திருப்பூர், செப். 6 - இந்திய மக்களின் சொத் தான ஆயுள் காப்பீட்டு நிறு வனத்தை (எல்ஐசி) தனியா ருக்குத் தாரை வார்க்கும் நோக்கத்தில், எல்ஐசி முக வர்கள் தின விழாவை நடத்த மறுப்பதாக, நிர்வாகத்தைக் கண்டித்து எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எல்ஐசி நிறுவனத்தில் வரு டந்தோறும் செப்டம்பர் 5ஆம் தேதி முகவர்கள் தின விழா கொண்டாடப்பட்டு வந்தது. அதுபோல் இந்த ஆண்டு திங்கள்கிழமை முகவர்கள் தின விழா கொண்டாடப்படும் என முகவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அன்றைய தினம் முகவர்கள் தின விழா நடத்தப்பட வில்லை. இது குறித்து எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் கூறிய போது, எல்ஐசி நிறுவனத்தை தனியாருக்குத் தாரை வார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றிய அரசு செயல்பட்டு வரு கிறது. ஒன்றிய அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எல்ஐசி நிர்வாகம் நடந்து கொள்கிறது. அதன் ஒரு பகுதியா கவே எல்ஐசி முகவர்கள் தின விழாவை இந்த ஆண்டு நடத்தா மல் புறக்கணித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, இந்த விழாவை நடத்த மறுப்பதன் மூலம் மக்களுக்கான சேவையைத் தர தயங்குவதுடன், முகவர்கள் கமிஷன் தொகையையும் குறைப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. இது எல் ஐசி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அனுதினமும் பாடுபட்டு வரும் முகவர்களை சித்ரவதை செய்வதாகவும், முகவர்கள் ஊக்கமி ழந்து இந்த வேலையை விட்டுப் போய்விட வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டதாகவும் உள்ளது.எனவே முகவர் களைத் தொடர்ந்து சித்ரவதை செய்யும் நிர்வாகத்தின் போக்கைக் கண்டித்து எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் திருப்பூ ரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மனை பகுதியில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முகவர் சங்கத் தலைவர் பழனி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பி.குமார் வரவேற்றார். சங்கத்தின் மாநில நிர்வாகி பா.ராஜேஷ் நிர்வா கத்தின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்திப் பேசினார். நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்கள் பங்கேற்று தங்கள் உணர்வுகளை முழக்கமாக எழுப்பினர். நிறைவாக கிளை நிர்வாகி திருநாவுக்கரசு நன்றி கூறினார்.