districts

img

சட்டவிரோத கருக்கலைப்பு: பாதிக்கப்பட்ட சிறுமியின் கல்வி செலவை அரசு ஏற்க வலியுறுத்தல்

திருப்பூர், ஜன.23- சட்டவிரோத கருக்கலைப்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின்  உயர்கல்வியை தொடர ஆகும் செலவை அரசே ஏற்க வலியு றுத்தி ததீஒமு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு  அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் சி.கே.கனகராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தாராபுரம் அருகே தலித்  சிறுமி சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த குற்றம் தொடர் பாக தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வன் கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு 2015 கீழ் வழக்கு பதிவு பதி யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நி லையில், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத் தாருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். சட்டவி ரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது மருத்துவ  குற்றப் பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். பாதிக் கப்பட்ட சிறுமி உயர்கல்வி தொடர ஆகும் கல்வி செலவை யும் அரசே ஏற்க வேண்டும். வன்கொடுமை வழக்கின் தீருத வித்தொகை உடனே வழங்க பட வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி  தொகுப்பு வீடு அரசே கட்டி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.