தருமபுரி, செப்.9- அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்ப்புக்கு தடை விதிக்க வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, காரிமங்கலம் வட்டங் களில் உள்ள பல்வேறு பகுதிகளில் 30 மேற்பட்ட மீன் பண்ணைகள் உள்ளன. இங்கு அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் அதிக ளவில் வளர்க்கப்படுகின்றன. இந்த மீன்களை உள்ளூர் மற்றும் பிற மாநி லங்களுக்கு விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள், மனிதர்களுக்கு மட்டுமல்லாது மற்ற நீர்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிக்க கூடியது. இந்த மீன்கள், தன்னுடன் வாழும் மற்ற வகை மீன்களை ஒட்டுமொத்த மாக அழித்துவிடும் தன்மை உடையது. இதனை சாப்பிடுவதால் வயிற்று உபாதைகள், உடல்அரிப்பு, சொரியாசிஸ் போன்ற நோய்கள் வருவதாக தெரிவிக்கின்றனர். ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை யாரும் வளர்க்க கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப் பித்துள்ளது. இருந்தபோதும் சிலர் சட்டவிரோதமாக மீன் பண்ணை களில் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் களை வளர்த்து ஏற்றுமதி செய்து வருகின்றனர் எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு தடை செய்யப்பட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை முழுமையாக அழிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.