தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தல்
ஈரோடு, செப்.5- மொடக்குறிச்சி வட்டத்தில் தார்ச்சாலை வசதி செய்து கொடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டத்திற்குட்பட்டது எழுமாத்தூர் ஊராட்சி. இந்த ஊராட்சியின் 7 வார்டுக்குட் பட்ட பகுதி கிருஷ்ணாபுரம். அங்கிருந்து வடுகபட்டி சாலை யில் உள்ள ஏனிப்பாளி வரை சுமார் 2 கி.மீ நீளத்திற்கு எல்பிபி கால்வாயும், அதன் அருகே மண்சாலையும் உள்ளது. இந்த மண் சாலையானது கிருஷ்ணாபுரம், காரக்காட்டுவலசு, ஏனிப் பாளி, 60-வேலம்பாளையம், குப்பண்ணசாமி கோவில், கொழிஞ்சிக்காட்டுவலசு ஆகிய ஊர்களில் உள்ள ஆயிரத் திற்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையாகும். மேலும், கிருஷ்ணாபுரத்தில் உள்ள ரேசன் கடை, பெட்ரோல் நிலையம், கனககிரி விவசாயிகள் கூட்டுப் பண்ணை மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தில் விவசாயிகள் உரம் வாங்கவும், வங்கி பயன்பாட்டிற்கும் விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலை யாகவும் உள்ளது. எனவே, இந்த மண் சாலையை டிராக்டர், டெம்போ வாகனங்கள் இயக்கும் வகையில் தரமான தார்ச் சாலையாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு
கோவை, செப்.5- மாதாந்திர உதவித் தொகையை 3000 ரூபாயாக உயர்த்தி தர ஆவணம் செய்யக்கோரி தேசிய பார்வையற்றோர் இணை யத்தை சார்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தேசிய பார்வையற்றோர் இணையத்தின் சார்பில் அளிக்கப் பட்ட கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது, மாதாந்திர உதவி தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்பொழுது உள்ள பொருளாதார சூழலில் ஆயிரம் ரூபாய் போதுமானதாக இல்லை எனவும் அதனை 3000 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என 50க்கும் மேற் பட்டோர் ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் தலைமையில் மனு அளித்தனர். முதல்வருக்கு அனுப்பவுள்ள கடிதத்தின் நகலை யும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.
சுமைப்பணி தொழிலாளர்கள் மீது தாக்குதல் - தர்ணா
பொள்ளாச்சி, செப்.5- பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் சுமைப்பணி தொழி லாளர்களை தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை கைது செய்ய வலியுறுத்தி சுமைப்பணி தொழி லாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிபட்டி யைச் சேர்ந்த சுமைப்பணி தொழிலாளி மாறன் மற்றும் அவ ருடன் வேலை செய்யும் தொழிலாளர்கள் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப் போது தனியார் பேருந்து (கேபிஎன்) நடத்துநர் மற்றும் ஓட்டு நர் இருவரும், சுமைப்பணி தொழிலாளர்களை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சகத்தொழி லாளர்களும், தேங்காய் உரிக்கும் தொழிலாளி கருப்புசாமி யும் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தனி யார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இருவரும் சேர்ந்து கருப்பு சாமி மற்றும் மாறன் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி சராமரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கபட்ட வர்கள் தங்களை தாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். ஆனால், காவல் துறையினர் இதுவரை அவர்கள் மீது நட வடிக்கை எடுக்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் கோவை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல் நிலையத்தை முற்றுகை யிட முயன்றபோது, அங்கு வந்த காவல் துறையினர், தனி யார் பேருந்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானம் செய்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
கோவை மாவட்டத்தில் செப். 8 விடுமுறை
