திருப்பூர், ஜூலை 6 - தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் உற்பத்தி செய்யும் நூலுக்கு உரிய விலை கிடைக்காததால் நெருக்கடியைச் சந்திக் கும் மறுசுழற்சி (ஓ.இ.மில்) ஜவுளித் துறை கூட் டமைப்பினர் உற்பத்தி நிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். நூற்பாலைகளில் இருந்து வெளியேற்றப் படும் கழிவுப் பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் ஒ. இ. மில்கள் திருப்பூர், கரூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வருகின்றன. இந்த மில்களில் தின மும் 1400 டன் அளவுக்கு கலர் மற்றும் கிரே நூல் உற்பத்தி செய்கின்றன. இதனிடையே மின் கட்டண உயர்வு மற் றும் உற்பத்தி செய்யும் நூலுக்கு உரிய விலை கிடைக்காததால் நெருக்கடியைச் சந்திப்ப தாக ஓ.இ.மில் உரிமையாளர்கள் கூறுகின்ற னர். எனவே மின் கட்டணத்தைக் குறைப்பது டன், நூலுக்கு கட்டுபடியான விலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலி யுறுத்தி புதனன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங் கியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம், மங்கலம், சோமனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மறுசுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பு (ஓ.இ. மில்) சார்பில் புதனன்று மங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத் தில், கடும் நெருக்கடியை சந்தித்து வருவ தால் தமிழக முழுவதும் உள்ள 400 ஓ .இ மில்க ளில் இன்று முதல் முழு உற்பத்தி நிறுத்தம் போராட்டத்தை துவங்கி உள்ளதாகவும், மின் கட்டண உயர்வு மற்றும் உற்பத்தி செய்யும் நூலுக்கு உரிய விலை வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற் போது இந்த வேலை நிறுத்த போராட்டம் கார ணமாக நான்கு மாவட்டங்களிலும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். நல்ல தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.