districts

img

பிஎஸ்என்எல் 4 ஜி சேவைக்கு முட்டுக்கட்டை போடுவதை எதிர்த்து மனித சங்கிலி

திருப்பூர், செப். 14 - மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு பிஎஸ்என்எல் நிறுவனம்  4 ஜி சேவை தருவதற்கு முட்டுக்கட்டை  போடுவதை எதிர்த்து பிஎஸ்என்எல் சங் கங்கள் மனித சங்கிலி போராட்டம் நடத் தினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், அகில இந்திய தொலைத் தொடர்பு பி எஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் மற்றும்  தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந் தத் தொழிலாளர் சங்கம் ஆகிய மூன்று  சங்கங்கள் இணைந்து புதன்கிழமை  திருப்பூர் மெயின் தொலைபேசி நிலை யம் முன்பாக இப்போராட்டத்தை நடத்தி னர். ஒன்றிய அரசு, பொதுத்துறை சொத் துகளை விற்பனை செய்யக் கூடாது,  தேசிய பணமாக்கல் திட்டம் என்று  சொல்லி 14 ஆயிரத்து 917 பிஎஸ்என்எல் டவர்களை தனியாருக்குத் தாரை வார்ப்பதை எதிர்த்தும், பிஎஸ்என்எல் கண்ணாடி இழைக் கேபிள்களை தனி யாருக்கு விடுவதை எதிர்த்தும், பிஎஸ் என்எல் நிறுவனம் 4ஜி சேவை தருவ தற்கு முட்டுக்கட்டை போடக் கூடாது, உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன. இப்போராட்டத்துக்கு ஓய்வூ தியர் சங்கத் தலைவர் பா.சௌந்தர பாண்டியன் தலைமை வகித்தார்.  முன்னாள் அதிகாரி வி.பொன்னுசாமி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தைச் சேர்நத் எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர்  வாழ்த்திப் பேசினர். இதில், ஏராள மான பிஎஸ்என்எல் ஊழியர்கள் மனித  சங்கிலி அமைப்பில் கலந்து கொண்ட னர். நிறைவாக கிளைச் செயலாளர் குமரவேல் நன்றி கூறினார்.