போக்சோ குறித்து விழிப்புணர்வு
கோவை, செப்.14- கோவை வடவள்ளியில் உள்ள ஜேசி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து காவல் துறை யினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கோவை மாவட்டம், வடவள்ளி அருகே ஜேசி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், வட வள்ளி காவல் நிலைய ஆய்வாளர் லெனின் அப்பாதுரை உத்தரவின் பேரில், காவல் நிலைய காவலர் பிரேமா மற்றும் சரிதா ஆகியோர் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு, சிறார்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் (போக்சோ) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? சட்டம் எவ்வாறு குழந்தைகளுக்கு உதவுகிறது? என்பது குறித்து விளக்கப்பட்டது.
கல்விக் கடனுக்கு சிறப்பு முகாம்கள்
திருப்பூர், செப். 14 - திருப்பூர் மாவட்டத்தில் கல்விக் கடனுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி மாண வர்களுக்குக் கடன் வழங்க வேண்டும் என்று மாதாந் திர வங்கியாளர் கூட்டத்தில் வங்கிகளுக்கு அறிவுறுத்தப் பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் எஸ்.வினீத் தலைமையில் செவ்வாயன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலு வலக கூட்டரங்கில் நாடாளு மன்ற உறுப்பினர்கள் கே. சுப்பராயன், கு.சண்முக சுந்தரம் ஆகியோர் முன்னி லையில், வங்கியாளர்கள் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கல்விக் கடனுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்களை பரிசீ லினை செய்து மாணவர் களுக்கு உடனடியாக கல்வி கடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப் பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் மின்தடை பகுதிகள்
நீலகிரி மாவட்டத்தில் மின்தடை பகுதிகள் உதகை, செப்.14- ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வியாழ னன்று (இன்று) மின் விநியோகம் தடைபடுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசு நாயர் பிரேம்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நீலகிரி மாவட்டம், ஜெகதளா பேரூ ராட்சி துணை மின்நிலையத்தில், உயர்மின்அழுத்த மின்மாற்றி மேம்படுத்தும்பணிகள்நடைபெற உள்ளது. இதனால் அருவங்காடு, குன்னூர், பர்லியார், வண்டிச் சோலை, சிங்காரா, வெலிங்டன், புரூக்லேண்ட், ஆர்டர்லி, பெட்போர்டு, ஓட்டுப்பட்டறை, கரன்சி, பேரட்டி, சிம்ஸ் பார்க், இளித்துறை, ஓகஹட்டி, எடப்பள்ளி, மவுண்ட்பிளசன்ட் உள்ளிட்ட இடங்களில் வியாழனன்று (இன்று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக் காது. இதேபோல் உதகை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் வியாழனன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை உதகை நகரம் கோடப்பமந்து, நொண்டி மேடு, பிங்கா போஸ்ட், முள்ளிக்கொரை, தலையாட்டிமந்து, காந்தல், சேரிங்கிராஸ், இத்தலார், பாம்பே கேஸ்ட்ல், எம். பாலாடா, ஹில்பங்க், கேத்தி ஆகிய பகுதிகளில் மின்சார விநி யோகம் இருக்காது என நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற் பார்வை பொறியாளர் வாசு நாயர் பிரேம்குமார் தெரிவித் துள்ளார்.
கிழிந்த நோட்டுகள் மாற்றும் முகாம்
ஈரோடு, செப்.14- ஈரோடு மாவட்டத்தில் கிழிந்த நோட்டுகள் மாற்றும் முகாம் வியாழனன்று நடை பெறுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் தமிழ்நாடு மெர்க்கன் டைல் வங்கி மூலம் கிழிந்த மற்றும் அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகள் மாற்றித் தரும் முகாம் நடைபெறு கிறது. இம்முகாம் ஈரோடு தெப்பக்குளம் தெருவில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன் டைல் வங்கியில், வியாழ னன்று காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறு கிறது. வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள வேண்டு மென வங்கி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
மடத்தூரில் மாதர் சங்க கிளை அமைப்பு
திருப்பூர், செப். 14 - உடுமலை ஒன்றியம் குரல்குட்டை ஊராட்சி மடத்தூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கிளை அமைக்கப்பட் டது. மாதர் சங்க உடுமலை ஒன்றிய செயலாளர் எஸ்.சித்ரா, ஒன்றியப் பொருளாளர் ம.சர்மிளா ஆகியோர் பங்கேற்று பேசி னர். புதிய கிளைத் தலைவராக எம்.பிரியா, கிளைச் செயலா ளராக டி.மாரியம்மாள், பொருளாளராக பி.சரஸ்வதி, துணை நிர்வாகிகளாக கல்யாணி, மகுடீஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.நிறைவில் பிரியா நன்றி கூறினார்.
