districts

img

பேராசிரியர் காலிப்பணிடங்களை நிரப்ப இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

தாராபுரம், ஜூலை 4 - தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என இந்திய  மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் இரண்டு நாட்கள் மாணவர் அரங்க பயிற்சி முகாம்  தாராபுரத்தில் நடைபெற்றது.  இதில், பல்வேறு தலைப்புகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் செ.முத்துக் கண்ணன் மற்றும் ராமமூர்த்தி, ஆர்.மைதிலி, தூயவன் ஆகி யோர் கருத்துரையாற்றினர்.  இரண்டாம் நாள் நிகழ்வில் திருப்பூர் மாவட்ட சிறப்பு  பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த பேரவை கூட்டத் துக்கு மாவட்ட தலைவர் பிரவீன் குமார் தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது, மாநிலக்குழு உறுப் பினர் ஷாலினி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக் கூட்டத்தில் தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல் லூரிக்கு உடனடியாக கட்டடம் அமைத்து  பேராசிரியர் பணி யிடங்களை நிரப்ப வேண்டும். தாராபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலை வராக கல்கிராஜ், மாவட்ட செயலாளராக பிரவீன் குமார் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், இந்திய மாணவர்  சங்க மாநிலச் செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி உரை யாற்றினார். இதில், திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.