கோவை, அக். 8 – சினிமா படப்பிடிப்பிற்கு பயன் படுத்தப்படும் போலி பணத்தை கட்டுக் கட்டாக வைத்து மோசடி செய்த மூன்று பேர் கோவையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோட்டை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் கோவை கவுண்டம்பாளையத் தில் தங்கி உள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த பைனான்சி யர் ஒருவரிடம் ரூ.2 கோடி கடன் வாங்கி னார். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். இதையடுத்து பைனான்சியர், மோகன்ராஜை நேரில் சந்தித்து பணத்தை கேட்டுள்ளார். அப்போது அவர் பணத்தை தர மறுத்ததுடன், பைனாசியருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனையடுத்து மோகன்ராஜ் மீது பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் பைனான்சியர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோகன்ராஜை பிடித்து விசாரித்தனர்.அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரி யவந்தன. மோகன்ராஜ் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு பெரிய நாயக்கன் பாளை யம் வந்தார். அப்போது அவருக்கு அம்பேத்கர் வீதியை சேர்ந்த சடகோ பால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள் ளது. அப்போது சடகோபால், தன்னிடம் நிறைய பணம் இருப்பதாகவும் நீ பணம் கொடுத்தால் உனக்கு நீ கொடுக்கும் பணத்தில் இருந்து இரு மடங்கு பணம் தருவதாக கூறியுள் ளார். இதனை நம்பிய மோகன்ரா ஜூக்கு அதிக பணம் சம்பாதிக்க வேண் டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மோகன் ராஜ் பைனான்சியரிடம் ரூ.2 கோடி பெற்று அதனை சடகோப னிடம் கொடுத்துள்ளார். அவர் மோகன் ராஜிடம், உனக்கு ரூ.4 கோடி தரு கிறேன் என தெரிவித்துள்ளார். ஆனால் அவரும் தராமல் இழுத்தடித்து வரவே, பைனான்சியரை மிரட்டியதாக கூறினார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் சடகோபாலை பிடிக்க அவ ரது வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர் வீட்டில் இல்லை. தலைமறை வாகி விட்டார். அங்கு 2 பேர் இருந்த னர். அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்னர். இதையடுத்து வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப் போது, அங்கு அட்டைபெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த அட்டை பெட்டிகளை திறந்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அதை எடுத்து பார்த்தபோது அது அனைத்தும் சினிமா படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் போலி பணம் என்பது தெரியவந்தது. இதுதவிர வீட்டில் 2 இரிடிய கலச மும் இருந்தது. போலி பணம் மற்றும் இரிடிய கலசத்தை போலீசார் பறிமு தல் செய்தனர். இதையடுத்து போலீசார் மோகன் ராஜ், சடகோபாலின் நண்பர்க ளான விருதுநகர் மாவட்டம் வத்திரா யிருப்பை சேர்ந்த காளிமுத்து(28), பெரு மாம்பாளையத்தை சேர்ந்த விஜய குமார்(35) மற்றும் மோகன்ராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் இரிடியம் கலசம் வாங்க வந்த நபர்களை ஏமாற்றி பணம் அபகரித் ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த கும்பல் நாமக்கல், திருச்செங் கோடு உள்பட தமிழகத்தின் பல பகுதி களில் கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். இவர்கள் வேறு யாரிடமும் இது போன்று மோசடியில் ஈடுபட்டுள்ள னரா? எத்தனை பேரை இரிடியம் தரு வதாக கூறி ஏமாற்றியுள்ளனர், கள்ள நோட்டுகளை எங்கும் புழக்கத்தில் விட்டுள்ளனரா? இதில் வேறு யாருக்கா வது தொடர்பு உள்ளதா என்பது குறித் தும் போலீசார் விசாரித்து வருகின்ற னர்.