சேலம், டிச.20- பயிர்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடியில் சேலம் மாவட் டத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் விவசாயி கள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற் கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலை யில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த 49 ஆயிரம் விவசாயிகள் விதிமீறல்கள் என்ற காரணத்தைக் கூறி அவர்களின் பயிர்கடன் தள்ளுபடி நிராகரிக்கப்பட்டுள்ளது. இத னைக் கண்டித்தும், அனைத்து பயிர்கடன் களை தள்ளுபடி செய்யக்கோரியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், சேலம் மாவட்ட விவசாயிகள் சங்கம், தமிழக விவ சாயிகள் பாதுகாப்பு சங்கம், ஐக்கிய விவ சாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங் களை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பயிர்கடன் தொகையை செலுத்த வேண்டும் என கூட்டுறவு அதிகாரிகள் தொடர்ந்து நெருக்கடி தருவதாக கூறிய விவசாயிகள், கடன் தள்ளுபடி செய்யும் வரை தொடர் போராட்டம் நடத்த உள்ளதாகவும், தெரி வித்தனர்.