districts

img

வேலையிண்மையால் சாலையோர கடைகள் அதிகரிப்பு

நாமக்கல், மே 30- - எம்.பிரபாகரன் - வேலை இல்லா திண்டாட்டம் மற்றும் அதீத வாடகை, மின் கட்டண உயர்வு போன்ற கார ணங்களால், நாமக்கல் மாவட்டத் தில் சமீப காலமாக சாலையோர கடைகள் அதிகரித்து வருகிறது.  முன்பெல்லாம் புதிதாக ஒரு  தொழில் தொடங்க வேண்டுமெ னில் அதற்கு மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் அரசு  மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கி சேவைகள்,  மருத்துவமனை கள் உள்ளிட்ட பல்வேறு வணிகம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் செயல்படுகிறதா? என்பதை பொறுத்து தொழில் நடத்த விரும் புவர்கள், கடைகளை அமைக்க திட் டமிடுவார்கள். அதற்கேற்ப கடை யின் பரப்பளவு, இடவசதி, தேவை யான கடை அலங்காரம், வேலை  ஆட்கள் உள்ளிட்டவை முன்னமே  கனகச்சிதமாக திட்டமிடப்பட்டு, அதற்கேற்ற வகையில் சிறிய அள விலான உணவகம் முதல் பெரிய அளவிலான சூப்பர் மார்க்கெட் கடை வரை வைக்கப்படும். மாத இறுதியில் வரவு செலவு கணக்கு  பார்க்கப்பட்டு, கடை வாடகை, மின் சார கட்டணம், வேலையாட்கள் சம் பளம், தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களை வாங்குதல், தாங்கள் செய்த முதலீடு உள்ளிட்ட வற்றை கணக்கிட்டு அதற்கு மேல் வருபவற்றை வைத்து தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வருகின் றனர். ஆனால், தற்போது எப்போ தும் இல்லாத அளவிற்கு சூழல் மாறி உள்ளதால், கடை வாடகை அதிக ரிப்பு, மின்சார கட்டணம் அதிகரிப்பு என்கிற காரணங்களோடு, வேலை யின்மை அதிகரித்துள்ளதான் கார ணமாக நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலையோர  கடைகள் அதிகரித்து காணப்படுகி றது.  இது குறித்து ஈரோடு ராசிபுரம் சாலையில் கடை வைத்திருக்கும் காய்கறி கடை வியாபாரி சிவப் பிரகாசம் என்பவர் கூறியதாவது, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காய்கறி கடை வைத்து தொழில் செய்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கடை  வாடகை, மின்சார கட்டணம் எல் லாமே சீராக இருந்ததால், அதிக ளவு காய்கறிகளை வாங்கி ஸ்டாக்  வைத்து விற்பனை செய்து வந் தோம். அதிகாலை நேரத்தில் கடை களை திறக்கும் நாங்கள் காலை 9  மணி வரை பரபரப்பாக வியாபா ரத்தை செய்வோம். அதன் பிறகு மாலை மீண்டும் வியாபாரம் நடை பெறும். அதற்கேற்ற வகையில் வேலைகளை முறைப்படுத்தி செய்து வந்தோம். மாத இறுதியில் எல்லாம் போக மீதம் இருப்பதை வைத்து குடும்பம் நடத்தி வருகி றோம். ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நகரின்  வளர்ச்சி காரணமாக, கடை வாட கையும் கணிசமாக அதிகரித்துவிட் டது. மின்சார கட்டணமும் அதிகரித் துள்ளது. இதனால் போதிய லாபம் இல்லாத நிலை இருப்பதால் தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், முன்பெல்லாம் நல்ல காய்கறிகள் எங்கு கிடைத்தாலும் வாடிக்கையாளர்கள் தேடி தேடி வாங்குவார்கள். தற்போது நாங்கள் ஒரு கிலோ தக்காளியை ரூ.20க்கு  விற்பனை செய்தால் ஆன்லைனில் 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனை  செய்கிறார்கள். இப்படி ஒவ்வொரு  காய்கறியுமே நாங்கள் விற்பனை  செய்யும் விலைக்கும் ஆன்லை னில் விற்பனை செய்யும் விலைக் கும் ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை வித்தியாசம் வருவ தால், பலர் ஆன்லைன் மூலமாக அல்லது மிகப் பெரிய சூப்பர் மார்க் கெட் கடைகளில் பர்ச்சேஸ் செய்து  கொள்கிறார்கள். இதன் காரண மாகவும் எங்களுக்கு தொழில் பாதிப்பு ஏற்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் படித்து முடித்து விட்டு வேலைக்கு செல்வோரை காட்டிலும், சொந்த தொழில் தொடங்குவோர் அதிகமாக உள்ள னர். அதில் காய்கறி கடை அமைப் பவர்களும் கணிசமாக உள்ளதால் தொழில் போட்டி ஏற்படுகிறது, என் றார். மேலும் சில வியாபாரிகள் கூறு கையில், நிரந்தர வேலை என்று ஒன்று இல்லாமல் போய்விட்டது. அரசும் வேலை கொடுக்க மாட் டேன் என்கிறது. தனியார் நிறுவனங் களும் ஒப்பந்தக் கூலி ஆட் களையே தேடுகிறது. சொந்த தொழில் ஒன்றுதான் வழி என்கிற போது, ஆட்டோ ஓட்டலாம் அல்லது சாலையோரத்தில் கடை அமைத்து பிழைக்கலாம் என்கிற எண்ணம் அதிகரித்துள்ளது. ஆட் டோக்களும் தற்போது பெரிய ஓட்ட மில்லாமல் இருக்கிறது. ஆகவே சாலையோர கடைகளை அமைப் பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இது போக, எங்களுக்கு வாடகை, மின் கட்டணம் இரண்டு மட்டும்தான் இல்லை, மற்றபடி ஒன்றிய அரசு அரிசி, பருப்பு, எண்ணெய், செல் போன் உதிரி பாகங்கள், எலக்ட்ரா னிக் பொருட்கள் என மனிதன் அன் றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்குமே ஜிஎஸ்டி வரி  விதிப்பு செய்கிறார்கள். பொதுமக் களை நம்பியே நாங்களும் அத் தனை வரிகளை கட்டியே தொழில் களை நடத்தி வருகிறோம். ஆனால், ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களுமே, தவணை முறையி லும், குறைந்த விலையிலும் கிடைப்பதால் அனைத்து தரப்பின ருமே. தற்போது, ஆன்லைனில் பொருட்களை வாங்க ஆர்வம் காட் டுகின்றனர். ஒரு பக்கம் தொழில் நடத்த எங்களுக்கு வரிவிதிப்பு செய் யும் ஒன்றிய அரசு மற்றொரு பக்கம் ஆன்லைன் மூலமாக அனைத்து பொருட்களும் குறைந்த விலை யில் கிடைப்பதை தடை செய்யா மல் மௌனம் காக்கிறது. இதன் காரணமாகவும் பல  ஆண்டுகளாக பல்வேறு தொழில்க ளில் கோலோச்சியவர்கள். தற் போது, கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போய்விட்டனர். எல்லா வற்றுக்கும் ஒரு தீர்வு உண்டு என்ற  அடிப்படையிலே தொடர்ந்து நாங் கள் தொழிலை மேற்கொண்டு வரு கிறோம், என்றனர்.

;