districts

img

திருப்பூர் நகரில் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

திருப்பூர், அக். 13 – திருப்பூர் மாநகரில் பருவமழை காலங்க ளில் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் மழை நீர் வெளியேறிச் செல்ல நடவடிக்கை எடுக்க  வேண்டும் என இளநிலை மற்றும் உதவிப்  பொறியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம்  அறிவுறுத்தி உள்ளது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. இதில் வடகிழக்கு பருவமழை காலங்களில் தொடர்ந்து பாதிப்பை சந்திக்கக் கூடிய பகுதிகளான பாண்டியன் நகர், தோட் டத்துப்பாளையம், மும்மூர்த்தி நகர், பாலன்  நகர், அங்கேரிபாளையம், காசிபாளையம், கே.என்.பி. சுப்பிரமணியம் நகர், திருவள்ளு வர் நகர், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் மழை நீர் முழுவதும் வெளியேறிச் செல்ல நடவ டிக்கை எடுக்க வேண்டும். தனியார் இடங்க ளில் மழைநீரை வெளியேற்ற நேரிடும் போது, அந்த இடத்தின் உரிமையாளர், மாமன்ற உறுப்பினர் மற்றும் தன்னார்வ உறுப் பினர் உதவியுடன் நேரில் அணுகி மழைநீர்  வெளியேறிச் செல்ல நடவடிக்கை எடுக்க  வேண்டும் என இக்கூட்டத்தில் அறிவுறுத்தப் பட்டது. மேலும் மழைநீர் தேங்காமல் வெளியேற  அனைத்து வகையான உபகரணங்கள், வாக னங்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வும் தெரிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்துப் பகுதிகளி லும் மேற்கொள்ளவும் வழிகாட்டப்பட்டது. இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார், ஆணையர் கிராந்திகுமார் பாடி, துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள் பட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்ட னர். இதுதவிர தாராபுரம் ரோடு 51ஆவது வார்டு சங்கிலிபள்ளம் ஓடை உள்ளிட்ட வடி கால்கள் தூர்வாரும் பணியும் நடைபெற்று வருகிறது.

;