காப்பகத் திற்கு அளிக்கப்படும் உணவுகளை வாங் கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து காப்பகங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத் தப்பட்டுள்ளது. நன்கொடையாக பெற்று காப்பகத்தில் உணவு சமைத்து குழந்தைகளுக்கு வேண்டும் என்றால் வழங்கலாம். ஆனால்,  வெளியாட்களிடம் இருந்து உணவு பெறக் கூடாது. இது தொடர்பாக அனைத்து காப்ப கத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  மேலும், குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு  ஏற்பட்டால், சுயமாக மருந்துகளை அளிக்கக் கூடாது. மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப் படையில் மருந்துகளை வழங்க வேண்டும்.  சமையலுக்கு பயன்படுத்தும் நீரை ஆண் டிற்கு ஒரு முறை பரிசோதனை செய்ய  வேண்டும். தவிர, உணவுத்துறை அதிகாரி களுடன் இணைந்து காப்பக சமையல்காரர் களுக்கு தரமான உணவு சமைப்பது, பரி மாறுவது, பாதுகாப்பது உள்ளிட்டவை  குறித்து பயிற்சி அளிக்க திட்டமிடப்பட் டுள்ளது என்றார்.
 


 

 

 

;