கோவை, செப்.5- கோவை மாவட்டத்தில் ஓணம் பண்டிகைக்கு உள் ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. கோவை மாவட்டத்தி லுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிறு வனங்களுக்கும் ஓணம் பண் டிகை கொண்டாடப்படும் செப்டம்பர் 8ஆம் தேதி வியா ழக்கிழமை அன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட் டுள்ளார். இந்த நாளுக்கு பதிலாக செப்டம்பர் 17 சனிக் கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் ஆட்சியரகத்தில் மனு
திருப்பூர், செப். 5 - திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே சூரிய நல்லூர் ஊராட்சி முல்லை நகரில் அடிப்படை வசதிகளை நிறை வேற்றித் தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் தலைமையில் திங்களன்று நடந்தது. இதில் பொது மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்காக மனுக்கள் அளித்த னர். குண்டடம் சூரியநல்லூர் ஊராட்சி முல்லை நகர் பொதுமக் கள் அளித்த மனுவில், அப்பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் நிலையில், தேவையான குடிநீர் கிடைப் பதில்லை. குடிநீர், போதிய ஆழ்குழாய் நீர் உள்ளிட்டவை இன்றி மிகுந்த சிரமப்படுவதாக தெரிவித்தனர். தெருவிளக்கு வசதிகள் போதிய அளவில் இல்லை. பேருந்துகள் முல்லை நகரில் நிற்பதில்லை. பள்ளிகுழந்தைகள், வேலைக்கு செல் லும் பெண்கள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக குண்டடம் செல்ல நினைப்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதால் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற னர். திருப்பூர் வாய்க்கால் மேடு பாரியூர் அம்மன் நகரை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், அப்பகுதியில் செயல்பட்டு வந்த நகை அடமானக் கடையில் கொரோனா காலத்தில், குடும்பத் தேவைக்காக நகை அடகு வைக்கப்பட்டது. இந்நிலையில் நகையை மீட்க பணமும் பலர் கட்டினர். ஆனால் அங்கு அடமானக் கடை நடத்தி வந்தவர் திடீரென தலைமறைவாகி விட்டார். நகை ஏமாற்றி சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வறிய நிலையில் உள்ள தங்களுக்கு நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்று கோரினர். மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் அளித்த மனுவில் மாத உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி வடக்கு ஒன்றிய வாலிபர் சங்கத்தினர் மனு
திருப்பூர், செப். 5 - திருப்பூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ளூர் அளவிலான அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் உள்ளாட்சி அலுவலகங்களில் மனு அளித்தனர். வாலிபர் சங்கம் வடக்கு ஒன்றியத்தில் மாநாட்டு தீர்மா னங்களை செயல்படுத்தும் வகையில், மக்களின் அடிப் படை பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி இந்த மனுக் கொடுக் கும் இயக்கம் நடத்தப்பட்டது. முதலாம் மண்டல அலுவலகம் ஆத்தப்பாளையம், அங் கேரிபாளையம், அவிநாசிகவுண்டம்பாளையம், நெசவாளர் காலனி ஆகிய கிளைகளின் சார்பில் 1ஆம் மண்டல அலுவல கத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில் ஒன்றிய தலைவர் ரேவந்த் குமார், ஒன்றிய செயலாளர் சந்தோஷ், ஒன்றிய துணை செயலாளர் நரேந்திர பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரண்டாம் மண்டல அலுவலகத்தில் போயம்பாளையம், கங்கா நகர், கண்ணபிரான் நகர் ஆகிய கிளைகளின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் ஒன்றிய பொருளாளர் மனோஜ், கமிட்டி உறுப்பினர் கேசவன், கிளை நிர்வாகிகள் சரத்குமார், ஆகாஷ், மாவட்ட தலைவர் அருள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். பெருமாநல்லூர் கிளை சார்பில் ஈட்டிவீரம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில் ஒன்றிய துணை செயலாளர் லிவின்,கமிட்டி உறுப்பினர் தேவராஜ், கிளை நிர்வாகி கதிரேசன், மாவட்ட பொருளா ளர் பாலமுரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டார். பள்ளிபாளையம் கிளை சார்பாக பொங்குபாளையம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில் கிளை நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, ரமேஷ், நாகராஜ் உள் ளிட்டோருடன், மாவட்ட துணை செயலாளர் பாலசுப்பிரமணி யம் கலந்து கொண்டார்.
