districts

img

தேர்தல் வாக்குறுதி அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை

கோவை, டிச.20- தேர்தல் வாக்குறுதிகளின் அடிப் படையிலேயே முன்னாள்  அமைச் சர்கள் வீட்டில் சோதனை நடை பெற்று வருகிறது என மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியி ருப்புகளை அழகுபடுத்தும் வித மாக, கோவை மாநகராட்சி, ‘ஸ்ட்ரீட்  ஆர்ட்’ என்ற அமைப்புடன் இணைந்து கட்டடங்களில் அழகிய ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தி வருகிறது. கோவையில், இந்த அமைப்பின் சார்பில், வரையப்பட்ட ஓவியங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந் நிலையில், அந்த குடியிருப்புக ளில் வசிக்கும் குழந்தைகளின் ஓவி யத்திறனை வெளிக்கொண்டு வரும்  விதமாக கோவை மாநகராட்சி உடன் இணைந்து, உக்கடம் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் குழந் தைகளுக்கான ஓவியப்பயிற்சி மற் றும் போட்டி நடைபெற்றது. இதில் சிறந்த ஓவியம் வரைந்தவர்க ளுக்கு தமிழக மின்சாரம் மற்றும்  மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி னார்.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன்,  மாநகராட்சி ஆணையர் ராஜகோ பால் சுன்கரா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியா ளர்களிடம் அமைச்சர் செந்தில்பா லாஜி கூறுகையில், அரசு அலுவல கங்கள் மற்றும் அரசு சுவர்களில் போஸ்டர் கலாச்சாரத்தை தடுக்கும்  வகையில் மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தக்கூடிய ஓவியங் கள் வரையப்படும். விரைவில் அதற் கான அறிக்கை வெளியிடப்படும். திமுகவிற்கு எதிராக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தது தங்களது ஆட்சி போய்விட்டது என்ற விரக்தி யாகும். முன்னாள் அமைச்சர் தங்க மணியின் வீட்டில் சோதனை மேற் கொண்டது வருமானத்திற்கு அதிக மாக சொத்து சேர்த்தவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என திமுக வின் தேர்தல் வாக்குறுதி அளித்துள் ளோம். அதனடிப்படையியேலயே இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது, என்றார்.

;