அவிநாசி,டிச.5- காய்கறி விலை உயர்வினால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கி யுள்ளதாக இல்லத்தரசிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் வேத னையுடன் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் கடந்த இரு மாதங்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக தமிழகத்தில் காய்கறி உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழக சந்தைகளுக்கு கொண்டு வரப்பெறும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்தும் சரிந்துள்ளது. இதன் காரணமாக காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தோர் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இதுதொடர்பாக அவிநாசியைச் சேர்ந்த இல்லத்தரசிகள் சிலர் கூறுகையில்,
திலகவதி : தக்காளி விலை 120, பீக்கங்காய் கிலோ 100 ரூபாய், வெங்காயம் 50ரூபாய் வரை விற்பனையாகிறது. சமையல் செய்கிற பொருட்களில் தக்காளியை பெரும்பகுதி தவிர்க்கவே இயலாது. அதேபோல் வெங்காயத்தையும் தவிர்க்க முடியாது. இந்த காய்கறி களின் கடுமையான விலை உயர் வால் பெரும்பகுதி வருவாய், இதற்கே செலவிட வேண்டி யிருக்கிறது. இதனால் மருத்துவ செலவுகள் உள்ளிட்ட இதர செலவுகளை ஈடு செய்ய முடி வதில்லை. ஆகவே, அரசாங்கம் காய்கறி விலைகளை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை வேண்டும் என தெரிவித்தார். சித்ரா அசைவ உணவுகளுக்கு பெரிதும் பயன்படுத்துவது வெங்காயம் மற்றும் தக்காளி போன்றவை. இதன் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதனுடன் இறைச்சியை சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டுமானால் வழக்கமான செலவை காட்டிலும் இரண்டு,
மூன்று மடங்கு கூடுதலாகிறது. இதனால் அசைவ சாப்பாடு என்பதே அரிதிலும் அரிதாக மாறிவிட்டது. இதேபோல், தக்காளி ரசம் வைப்பதையே நிறுத்தி விட்டோம். வாரத்தில் ஏழு நாட்களும் தக்காளி, வெங்காயம் இல்லாத குழம்பை வைத்து எப்படி ஓட்டுவது என்றே தெரியவில்லை என வேதனையுடன் தெரிவிக்கிறார். பழனிச்சாமி விவசாயி பழனிச்சாமி என்பவர் கூறுகையில், தமிழகத்தில் உற்பத்தி யாகாத காய்கறிகள் எதுவும் கிடையாது. ஆனால், கடந்த ஒன்றரை மாதங்களாக பெய்து வரும் கடுமை யான மழையால் இலைகள் மட்டுமே துளிர்விடுகிறது. காய்கள் உற்பத்தி யாக பூக்கள் வருவதில்லை. இதற்கும், திருப்பூர் மாவட்டங்களில் வெங்காய விளைச்சல் அதிகமாக இருக்கும். அதுவே தற்பொழுது தத்தளித்து வருகிறது. அதுமட்டுமின்றி தட்டைப்பயிறு போன்றவைகளின் விளைச்சலும் பாதித்துள்ளது. ஆகவே, மழைப்பொழிவு நிற்க வேண்டும். அப்போதுதான், காய்கறி விலைகள் குறையும் என தெரிவித்தார். வேலுச்சாமி விவசாயி வேலுச்சாமி என்பவர் கூறுகையில்,
கடந்த சிலவருடங்களாக பருவ நிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கார்த்திகை, மார்கழியில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். ஆனால், தற்போது மழை பெய்து வருகிறது. இந்த இரண்டு மாதங்களில் பருவநிலை மாற்றம் ஏற்படாமல் இருந்தால் வெங்காயம், தக்காளி, வாழை போன்றவை பயிரிடுவோம். தற்பொழுது மழை பொழிவு காரணமாக எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை. அதேநேரம் மழை நின்றபிறகு பயிரிட்டால் உற்பத்தியாகும் காய்கறிகளுக்கு நியாயமான விலையும் கிடைக்காது. பொதுவாகவே விவசாயிகள் வாழ் வாதாரம் என்பதே கேள்விக் குறியாகியுள்ளது என வேதனையுடன் தெரிவிக்கிறார். இதேபோல், உணவக உரிமை யாளர் ஒருவர் கூறுகையில், பொது வாகவே திருப்பூரில் நூல் விலை உயர்வு காரணமாக அனைத்து தொழில்களும் மந்த நிலையில் தான் இருக்கிறது. தமிழகம், ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் பெரும் மழையின் காரணமாக காய்கறி வரத்து குறைந்து, விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் கிடைக்கின்ற காய்கறிகளை வைத்து வாடிக்கையாளர்களை திருப்தி செய்கிறோம். இது ஒருபுறமிருக்க சமையல் எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. இப்படியே சென்றால் ஓட்டல் தொழிலை நடத்துவதே பெரும் போராட்டமாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார். -மா.அருண் அவிநாசி