districts

img

கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

அலட்சியத்தில் கன்னங்குறிச்சி பேரூராட்சி தலைவர்

சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட 3 ,4 ஆவது   வார்டு பகுதியில் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. உடனடி யாக எந்த நிவாரண பணிகளும் மேற்கொள்ளவில்லை, பொது மக்கள் முன்நின்று தண்ணீரை வெளியேற்றினர். வெள்ள நீர் சூழ்ந் துள்ளதை அப்பகுதியின் பேரூராட்சி தலைவர் குபேந்திரனு-க்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக மீட்பு பணிகள் செய்யவில்லை. அதன் பின்பு நீண்ட நேரம் கழித்து பேரூராட்சி தலைவர் மற்றும் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவசரத்தின் தேவை  உணர்ந்து, பொதுமக்களின் அவதியை உணர்ந்து செயல்பாடாமல் கன்னங்குறிச்சி பேரூராட்சி அலட்சியப்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

சேலம், செப்.8- சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் மாநகர குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் கடந்த  ஒரு வாரமாக கனமழை பெய்து  வருகிறது. ஏற்காடு மலைப்பகுதி யில் கனமழை பொழிந்து வருவ தால் அங்கிருந்து வரும் வெள்ள  நீர் மாநகர குடியிருப்பு பகுதிகளுக் குள் புகுந்துள்ளது. இதனால், பொதுமக்கள் குடியிருக்க முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் சேலம் மாநகரம், 16 ஆவது கோட்டம், கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதி தாழ் வாக இருப்பதால் அங்கு உள்ள  குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்தது.  லீ பஜார் ஓடை அருகே  வசிக்கும் மக்கள் வெள்ளத்தில் சிக்கியிருக்கும் தகவலறிந்த மார்க் சிஸ்ட் கட்சியினர் அதிகாரிகளை வர வழைத்து தீயணைப்பு படையின் மூலம் படகு ஏற்பாடு செய்து மீட்ட னர். இதேபோல் சேலம் மாநகர், 26  ஆவது கோட்டம், பால் தெரு, டாக்டர் ரத்தனம் தெரு உள்ளிட்ட பகுதியில் வெள்ளம் புகுந்து, மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வீடு களின் மொட்டை மாடிக்கு சென்ற னர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சி யின் சேலம் வடக்கு மாநகர நிவாரண குழுவினர் மற்றும் முன்னணி ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட அதி காரிகளுக்கு தகவல் கொடுத்து வரவழைத்து ஜேசிபி இயந்திரம் மூலம் பாலத்தை உடைத்து வடி கால் கால்வாய் ஏற்படுத்தினர். தொடர்ந்து தண்ணீர் வடிய ஏற்பாடு செய்ததோடு, பசியிலிருந்த குழந் தைகள், பெண்கள் மற்றும் முதி யோர்களுக்கு உணவு, பிஸ்கட், பிரெட், தண்ணீர் பாட்டில்கள் கொடுத்து உதவி வருகின்றனர்.

;