ஈரோடு, செப். 30- அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலர்கள் அரசின் கவனத்தை ஈர்க்க கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். எம்எஸ்டிஇ பரிந்துரையின்படி முதல்வர் பதவி உயர்வு வழங்க வேண்டும். கணினி மூலம் தேர்வு நடத்தும்போது சிரமத்திற்கு உள்ளாவதால், பயிற்சியாளர்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் மூலம் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். கொத்தடிமை கூலிகளாக மாற்றும் வகையில் உள்ள கணிதம் மற்றும் பொறியியல் வரைபடம் பிரிவு பாடங்களை நீக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். திறனை அதிகரிக்கும் வகையில் பாடத்திட்டங்களை மேம்படுத்திட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களுக்கு தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் அறைகூவல் விடுத்தது. அதன்படி முதல் கட்ட போராட்டம் என்பது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஐடிஐ களிலும் செப்டம்பர் 28 முதல் 30 வரை கோரிக்கை அணிந்து பணிபுரிவது என்கிற அறைகூவலை ஏற்று அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். ஈரோடு - சென்னிமலை சாலையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து 3 ஆவது நாளாக பணியில் ஈடுபட்டனர்.