districts

img

நண்பர்களின் செலவுக் கணக்கில் வராது போலிருக்கிறது

கோயம்புத்தூர், மார்ச் 25- “இந்த அண்ணாமலை ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட  செலவு செய்ய மாட்டான்”  என்று பாஜக தலைவர் அண்  ணாமலை கூறியிருந்தார்.

 இதுபற்றி விமர்சித்த அதி முக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஊட கம், பத்திரிகை நண்பர்கள் எல்லாம் பிடிங்க.. அவரை  பின்னாடியே போய் பாருங்க. ஒரு ரூபாய் செலவு  செய்வாரா... செய்ய மாட் டாரா என்பதை பாருங்கள்..  ஒரு ரூபாய் கூட செலவு பண்  ணாட்டி டீக்கூடக் குடிக்க முடி யாது.. குடிநீர் கூட 12 ரூபாய்  ஒரு பாட்டில். அவங்க பெரிய ஆளுங்கதான் பிஸ்லரி வாட்  டர் தான் குடிப்பாங்க.. இதற்கு  12 முதல் 15 ரூபாய் செலவு  செய்துதான் ஆக வேண்டும்.  எனவே, ஒரு ரூபாய் கூட  செலவு செய்ய மாட்டேன் என்பதெல்லாம் பத்திரிகை செய்திக்காக சொல்வது” என்று கூறியிருந்தார். இதற்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

அதில், “எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கக்கூடிய பிரச்சனை  என்னவென்றால், ஒருவர் கூறுவதை முழுமையாகக் கேட்பதில்லை. கேட்கக் கூடிய தன்மையையும் அவர் இழந்து விட்டார். எடப்பாடி பழனிசாமி டீ குடிக்க வேண்  டும் என்றால் கூட யாரிடமா வது பணம் வாங்கித்தான் டீ  குடிப்பார் போல் உள்ளது.  ஆகவேதான், டீ குடிப்பதை  உதாரணமாக கூறியிருக்கி றார். ஆனால், நாங்கள் அப்  படி அல்ல. டீ குடிக்க வேண்  டுமென்றால் கூட சொந்த காசில் தான் குடிப்போம்” என்று ‘சத்தியம்’ செய்துள் ளார்.

வீட்டு வாடகை, உதவி யாளர்களுக்கு சம்பளம், குடும்பச் செலவுக்கு மாதம்  ரூ. 7 லட்சம் முதல் 8 லட்சம் வரை செலவு ஆவதாகவும், இதற்கான பணத்தை நண்  பர்கள்தான் தனக்கு தந்து  உதவுகிறார்கள் என்றும் கடந்த ஆண்டு பேட்டி அளித்  தவர்தான் அண்ணாமலை. அந்த வகையில் பார்த்தால், இந்த டீ செலவு, நண்பர்கள் கணக்கில் வருமா? என்று தெரியவில்லை. அதுமட்டுமல்ல, ரூ. 4.5  லட்சம் ரூபாய்க்கு வாங்கிய தாக கூறப்பட்ட ரபேல் வாட்ச்சிற்கான ஒரிஜினல்  ரசீதை வெளியிடாத அண்ணா மலை ரூ. 3 லட்சத்திற்கு வெள்ளைத்தாளில் கையால் எழுதப்பட்ட போலி ரசீ தைக் காட்டியும் கையும் கள வுமாக மாட்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.