districts

img

போதை பொருட்கள் கடத்தல் அதிகரிப்பு தடுக்க உதகையில் சிறப்பு பிரிவு உருவாக்கம்

உதகை, செப்.14- நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட் கள் கடத்தல் அதிகரித்து வருகிற நிலையில் இதனை தடுக்க சிறப்பு பிரிவு உருவாக்கப் பட்டு உள்ளது. கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களிலி ருந்து ஆயுதங்கள் மற்றும் போதை பொருட் கள் நீலகிரி வழியாக கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க நீலகிரியில் தற்போது 10 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 36 காவ லர்கள் அடங்கிய ஒமேகா-3 என்ற பெயரில் நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு கூடுதலாக உரு வாக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் மோகன் நவாஸ் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட நக்சல் தடுப்பு பிரிவினர் நக்சல் தடுப்பு வேட்டையில் மட்டும் ஈடுபட்டனர். ஆனால், தற்போது உரு வாக்கப்பட்டுள்ள இந்த அணியினர் போதை பொருட்கள் கடத்தலை தடுப்பதற்காக சோத னைச்சாவடிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு ஆயுதங் களை கையாளுதல், மனவலிமை அதிக ரிப்பு, வாகன சோதனையில் உள்ள நுணுக் கங்கள், இடர்பாடான சூழ்நிலையை எதிர் கொள்வது மற்றும் பொதுமக்களிடம் எவ் வாறு நடந்து கொள்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.