districts

img

கோவையில் அதிவிரைவு படை கொடி அணிவகுப்பு

 கோவை, செப்.23- கோவையில் அதிவிரைவு படை யின் சார்பில் வெள்ளியன்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கோவையில் சமீப காலமாக அசா தாரண சூழல் நிலவிவருகிறது. இந் நிலையில் காந்திபுரத்தில் ‘ரேபிட் ஆக்ஸன் ஃபோர்ஸ்’ பாதுகாப்பு படை யினர் கொடி அணிவகுப்பு மேற் கொண்டனர். இந்த அணிவகுப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை யினர் மக்கள் அதிகம் கூடும் பகுதியில்  நடத்தினர். காந்திபுரம்- திருவள்ளுவர் பேருந்து  நிலையத்தில் தொடங்கி கிராஸ் கட் ரோடு வழியாக ராம்நகர் சென்று மீண்டும் காந்திபுரம் வந்தடைந்தன. முன்னதாக, மாநகர காவல் ஆணை யாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர் களிடம் கூறியதாவது, கோவையில் சமீ பத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங் களில் ஈடுபட்டவர்களை கூடிய விரை வில் கைது செய்வோம் என தெரிவித் தார். மேலும், செக்போஸ்ட் இல்லாத இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க திட்டம் உள்ளது. யாரேனும் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடுமை யான பிரிவுகளில் வழக்கு பதிவு செய் யப்படும் என்றார். ஒவ்வொரு குற்ற சம்பவத்திற்கும்  மூன்று தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய நபர் களை தொடர்ந்து கண்காணித்து வரு கிறோம் என தெரிவித்தார்.

;