districts

img

சூரிய மின் விளக்கு கல்வெட்டு பி.ஆர்.நடராஜன் எம்.பி., திறந்து வைப்பு

திருப்பூர், டிச.27- ரூ.3 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட் டுள்ள உயர்மட்ட சூரிய ஒளி மின் விளக்கு கல்வெட்டைப் நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செவ்வாயன்று திறந்து  வைத்தார். திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் உள்ள சின்ன  காளி பாளையத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில்  சூரிய ஒளியில் இயங்கும் உயர்  மட்ட மின் விளக்கு ரூ.3 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப் பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதை ஊராட்சி மன்றத் தலை வர் க.கணேசன் தலைமையில், ஊராட்சி மன்ற துணைத் தலை வர் எஸ்.பரமசிவம் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்  பி.ஆர்.நடராஜன் கல்வெட்டை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், தெற்கு  ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, விவசாய சங்க மாநிலத்  தலைவர் சின்னகாளிபாளையம் ஈஸ்வரன் உட்பட பலர் பங் கேற்றனர்.