districts

img

இடைதரகர்கள் தான் அதிக லாபம் பெறுகின்றனர்: அமைச்சர் பி.டி.ஆர்

உதகை, செப்.21- குறைந்தபட்ச விலையில் பொருட் கள் கிடைப்பதே மாநில அரசின் நோக் கம். ஆனால், இடைத்தரகர்கள்தான் அதிக லாபம் பெறுகின்றனர் என தென்னிந்திய தோட்ட அதிபர்கள் மாநாட்டில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் உரை யாற்றினார். தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க 129 ஆவது மாநாடு நீலகிரி  மாவட்டம் குன்னூர் உபாசி அரங்கில்  நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப் பாளராக தமிழக நிதியமைச்சர் பி. டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங் கேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து அவர் பேசுகையில், பெரும் விவசா யிகள் மற்றும் சிறு, குறு விவசாயி கள் இடையே பெரும் இடைவெளி உள்ளது. சிறு விவசாயிகளுக்கு தக வல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படு கிறது. விவசாயிகளுக்கு அதிக வரு வாய் மற்றும் நுகர்வோருக்கு குறைந் தபட்ச விலையில் பொருட்கள் கிடைப் பதே மாநில அரசின் நோக்கமாகும். ஆனால், நிதர்சனத்தில் இடைதரகர் கள் தான் அதிக லாபம் பெறுகின்ற னர். இதை போக்க மாநில அரசு நடவ டிக்கை எடுத்து வருகிறது. 

தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளால் உற்பத்தி அதிக ரிக்க வழிவகை செய்கிறது. அரசின் திட்டங்கள் தற்போது துறை ரீதியாக உள்ளது. இதை பயனாளிகள் ரீதி யாக செயல்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு சுகாதாரம், கல்வியை மேம்ப டுத்தவும், தாய் சேய் உயிரிழப்பு விகி தாசாரத்தை குறைக்கவும் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் தமிழகத்தில் இந்த நடவ டிக்கைகளில் முன்னோடியாக திகழ் கிறது.  இருப்பினும் நமது தகுதிக்கு ஏற்ப நாம் இன்னும் இலக்கை அடைய வில்லை. நமது பட்ஜெட் ரூ.4 லட்சம் கோடியாக உள்ளது. காலநிலை மாற் றம், இறக்குமதி விதிமுறைகள், தொழிலாளர்கள் நலன் ஆகிய வற்றை கருத்தில் கொண்டு தோட்டத் துறைக்கு அரசு உதவ வேண்டும். விலை குறைவு, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள போட்டி ஆகியவற்றால் தோட்டத்துறை பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டத்துறைக்கு மாநில அரசு உறு துணையாக இருக்கும்.  நூற்றாண்டு கால திராவிட வரலாறு காரணமாக தமிழகத்தில் பெண்களுக்கு சொத்து ரிமை, வாக்குரிமை, கல்வி ஆகி யவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், சமூக நிதி நிலைநாட்டப்பட் டுள்ளது; இது தொடரும் என்றார். இம்மாநாட்டில் இஸ்ரேல் பொரு ளாதார விவகாரத்துறை ஆலோ சகர் ஜோசப் அவ்ரஹாம், உபாசி செயலார் சஞ்சித் ஆகியோர் உரை யாற்றினர். துணை தலைவர் ஜெப்ரி ரிபெல்லோ நன்றி கூறினார். மாநாட் டில் உபாசி உறுப்பினர்கள் மற்றும் தோட்ட அதிபர்கள் பங்கேற்றனர்.