மிகச்சிறந்த தொழிலாளி வர்க்க பாரம்பரியத்தில் உருவானவர் கே.தங்கவேல்: திருப்பூரில் ஏ.கே.பத்மநாபன் புகழாரம்
திருப்பூர், செப். 14 - மிகச் சிறந்த தொழிலாளி வர்க்கத் தின் பாரம்பரியத்தில் உருவானவர் தான் தோழர் கே. தங்கவேல் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு ஆணைய தலைவர் ஏ.கே. பத்மநாபன் புகழாரம் சூட்டினார். திருப்பூரில் செவ்வாய் அன்று நடை பெற்ற சிறப்பு பேரவையில் அவர் மேலும் கூறியதாவது, தோழர் கே.தங்கவேலை பற்றி பல் வேறு கட்சித் தலைவர்களும் சிறப்பாக புகழ்ந்து பேசினர். அதைப் பற்றி சுருக்க மாக ஒரே வரியில் சொல்வதென்றால், அவர் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட். கம்யூ னிஸ்டுகள் தனி வார்ப்பு என்று சொல்லப் படுவது உண்டு. தொழிலாளி வர்க்கத்தி லிருந்து உருக்கொண்டு வரக்கூடியவர் கள் அவர்கள். கோவை தொழிலாளி வர்க்கத்தின் மிகச்சிறந்த பாரம்பரியத்தின் தொடர்ச் சியாக கே.ரமணி, எம்.நஞ்சப்பன், கே. எஸ்.கருப்பசாமி, என்.ஆறுமுகம் உள் ளிட்ட தலைவர்களின் தொடர்ச்சியாக தோழர் கே.தங்கவேல் திகழ்ந்தார். தொழிலாளி வர்க்க பாரம்பரியம், உறுதி, நம்பிக்கை, செயலாற்றல் ஆகிய வற்றை உள்வாங்கி அவர்கள் ஆற்றிய பணிகள்தான் இந்த இயக்கத்தின் அஸ் திவாரக் கல்லாக உள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் அந்த மகத்தான பதா கையை முன்னெடுத்துச் செல்வதுதான் தோழர் கே.தங்கவேலுக்கு நாம் செலுத்தும் மிகச் சிறந்த அஞ்சலி. நம் இயக்கத்தை, ஸ்தாபனத்தை, போராட்ட குணத்தை, வர்க்க சார்பை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பணி நம் முன் உள்ளது. அவரோடு இணைந்து மாநிலக் குழு வில், மாநில செயற்குழுவில் பணியாற் றிய காலத்தில் அவருடைய செயலூக் கம் பல இடங்களில் எனக்கு உதவி இருக் கிறது என்பதை இங்கு இல்லாமல் வேறு எங்கு சொல்வது? 1967க்குப் பிறகு கோவை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் மிகப்பெ ரிய தொழிலாளி வர்க்க எழுச்சி உருவா னது. அந்த எழுச்சி காலகட்டத்தில் உரு வானவர்களில் ஒருவர்தான் கே தங்க வேல். தொழிலாளர்கள் எப்படி சுரண்டப்ப டுகிறார்கள்? அதற்கு தீர்வு என்ன? என்று தொழிலாளர்களை திரட்டும் பணியை மேற்கொண்டு போராட்டக் களத்தின் வழியாக கற்றுக் கொண்டார். நாம் கற்க வேண்டியது களத்தில் தான், பள்ளி கல்லூரிகளில் கற்றுக் கொள்ளும் கல் வியை விட, வர்க்கப் போராட்ட களத்தில் கற்றுக் கொள்ளும் கல்வி மேலானது. சுரண்டலை எதிர்த்து மக்களை திரட் டுவதற்கு இது அவசியம். இவ்வாறு ஏ. கே.பத்மநாபன் கூறினார். இந்நிகழ்வில் வடக்கு மாநகரச் செய லாளர் பி.ஆர்.கணேசன் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கு.சரஸ்வதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோ பால், மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங் கராஜ் ஆகியோர் உள்பட பெருந்திரளா னோர் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளிலும் கட்சி கிளைகளில் கே.தங்க வேல் உருவப்படம் வைக்கப்பட்டு கட்சி அணியினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி நினைவு கூர்ந்தனர்.
