districts

img

நீலகிரியில் கன மழையால் வீடுகள் சேதம்

ஊட்டி, ஜூலை 8- நீலகிரியில் கடந்த 5 நாட்களில் பெய்த மழைக்கு 10 வீடுகள் சேதம்  அடைந்தன. 22 இடங்களில் மரங் கள் முறிந்து விழுந்தன. நீலகிரி மற்றும் கோவை உள் ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கடந்த 3ஆம் தேதி  முதல் 7ஆம் தேதி வரை 5 நாட் களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு  உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன் படி, நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றை சமாளிக்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 43 பேரும், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு படையினர் 32 பேரும் ஊட்டி வந்துள்ளனர்.  இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி 4ஆம்  தேதி நள்ளிரவு முதல் மாவட்டம்  முழுவதும் பல்வேறு இடங்களில்  பலத்த மழை பெய்து வருகிறது.  இதனால் நீலகிரியில் வெள்ளி யன்று 6 தாலுகாக்களுக்கும், சனி யன்று 4 தாலுகாக்களில் பள்ளி களுக்கு விடுமுறை அறிவித்து ஆட் சியர் ச.பா.அம்ரித் உத்தரவிட்டார். இந்நிலையில், நீலகிரி மாவட்டம் மற்றும் அவலாஞ்சியில் அதிகளவாக 20 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய  6 தாலுகாக்களில் உள்ள சாலை களில் 22 மரங்கள் சாய்ந்து விழுந்தன. மேலும் 9 வீடுகள் பாதி  அளவு, ஒரு வீடு முற்றிலும் என 10  வீடுகள் சேதமடைந்தன. வீடுகள்  சேதத்திற்கு ரூ.4100 உடனடியாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. ஒருவர் படுகாயம் அடைந்தார். இரு இடங்களில் தடுப்புச் சுவர் சேதமடைந்தன.  வெள்ளியன்று மாவட்டம் முழு வதும் குளிரான காலநிலை மற்றும்  கடும் பனிமூட்டம் நிலவியது. இத னால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென் றனர். குன்னூர், கோத்தகிரி தாலுகா வில் உள்ள பள்ளிகளுக்கு விடு முறை அளிக்கப்பட்டது. இதற்கி டையே மழை  சனிக்கிழமை முதல்  குறைய வாய்ப்பு இருப்பதாகவும், வழக்கமான தென்மேற்கு பருவ மழை மட்டும் இருக்கும் எனவும்  வானிலை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

அவிலாஞ்சியில் 9 செ.மீ மழை

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 4 - வது நாளாக பெய்து  வரும் கன மழை. அதிக பட்சமாக  அவலாஞ்சி, பந்தலூர் பகுதிகளில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.  பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் அதிகரித்து அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.  தென்மேற்கு பருவமழை பொய்த்திருந்த நிலையில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படும் அவலாஞ்சி, எமரால்டு, அப்பர்  பவானி, குந்தா உள்ளிட்ட 7 அணை களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டிருந்தது. இதனால், மின் உற்பத்தி பாதிக் கும் சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இந் நிலையில் கடந்த நான்கு நாட் களாக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை யின் தாக்கம் அதிகரித்து காணப்படு கிறது. குறிப்பாக மாவட்டத்தில் அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் அவலாஞ்சி, பந்தலூர் பகுதியில் 9 செ.மீ மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து உற்பத்தியாகும் நீரானது ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடு கிறது. இதனால் அவலாஞ்சி அணைக்கு நீர்வரத்து சற்று அதிக மாகியுள்ளது. மேலும் தென் மேற்கு பருவமழை இப்பகுதியில் தொடர்ந்து பெய்தால் அவலாஞ்சி,  எமரால்டு, அப்பர் பவானி அணை களுக்கு நீர்வரத்து அதிகரிப்ப தோடு மின் உற்பத்தியில் பாதிக் காத சூழ்நிலை ஏற்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

;