பகத்சிங் பிறந்த நாளில் போதை எதிர்ப்பு இயக்கம் நடத்த வாலிபர் சங்கம் முடிவு
பகத்சிங் பிறந்த நாளில் போதை எதிர்ப்பு இயக்கம் நடத்த வாலிபர் சங்கம் முடிவு திருப்பூர், செப். 5 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருப்பூர் வடக்கு மாநகர குழு நிர்வாகிகளுக்கான பேரவை கூட்டம் ஞாயிறன்று நடைப் பெற்றது. இதில் சங்கக் கொடியை மாவட்ட செயலாளர் செ. மணிகண்டன் ஏற்றி வைத்தார். மாநகர தலைவர் சே.கண்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தி்ல், எதிர்கால பணி கள் குறித்து மாநகர துணை செயலாளர் நவீன்குமார் விளக்கி னார். செப்டம்பர் 27 மாவீரன் பகத்சிங்கின் 115 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு போதைக்கு எதிரான இயக்கம் நடத்து வது. இந்த இயக்கம் செப்டம்பர் 25 ஞாயிறன்று கருமாரம்பா ளையம் கிளையில் இருந்து இரண்டு சக்கர வாகன பேரணி யாக சென்று அனைத்து கிளைகளிலும், வாலிபர் சங்க பெயர் பலகை திறந்து வைப்பது என்றும், இறுதியாக காலேஜ் ரோடு பகுதியில் உள்ள வாலிபர் சங்க மாவட்ட அலுவல கத்தில் நிறைவு செய்வது, பேரணி பாதையில் போதை கலாச் சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மாவட்ட செயலாளர் செ. மணிகண்டன் நிறைவுரை ஆற்றினார். இறுதியாக மாநகர துணை தலைவர் க.சரத்குமார் நன்றி கூறினார்.
ரூ.40 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
அவிநாசி, செப்.5- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடை பெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.40 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 1500 மூட்டைகள் வந்திருந்தன.குவிண் டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.6,600 முதல் ரூ.6,900 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6,200 முதல் ரூ.6,500 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.5,800 முதல் ரூ.5,950 வரையிலும் ஏலம் போனது.மொத்தம் ரூ.40 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 10 வியாபாரிகள், 225 விவசாயிகள் பங்கேற்றனர்.
தக்காளி விலை உயர வாய்ப்பு
திருப்பூர், 5- திருப்பூரில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தென்மேற்கு பருவமழை பெய்கிறது. இதனால் அறுவடை பருவத்தில் உள்ள தக்காளி பெரும்பகுதி அழுகி வருகிறது. எனவே சந்தையில் தக்காளி வரத்து படிப்படியாக குறைந்து வருகி றது. ஒரு பெட்டி தக்காளி 350 ரூபாய்க்கு விலை போனது. மழை தொடரும் பட்சத்தில் தக்காளி விளைச்சல் மேலும் குறை யும். இதனால், தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
அரசு சார்பில் குடியிருப்பு வழங்க மாற்றுத்திறனாளி மகனுடன் தாய் மனு
திருப்பூர், செப்.5- குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடு வழங்க ஒரு லட்சம் கட்ட கூறியதையடுத்து, அரசு சார்பில் குடியிருப்பு வழங்க மாற்றுத்திறனாளி மகனுடன் தாய் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். திருப்பூர் நல்லாத்துபாளையம் பகுதியை சேர்ந்த முருகே சன், கலாவதி, முருகேசன் பெயிண்டராக பணியாற்றி வருகி றார். இவர்களுக்கு பிறந்தது முதல் சற்று மனநிலை பாதிக் கப்பட்ட சக்திவேல் (20) என்ற மகன் உள்ளார். சக்திவேலுக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையாத நிலையில்,அரசு சார்பில் மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், மகனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக தொடர்ந்து ஒரே வீட்டில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடு வழங்க கூறி மனு அளித்த நிலையில் அதிகாரிகள் ஒரு லட்சம் வரை கட்ட கூறியுள் ளனர். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மகனின் வாழ்க்கையையும், குடும்ப சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு தங்களுக்கு அரசு சார்பில் இடம் வழங்க வேண்டு மென திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித் தனர்.
புதுமைப்பெண் திட்டம்
திருப்பூர் செப்.5- மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் புது மைப் பெண் திட்டத்தில் திங்களன்று மாணவிக ளுக்கு வங்கி பற்று அட்டை களை மாநில அமைச்சர்கள் வழங்கினர்.
திருப்பூர் மாவட்டத்தில் செப். 8 விடுமுறை
திருப்பூர், செப்.5- திருப்பூர் மாவட்டத்தில் ஓணம் பண்டிகைக்கு உள் ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தி லுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிறு வனங்களுக்கும் ஓணம் பண் டிகை கொண்டாடப்படும் செப்டம்பர் 8ஆம் தேதி வியா ழக்கிழமை அன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் உத்தரவிட்டுள்ளார். இந்த நாளுக்கு பதிலாக செப்டம்பர் 17 சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.