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை கணவர், மாமியாருக்கு ஏழாண்டு கடுங்காவல்
திருப்பூர், செப். 14 - இளம் பெண்ணை வரதட்சணை கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய கணவர் மற்றும் மாமியாருக்கு ஏழு வருடங் கள் கடுங்காவல் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள் ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ராஜாஜி தெருவில் வசித்து வந்தவர் அஷ்ரப் நிஷா (28). இவரது கணவர் நசீர் (32). மாமியார் மும்தாஜ் பேகம் (59). இவர்கள் இருவரும் நிஷாவிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடுமைப்ப டுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி மாலை நிஷா விடம் அவரது கணவரும், மாமியாரும் சண்டை போட்டுள்ளனர். இந்நிலையில் அன்று இரவு 8 மணியளவில் அஷ்ரப் நிஷா தூக்குப் போட்டு இறந்துவிட்டதாக அவர்க ளது உறவினர் அபிபுல்லா என்பவர் நிஷா வின் பெற்றோருக்கு தகவல் கூறியுள்ளார். மகளை வரதட்சணை கொடுமைப்படுத்தி தற்கொலை செய்து கொள்ள வைத்து விட்ட தாக நிஷாவின் தந்தை அப்துல் ரகுமான் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் விசா ரணை மேற்கொண்ட காவல் துறையினர் அஷ்ரப் நிஷாவின் கணவர் நசீர் மற்றும் மாமி யார் மும்தாஜ் பேகம் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் மற்றும் விசாரணை அடிப் படையில் அவர்கள் இருவரும் குற்றவாளி கள் என நிரூபிக்கப்பட்டது. எனவே இருவருக் கும் தலா ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்ட னையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புதன்கிழமை தீர்ப்பளித்தார்.
மின் கட்டண உயர்வை குறைக்க ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை
திருப்பூர், செப். 14 – திருப்பூர் பின்னலாடைத் தொழி லில் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கி யிருக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவ னங்கள் பிழைத்திருக்க மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங் கம் கோரியுள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் ஏற்றுமதி மூலம் ரூ.33 ஆயிரத்து 525 கோடியும், உள்நாட்டு விற்பனை மூலம் ரூ.27ஆயிரம் கோடி யும் பங்களிப்பு செய்து வருகிறது. திருப்பூர் பின்னலாடைத் தொழில் நேரடியாக 6 லட்சம் தொழிலாளர் களுக்கும், மறைமுகமாக 2 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு அளித்து வருகிறது. இதில் வேலைவாய்ப்பு பெறுவதில், குறிப்பாக 60 சதவிகிதம் பேர் கிராமப்புற பெண்கள் ஆவர். ஏற்கனவே கொரோனா தொற்று முடக்கம், நூல் விலை உயர்வு போன்ற காரணங்களால் கடும் பாதிப் பைச் சந்தித்தோம். தற்போது ருஷ்ய, உக்ரைன் போர் காரணமாக ஐரோப் பிய நாடுகளிலும், அமெரிக்காவில் உயர் பணவீக்கம் காரணமாகவும் மக் களின் வாங்கும் சக்தி வீழ்ச்சி அடைந் துள்ளது. இந்த சூழலில் வேலை வாய்ப்பை தக்க வைக்க திருப்பூர் போராடிக் கொண்டிருக்கிறது. எப் போது இயல்புநிலை திரும்பும் என்று யாராலும் கணிக்க முடியாத நிலை உள்ளது. திருப்பூர் பின்னலாடைத் தொழி லில் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் முது கெலும்பாக செயல்பட்டு வருகின் றன. அவை பெரும்பாலும் நடுத்தர, சிறு, குறு நிறுவனங்களாகும். இப் போது அறிவிக்கப்பட்டுள்ள மின் கட் டண உயர்வு உண்மையில் இந்நிறுவ னங்களுக்கு பலத்த அடியாகும். இந்த கட்டண உயர்வை செலுத்த முடியாததுடன், தொழிலிலும் நீடிக்க முடியாது. மிகக் கடினமான சூழ்நி லையைக் கடந்து கொண்டிருக்கும் திருப்பூர் தொழில் துறைக்கு இந்த கட்டண உயர்வு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலாகும். அரசின் உதவிதான் இந்த தொழில் நீடிப்பதற்கு முக்கிய காரணம். இந் நிலையில் மின் கட்டண உயர்வு பிரச் சனையில் இருந்து வெளி வர முடி யாத நெருக்கடியை ஏற்படுத்தி விடும். தொழிற்சாலைகள் பிழைத்தி ருப்பதையே பாதிக்கும். எனவே பிரச்சனையின் கடுமை யான நிலையை புரிந்து கொண்டு மின் சாரக் கட்டண உயர்வை குறைப்ப தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
முறைகேடான பணியிட மாறுதல்களை ரத்து செய்க சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாநாடு கோரிக்கை
திருப்பூர், செப். 14 - அமைச்சர் அலுவலக பரிந்துரையின்பேரில் வழங்கப் பட்ட முறைகேடான பணியிட மாறுதல்களைக் கைவிட வேண் டும் என்று திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐ டியு) மாநாடு வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க ஏழாவது மாவட்ட மாநாடு தாராபுரம் சிஐடியு அலுவலகத்தில் புதன்கி ழமை நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ஆறு முகம் தலைமை ஏற்றார். மாநாட்டை தொடக்கி வைத்து திருப் பூர் மாவட்ட சிஐடியு பொருளாளர் ஜி.சம்பத் பேசினார்.மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு அறிக்கை சமர்ப்பித்தார். வரவு செலவு அறிக்கையை பொருளாளர் ஏ.கௌஸ் பாஷா முன்வைத்தார். இம்மாநாட்டில் முறைகேடான பணியிட மாறுதல்களை ரத்து செய்து, பொது பணியிட மாறுதல் வழங்க வேண்டும், சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் நடத்துவோர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும், தொழிற்சங்க முன்னணி ஊழியர்க ளைப் பழி வாங்கும் பணியிட மாறுதல்களைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் சங்கத்தின் மாவட்டத் தலைவராக எம்.ஆறுமுகம், மாவட்ட செயலாளராக ஒய்.அன்பு, மாவட்டப் பொருளாளராக ஏ.கௌஸ் பாஷா ஆகியோரும், கமிட்டி உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். டாஸ்மாக் தொழி லாளர் சம்மேளன மாநிலப் பொதுச் செயலாளர் கே.திருச் செல்வம் மாநாட்டை நிறைவு செய்து வைத்துப் பேசினார். முடி வில் தாராபுரம் பி.குணசேகரன் நன்றி கூறினார்.
முடக்கப்பட்ட அகவிலைப்படியை நிலுவையுடன் வழங்க வலியுறுத்தல்
ஈரோடு, செப்.14- முடக்கப்பட்ட அகவிலைப்படியை நிலுவைத் தொகையு டன் வழங்க வேண்டும் என மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் ஈரோடு கிளை 16வது ஆண்டு பேரவை ஈரோடு விபிசி நினைவகத்தில் நடைபெற்றது. கிளை தலைவர் இ.குழந்தை சாமி தலைமை தாங்கினார். ஏ.அபிமன்யு வரவேற்றார். சங்கத் தின் துணை தலைவர் கே.குப்புசாமி துவக்கி வைத்தார். மாநாட்டு அறிக்கைகளை மூர்த்தி, ராஜன் ஆகியோர் முன் வைத்தனர். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டமே தொடர வேண்டும். ஒப்பந்த ஊழி யர் பணிக்காலத்தை சேர்ந்தது ஓய்வூதியம் கணக்கிடப்பட வேண்டும். 2020 ஜனவரி முதல் முடக்கப்பட்ட அகவிலைப் படி நிலுவையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து சங்கத்தின் தலைவராக இ.குழந்தைசாமி, செயலாளராக ஜி.மூர்த்தி, பொருளாளராக கே.ராஜன் உள் ளிட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். பேரவையை நிறைவு செய்து ஈரோடு மண் டல செயலாளர் எம்.காளியப்பன் நிறைவுரையாற்றினார்.
15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை போக்சோ சட்டத்தில் 3 வாலிபர்கள் கைது
உதகை, செப்.14- குன்னூர் அருகே பெற்றோரை இழந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள சேலாஸ் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியின் தாய் மற்றும் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டனர். இதனால் அந்த சிறுமி அதேபகுதியிலுள்ள தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அந்த சிறுமி புதனன்று மாலை கடைக்கு செல்வதற்காக வெளியில் வந்துள்ளார். அப்போது அங்கு மதுபோதையிலிருந்த 3 வாலி பர்கள் அந்த சிறுமியை வலுக்கட்டாய மாக வனப்பகுதி அருகில் உள்ள தேயி லைத் தோட்டத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள், சிறுமியை மீட்டு, வாலிபர்களை பிடித்து தர்மஅடி கொடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் கொலக்கம்பை காவல் உதவி ஆய்வாளர் சோமசுந்தரம் தலை மையிலான காவல் துறையினர் அந்த வாலிபர்களை பிடித்து விசாரணை மேற் கொண்டனர். இதில், அவர்கள் உலிக் கல் அருகே உள்ள நெடிமந்து கிரா மத்தை சேர்ந்த சீமராஜ் குட்டன் (25) மற்றும் அவரது நண்பர்களான எமரால்டு முள்ளி மந்துவைச் சேர்ந்த முத்துராஜ் (25), உதகை கிளன் மார்கன் மந்து பகுதியைச் சேர்ந்த பொனிஸ் குட்டன் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதற்கிடையே சிறுமி பாலியல் வல்லுறவுக்குள்ளானதால், இந்த வழக்கு குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து குன்னூர் மகளிர் காவல் துறையினர், சிறுமியை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபர்கள் 3 பேரையும், கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி
ஈரோடு, செப்.14- நீட் தேர்வு எழுதிய ஈரோடு மாவட்ட அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 197 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு ஜுலை 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி களைச் சேர்ந்த 12,840 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4,447 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்டத் தில் அரசுப் பள்ளிகளில் படித்த 623 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். இதில் 197 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 31.62 என கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 41 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில், 16 பேர் தேர்ச்சி பெற் றுள்ளனர். இதில் 500 மதிப்பெண்ணுக்கு ஒருவர், 400க்கு மேல் இருவர், 300க்கு மேல் 5பேர், 200க்கு மேல் 26 பேர், 100க்கு மேல் 138 பேர், 93க்கு மேல் 25 பேர் பெற்றுள்ளனர். இதேபோல் சேலம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 1200க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் பங்கேற்றனர். அதில் 509 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். இதில் 400 மதிப்பெண்களுக்கு மேல் 6 பேர், 351 - 400 வரை 8 பேர், 301 - 350 வரை 15 பேர், 251 -300 வரை 27 பேர், 201 - 250 வரை 42 பேர், 151 - 200 வரை 107 பேர், 101 முதல் 150 வரை 211 பேர், 93 முதல் 100 மதிப்பெண்கள் வரை 93 பேர் என 509 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 162 மாணவர்கள் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேங்காய் ஏலம்
ஈரோடு, செப்.14- ஈரோடு மாவட்டம், சென்னி மலை அருகே உள்ள வெப் பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங் காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த விவசாயிகள் 1,640 தேங்காய்களை விற் பனைக்கு கொண்டு வந்த னர். இதில் ஒரு கிலோ ஒன் றுக்கு குறைந்தபட்ச விலை யாக 23 ரூபாய் 50 காசுக் கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 11 காசுக்கும், சரா சரி விலையாக 23 ரூபாய் 75 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 775 கிலோ எடை யுள்ள தேங்காய்கள் ரூ.18 ஆயிரத்து 428க்கு விற்பனை ஆனது.